எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


4 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -16

கொசுக்களுக்கு வெண்டக்காய்
ரொம்ப பிடிக்குமோ!!
.
.
.
.
.
.
என் விரலை மட்டும் ஏன்
இந்த கடி கடிக்குது!!

படம்

 

திடுதிப்பென்று வீட்டினுள் வருவார்
இந்த அழையா விருந்தாளி
திருப்பி வீட்டை விட்டு கிளம்புதற்கு முன்
வீட்டில் உள்ள அத்தனை பேரையும்
ஒருத்தர் மாத்தி ஒருத்தராய் கட்டி
அரவணைத்து பிரியா விடை குடுத்தே
செல்வார் இந்த பாசக்காரர்
.
.
.
.
.Viral Infection!!

படம்

 

யாரொருவர் மிகுந்த துயரத்தில்
விக்கி விக்கி அழுதாலும்
நீங்கள் அவருடைய துயரை
துடைக்க பெரியதாக எதுவும்
செய்யாவிட்டாலும், ஒரு டம்ளர்
தண்ணியாவது குடிக்க குடுங்கள்
அவர் விக்கலை நிறுத்துவதற்கு!!

படம்

ஒரு திரைப்படத்தை கண்டு
முடித்த பின்னரும் மூன்று 
நாட்கள் வரை தூக்கம் வரவில்லை
என்றால் அது திகில் படம்..
அதே தூக்கம் ஒரு திரைப்படத்தை
பார்த்து கொண்டிருக்கும் பொழுதே
மூன்று தடவை வந்தால்
அது துயில் படம்!!

படம்


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -14

எங்கோ இருக்கும் நெசவாளி
தறியில் பட்டு நூல் கோர்க்கும்பொழுதே
இந்த சேலை இந்த பெண்ணுக்கு தான்
என்று நினைத்து கொண்டே நெய்வார்..
கொஞ்சம் மெதுவா சொல்லும்மா திரிஷா
நெசவாளியின் வீட்டுக்காரம்மவுக்கு 
கேட்டுட போவுது!!

படம்

எந்த ஒரு கல்யாண வீட்டுக்கு
சென்றாலும் அங்கே வரும் அழகான
மூக்கும் முழியுமாய் வரும் திருமதிகளை
பார்த்து விட்டு ‘இந்த பெண்ணை எனக்கு தான்
முதலில் பார்த்தார்கள்’ என்று மனைவியிடம்
பெருமையடிக்கும் ஆண்களே….
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் மனைவி அந்த பெண்ணை 
பார்த்து பெருமூச்சு விட்டு 
கண்டிப்பாக மனதினுள் எண்ணுவாள்
தப்பிச்சிட்டியேடி!!!

படம்

 

பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி விட
இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி
இருக்கும் போது தான் ஃபோன் வரும்..
கண்ட நேரத்தில யாருனு எரிச்சலோட
நீ எடுடா என்று பையனை கை நீட்ட
அவனும் ஃபோனை எடுத்து ரிசீவரை
காதில் வைத்து விட்டு
பொய்யான வருத்தம்
குரலில் தொணிக்க சொன்னான் 
‘என்னது ஸ்கூல் லேதா???’ 
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான்
ரிசீவரை பிடுங்கி காதில் வைக்க
எவரோ ‘விஷ்ணு லேதா? ‘நு கேட்டு
கொண்டு இருந்தார்…..
அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு!!

படம்

 

‘பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க
இல்லையா டொரேமான் ஸ்டிக்கர்
வாங்கிடுங்க…
எங்க கிளாஸ் பொண்ணுங்களுக்கு
இந்த இரண்டும் தான் புடிக்கும்’
ரக்சா பந்தனை இன்று ஸ்கூலில்
கொண்டாட போகும் என் பையன்!!

படம்

யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல்
இருப்பதற்க்காக அணிய படுகின்ற
உடைகள் கூட பளிச் பளிச் என்று
கண்ணை சிமிட்டி நம்மை திரும்பி
பார்க்க வைக்கிறது
.
.
.
.
வெள்ளை நிற கற்கள் பதிக்கபட்டு
அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட
பர்தாக்கள்!!!

படம்

 


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -12

வாழ்க்கையில் சூடு பட்ட நெஞ்சமும்
டீயால் சூடு பட்ட நாக்கும்
சுவைகளை அறிய முற்படுவதில்லை!!

படம்

 

ஆவின் கண்கள் இவ்வளவு அழகா என்று
ஆவென்று வாயை பிளந்து வியந்தால்
அது Bulls Eye!!

படம்

 

பருப்பு வெந்து முடிந்த கையோடு
சூட்டோடு சூடாக மசித்து விட்டு
விடுதல் நலம் இல்லையேல்
எவ்வளவு திறமையாக சாம்பார்
வைத்தாலும் பருப்பு தனித்தனியாக
முழித்து கொண்டு தான் நிற்கும்…
படம் எடுத்து முடிந்த கையோடு
சூட்டோடு சூடாய் ரீலீஸ் ஆக
முடியாமல் தடை செய்யபட்டு பின்பு
வெளி வருகின்ற திரைபடங்கள் போல!!

படம்

 

இளமை கொப்பளிக்கும்
முகப்பருக்களுக்கு
பாதுகாவலாய்
கருப்பு பூனை படைகள்
.
.
.
.
.
.
Black Heads!!

 

நம்ம ஆசை ஆசையா
திருப்பி திருப்பி 
எத்தனவாட்டி
கால் செய்தாலும் 
ஃபோனை கையில 
எடுப்பேனா என்று
அடம் பிடிப்பவர்
.
.
.
.
.
கேஸ் புக் செய்பவர்!!

படம்

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் 
ஒரு காலம் இருக்குது என்று
சொன்னால் புரியவா போகுது
.
.
.
.
.

பகலிலும் என்னை சுற்றி சுற்றி
கடிக்கும் மரமண்டை கொசுக்கள்!!

படம்

 

 


5 பின்னூட்டங்கள்

சிரிக்கலாம் வாங்க- 6

படம்

ஒண்ணு ரெண்டு மூணு நாலு நாலுக்கப்புரம்
கீழ இருக்கிர நாலு பீட கீழ இறக்கிரனும்
அப்புறம் மேல இருக்கிர பீட கீழ இறக்கிரனும்,
அடுத்து ஆறு ஏழு எட்டு ஒன்பது ஒன்பதுக்கப்புரம்
திரும்ப இந்த நாலு பீடையும் கீழ இறக்கிரனும்
அப்புரம் மேல இருக்கிற பீட மேல தள்ளிரனும்…
டேய் டேய் ப்ளீஸ் டா, விட்டிடு டா..
அம்மாவுக்கு நாக்கு தள்ளிரும் போலயே டா..
இப்படிதான் ஒவ்வொரு நாள் சாயுங்காலமும்
பையன் என் உசுர வாங்குவான்
ABACUS CLASS எடுக்கரேங்கிற பேர்ல!

abacus

சோம்பேறித்தனமான நேரங்களில்
கடிகாரம் முன்னை விட
சிறிது வேகமாய் ஓடுகிறதோ
என்று மனதில் ஒரு ஐயம் தோன்றினால்
அது இயற்கை தான்!!

Runningclock

 

 

T.B
W.B
S.T
DICT
C.W
H.W
2 T.S
.
.

மிஸ்சுக்கும் அம்மாவுக்கும்
மட்டுமே புரிந்த
சங்கேத வார்த்தைகள்
ஸ்கூல் டைரியில்!!

images (1)

குழம்பு கொதிக்கையில்
ஆளை தூக்கும் வாசனை அளித்து
சுவையை நாக்கில் நர்த்தனம் புரிய வைக்கும்
மசாலா பொடி வகைகள்
வெறுமனே தின்று பார்க்கும் போது
மண் போல் சுவை தருவது
ஆச்சரியம் அளிக்கும் உண்மை!!

images (2)

சாப்பிட்டு கொண்டே
செய்தி தாள் படிக்கும்
கெட்ட பழக்கத்தை
இன்றோடு விட்டொழித்தேன்
Paradontax ToothPaste முதல் பக்க ADக்கு
என்னுடைய நன்றிகள்

spit


7 பின்னூட்டங்கள்

சிரிக்கலாம் வாங்க-5

laughing

இமை மூடி திறப்பதற்குள்,
மீண்டும் அது நிகழ்ந்துவிட்டிருந்தது,
மோசமாய் கசங்கி, ஈரமாய், பழுப்பேரிய நிறத்தில்,
இருந்த சண்டே மேகசின் பேப்பரை,
கையில் பிடித்தவாறு,ஙே!! என்று விழிக்க,
ஒரு நொடி முன் ,ஒடி வந்து,
கழுத்தை இருக்க கட்டிய
கடைகுட்டி பையன்,
டீ கொட்டியது பத்தாது என்று,
அன்பையும் சேர்த்து கொட்டி கொண்டிருந்தான்,
என் கன்னத்தில் !!

 

சட்னி அரைப்பதற்க்காக,
ஓட விட்ட ,
மிக்ஸ்யின் திடீர் ,
அலறல் சத்தம் கேட்டு,
மறைந்து இருந்த,
இடத்தை விட்டு,
உயிரை கையில்,
பிடித்து கொண்டு ,
திடு திடுவென்று,
ஜன்னல் பக்கமாய்,
ஓடிய மரபல்லியை,
பார்த்து, நானும்,
வீ ல்……………………
என்று அலறி கொண்டே ஓடினேன்!!!

 

புதுசா இருக்கும் போது,
அலுங்காம, குலுங்காம,
ரொம்பவும் சூதானமாய்,
கையாளப்படும் பாத்திரங்கள்,
கொஞ்சம் ஈ…… என்று,
பல் இளித்தவுடன்,
டமால், டுமீல் என்று,
கையாளப்படுவது,
சமயலறையில்,
மறைந்திருக்கும்,
கசப்பான உண்மையில் ஒன்று!

 

இந்த திங்கட்கிழமை எல்லாம்,
எதுக்கு தான் வருதோ,
பாசக்காரங்க எல்லாம்,
பகையாளிகளா மாறிடறாங்க…
எட்டு மணிக்குள்,
ஸ்கூலுக்கு கிளம்பும் என் பிள்ளைகள்!!