எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சோப்பு ஒரு சிறப்பு பார்வை

4 பின்னூட்டங்கள்

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் என்ற பெயரில் புதிய தளம் ஆரம்பித்திருக்கிறேன்! இதில் எளிய தமிழில் அறிவியலை யாவரும் புரிந்து கொள்ளும் படியாக பதிவுகளை பதிந்து கொண்டிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள் நண்பர்களே…

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்

images

சோப்பு பத்தி பேச என்ன இருக்கு?? இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. குளியல் சோப்பு , கை கழுவதற்கு என்று தனியாக சோப்பு , முகம் கழுவுவதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியே கடைகளில் விற்கபடுகிறது. இந்த சோப்புகள் என்னவோ நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மை தான்.. ஆனால் விளம்பரத்தில் சொல்வது போல் எல்லா சோப்புகளும் 99.9% கிருமிகளை அழிப்பது இல்லை ! பொதுவாக சோப்புகள் இயற்கையாக விளையும் காய்கறி கொழுப்புகள் மற்றும் எண்ணெயிலிருந்து தயாரிக்க படுகின்றன… அவை ரொம்பவே சுத்தமானது.

soap

வெறுமனே தண்ணீர் வைத்து கைகளை கழுவும் போது கைகள் சுத்தமாவது இல்லை! பாக்டீரியா போன்ற கிருமிகள் நம் கைகளில் ஒட்டி கொண்டு தான் இருக்கும். அடுத்து நாம் சாப்பிடும் போது அக்கிருமிகள் நம் கைகளில் இருந்து வாய்க்கு சென்று விடும் வாய்ப்புகள் அதிகம். சாதாரண சோப்புகள் கூட கிருமிகளை விரட்டும் அதனை ஒழுங்காக உபயோகிக்கும் வழிதனை அறிந்து கொண்டால்..   சோப்பு போட்டு கைகளை நன்கு தேய்த்து   பின் ஓடும் தண்ணீரில் கைகளை கழுவுவது நலம் பயக்கும்.. அதன் பின்னே நல்ல காய்ந்த  சுத்தமான  துண்டில் கைகளை துடைத்து கொள்ளும் போது ஓரளவு சுத்தமாகும். உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அதற்கு முன்னே நல்ல தரமான கிருமி நாசினிகள் உடைய சோப்பை  பயன்படுத்தும் போது கிருமிகள் முழுவதும் அழிந்து விடுகின்றன. சோப்பு வழங்கு…

View original post 410 more words

4 thoughts on “சோப்பு ஒரு சிறப்பு பார்வை

  1. அட சோப்பு பற்றி இத்தனை விஷயங்களா? ஆச்சர்யமாக உள்ளதே தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் மஹா

  2. மஹா நுணுக்கமான விஷயங்களைப் பார்த்து மிக்க ஸ,ந்தோஷம். இம்மாதிரி பல விஷயங்கள் எல்லோரும் எதிர்பார்த்து பாராட்டுவார்கள். பிடி, என்னுடைய பாராட்டுதலையும், அன்பையும். அன்புடன்

பின்னூட்டமொன்றை இடுக