எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


10 பின்னூட்டங்கள்

பதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்

மரியாதைக்குரிய பதிவுலக நண்பர்களுக்கும் , வாசக பெருமக்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்! இது என் நூறாவது பதிவாக அமைந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.. இந்த பொன்னான நாளில் என்னையும் ஒரு எழுத்தாளராக மதித்து, ஊக்குவித்து வந்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூற கடமை பட்டிருக்கிறேன். என்னை முதன் முதலில் கண்டு கொண்டு இடைவிடாது ஊக்குவித்த ரஞ்சனி அம்மா  http://pullikkolam.wordpress.com/ , கவிஞர் ரூபன் அண்ணா அவர்கள்  http://2008rupan.wordpress.com/ , அன்பின் மறுஉருவம் காமாட்சி அம்மா https://chollukireen.wordpress.com/, கவிதாயினி சகோதரி வேதா அவர்கள் http://kovaikkavi.wordpress.com/, மதிப்பிற்குரிய அண்ணன் பாண்டியன் அவர்கள் http://kadaisibench.wordpress.com/, நல்வழி காட்டும் ராஜலட்சுமிபரமசிவம் மேடம் http://rajalakshmiparamasivam.blogspot.com/, நம் பாரத பாரம்பரியத்தை, சம்பிரதாயங்கள் , புதிது புதிதாய் செய்திகள் என்று ஆயிரம் பதிவு பதித்த விஜிகுமாரி மேடம்  https://chinnuadhithya.wordpress.com/ , நண்பர் ஆறுமுகம் சார் https://aarumugamayyasamy.wordpress.com/, நம் பாரம்பரிய சமையலை உலகறிய செய்து வெற்றி கொடி நட்டிய மதராசி அவர்கள் http://madraasi.com/, மதிப்பும் மரியாதைக்கும் உரிய டாக்டர் முருகானந்தம் அவர்கள்  http://hainalama.wordpress.com/ , தமிழை பேணி பாதுகாக்கும் யாழ்பாவணன் ஐயா அவர்களுக்கும் http://yarlpavanan.wordpress.com/, என் பிறந்த ஊர்க்காரரும் இணைய சித்தர் என்று பதிவுலக நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் திண்டுக்கல்  தனபாலன் சார் http://dindiguldhanabalan.blogspot.com/ அவர்களுக்கும், இனிய சித்ரா அக்கா http://chitrasundar5.wordpress.com/ அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் !

இன்று இந்த பதிவை பதிய முக்கிய காரணம் என் புதிய வோர்ட்ப்ரெஸ் தளத்தை அறிமுகம் செய்வதற்காக.. தளத்தின் முகவரி

http://mahalukshmiv.wordpress.com/

தளத்தின் பெயர் : இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்

இது என் நெடு நாளைய கனவு! அறிவியல் சார்ந்த பதிவுகளை எளிய தமிழில் பாமரருக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கவே இந்த தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன்… நிறைய பதிவுகளை பதித்து நான் படித்த படிப்புக்கும், என் தாய் மொழியாம் தமிழுக்கும் பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கையோடு தொடங்குகிறேன்… உங்கள் அனைவரின் மேலான ஆதரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கிறேன்! அத்தளத்தில் என் முதல் பதிவு நான் படித்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் படிப்பை சார்ந்தது. அந்த பதிவின் முகவரி இதோ ,

http://mahalukshmiv.wordpress.com/2014/12/19/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D/

images (5)