எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


10 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -51

களுக் என்று ஆரம்பத்தில் சிரித்தவரை
பார்த்து விவரம் ஏதும் அறியாமலேயே
குபுக் என்று வாய் விட்டு சிரிப்பவர்களுக்கே
நறுக் என்று உச்சந்தலையில் கொட்டப்படும்

How-to-Laugh-Without-Anyone-Noticing

 

கொசு வலை மட்டும்
இல்லையென்றால்
பசு வாலை ஆட்டிய
கதை தான் இரவினிலே!

 

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

 

 

தும்மல் வந்த பிற்பாடு
தூசி தட்ட நினைப்பது..
துன்பம் வந்த பின்னே
துலாபாரம் கொடுக்க
நினைத்தாற் போல்..

 

cartoon-vector-of-cartoon-businesswoman-sneezing-coloring-page-outline-by-ron-leishman-23498

 

மனதுக்கு பிடிக்காதவற்றை
கண்டு கொண்டு பின் கண்டபடி
விமர்சிப்பதை விட கண்டும்
காணாமல் இருக்க பழகி கொண்டால்
யாருக்கும் எந்த கண்டமும் இல்லை!

bob-zahn-he-wears-lifts-pretend-you-don-t-notice-cartoon

 

இதி மஞ்சா?? என்று ஒரு
பீர்க்கங்காயின் தரத்தை
பற்றி என்னிடம் ஒருவர்
தெலுங்கில் வினவ நானும்
எனது பாணியில் பதில் அளித்தேன்
.
.
.
.
பிச்சா தெரியும்
பிஞ்சா என்று!

download

 

யப்பா…
ஒரு quarter தான் பா இருக்கு
ஒரு half கூட இல்ல
நாலு full சாயுங் காலத்துக்குள்
கொண்டு வந்து என் வீடு சேர்த்தா
உனக்கு புண்ணியமாக போகும்…
இது குடிகாரியின் புலம்பல் அல்ல
மினரல் வாட்டர் கேன்காரனிடம்
ஒரு குடித்தனக்காரியின் புலம்பல்!

 

??????????????????????????????????????????????????????????

 

நியாபகம் வந்த நொடியே
அக்காரியத்தை செய்ய
சோம்பல் பட்டு நாளை
நாளை என்று தள்ளி
போடும் மனது நம்பகமற்றது!

download (1)

 

 


13 பின்னூட்டங்கள்

விடாது சிகப்பு

gas1

அன்றைய பொழுது  நன்றாக தான் விடிந்தது. நேற்றைய  தினம்  Gas புக்  செய்ய சொல்லி இருந்தது  நினைவில் வர கணவரிடம் அது பற்றி கேட்டேன். அவரும் எங்கள்  Gas  Agency  விநியோகம் செய்திருந்த நோட்டீசை என்னிடம்  நீட்டினார். அதில் வாடிக்கையாளர் சேவைக்காக Indianoilcorporation  IVRS  நம்பர் புதிதாய்  அறிமுகம் செய்திருப்பதை அறிவித்து  இருந்தது .மனது  நிம்மதி  பெருமூச்சு  விட்டது . இனி வீட்டில்  இருந்த படியே எந்த நேரமும் கேஸை புக்  செய்து  கொள்ளலாம் என்று மனது  குதூகலித்தது. கணவரிடம் நோட்டீஸை  காட்டி  ஒரு முறை  எல்லாவற்றையும்  சரி  பார்த்து விட்டு  நிமிடத்தில்  கேஸை புக் செய்தேன்.

புக் செய்தாயிற்று… இருந்தும் sms எதுவும்  வரவில்லையே என்ற  மனக்குறை வாட்டி வதைத்தது . திரும்ப  திரும்ப  அந்த  நோட்டீஸில்  அச்சடிக்கப்பட்டிருந்த  எண்ணுக்கு  டயல்  செய்து  டயல்  செய்து  Gasbookingstatus  என்னவென்று சரி  பார்த்து  கொண்டேன் . புக்  செய்த ஒரிரு  நாளில் நான் புக் செய்ததை  உறுதி  படுத்தும் விதமாக sms உம்  வந்து  சேர்ந்தது . அதை  என்  கணவரிடம் ஒரு முறை  காட்டி  மன  உவகை கொண்டேன்!

images (15)

தினம் தினம் நான் அந்த நம்பருக்கு டயல் செய்வதும்  அவர்கள் நாட்களை  கவுன்ட்  டவுன்  செய்து கொண்டே  வருவதும்  தொடர்ந்து  கொண்டிருந்தது. ஒரு  வழியாய்  அந்த பத்து  நாள் அவஸ்தை முடிந்து  கேஸை  அவர்கள்  விநியோகம்  செய்ய  வேண்டிய  நாளும் வந்தது. நானும் காலையிலிருந்து  மாலை  வரை குட்டி போட்ட  பூனை  போல்  நிலை கொள்ளாமல்  வழி  மேல் விழி  வைத்து  காத்து கிடந்தேன் . ஒரு வழியாய்  மாலையில்  வந்து சேர்ந்தது . ஆனால்  வந்தது  கேஸ்  அல்ல கேஸ் விநியோகம் செய்து  ஆகி  விட்டது என்ற sms. ஐயகோ! இது  என்ன  கொடுமை என்று மனம் ஆர்ப்பரித்தது.

waiting cat

கணவரிடம்  இதை  பற்றி  முறையிட  அவர்  நாளை  காலை  வரை காத்திரு.. அதற்கு  பின்பும் வர வில்லை எனில்  என்ன ஏது  என்று  நேரில்  சென்று  விசாரிக்கலாம் என்று ஆசுவாசப்படுத்தினார். அன்று இரவு  உறக்கம்  பிடிக்கவில்லை.  அடுத்த நாள்  காலை  முதல்  வேலையாய்  கேஸ்  விநியோகம்  செய்பவர்களிடம்  நேரில்  சென்று  விசாரித்ததில்  அவர்கள்  எங்கள்  booking status  ஐ  எடுத்து  பார்த்து  விட்டு  நீங்கள்  இதுவரை booking  எதுவும்  செய்யவில்லை  என்று உரைக்க என்  கணவர் எரிமலை ஆகி விட்டார். உடனே  என் கைபேசியை  தொடர்பு கொண்ட அவர்  இதை கோபமாக  குறிப்பிட்டு  எங்கள் கஸ்டமர் நம்பரை  கேஸ்  புக்கை  பார்த்து  சொல்ல   சொன்னார். நானும் சொன்னேன்.. அதன் பின்னே தான் தெரிந்தது  நான்  அந்த  நோட்டீசில்  பால் பாயிண்ட் பேனா  வைத்து  your gas number  என்று குறிப்பிட பட்டிருந்த  இடத்தில் எழுத பட்டிருந்த  ஏதோ  ஒரு எண்ணுக்கு  புக்  செய்திருந்தது தெரிய வந்தது.

5

 

images (13)

ஒரு கேஸை  ஒழுங்கா  புக்  பண்ண  தெரியாதா ?????  நான் அந்த நோட்டீஸை  கணவர்  கையில்  குடுத்த  அன்று  பல  முறை திருப்பி திருப்பி கேட்டது  நினைவில் வந்தது. இந்த நம்பர் புதியதாய் இருக்கிறதே.. இது தானா .. எந்த மாற்றமும் இல்லையே…  ஒரு வேளை  sms  booking புதியதாய்  ஆரம்பித்து  இருப்பதால் ஒவ்வொரு  வாடிக்கையாளருக்கும்  இந்த ஐந்து  இலக்க  எண்ணை  அலாட்  செய்திருப்பார்களோ???? இப்படி பலவாறு  யோசித்து  கணவரின் தலையாட்டலுக்கு  பின்னே தான் கேஸ்  புக்  செய்தேன் . இப்போ  தவறு நடந்தவுடன் பழி  எல்லாம்  என் மேல். கண்ணை  கட்டி காட்டில்  விட்டாற் போல்  இருந்தது . இந்த  தடவை  என் மேல்  நம்பிக்கை  அற்று  போய்  அவரே  கேஸ்  புக்  செய்தார்.

திருப்பி  முதலில்  இருந்தா??  ஏற்கனவே  பத்து  நாட்கள்  ஓடி  போய் விட்டது . இன்னும்  பத்து  நாட்கள்  காத்து  கிடக்க  வேண்டும்.  இனி  தலை  கீழாய்  நின்றாலும்  ஒன்றும்  ஆவதற்கு  இல்லை . கேஸும்  ஆடி அசைந்து  ஒருவாறு  பத்து  நாட்கள்  கடந்த பின்னே  வந்து  சேர்ந்தது.

அந்த  கேஸ் வந்து ஐந்து  நாட்களில் ஏற்கனவே  உபயோகத்தில் இருந்த கேஸ்  தீர்ந்து போனது . உடனே  நானும்  என் கணவரும் சேர்ந்தே முடிவெடுத்து  உடனே  அடுத்த கேஸை  புக்  செய்யும் முயற்சியில்  இறங்கினோம் .  ஆரம்பத்தில்  உடனே அடுத்த கேஸை  புக்  செய்ய முடியுமோ  என்று சந்தேகமாக தான் இருந்தது.. ஆனால்  அக்கம்பக்கம் விசாரித்ததில்  ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அனைவரும் உறுதி  அளிக்க அடுத்த கேஸுக்கு  புக் செய்தோம்.

smsgasbooking

எந்த  பிரச்சனையும்  இல்லாமல் புக்கிங் ஆனது . இன்னும் பத்து  நாட்களில் கேஸ்  வந்து சேரும் என்ற sms உம்  வந்து சேர்ந்தது . பத்து  நாட்கள்  வரை அதை பற்றி பெரிதாய்  ஒன்றும்  யோசிக்கவில்லை. பத்து  நாட்கள்  கடந்து  சென்ற பின்னர் எந்த sms  உம்  வரவில்லை , கேஸ்  வருவதற்கான அறிகுறியும்  இல்லை . என்ன  ஏது  என்று  திருப்பி  கேஸ் விநியோகம்  செய்பவரிடம் விசாரிக்க  அவர்களோ  நீங்கள்  கேஸ்  இந்த மாத ஆரம்பத்தில்  ஒன்று  டெலிவரி  எடுத்திருக்கிறீர்கள், பின்னர் இதே மாதத்தில் திரும்பவும் கேஸ்  புக்  செய்தது  தவறு , அதனால் நாங்கள்  நீங்கள்  புக்  செய்ததை  கேன்சல்  செய்து  விட்டோம்  என்று உரைக்க  நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து  போனோம்.

kid

 

இந்த தடவையுமா  மனம் வெறுத்து  போனது . அடுத்து  கேஸ்  புக்  செய்ய  இன்னும் 15 நாட்கள் காத்திருக்க  வேண்டும் . அந்த 15 நாட்கள் கழிந்த பின்னே  புக் செய்து விட்டு அதன் பின்னே ஒரு 10 நாட்கள்  காத்திருக்க வேண்டும் . இப்படி காத்து காத்து இலவு  காத்த கிளி  மாதிரி ஆகி விடுவோமோ  என்று  பயமாக  இருந்தது. முதல் தடவை  தெரியாமல் செய்த தவறால்  அடுத்தடுத்து எவ்வளவு  பிரச்சனை! அதற்காக வாழ்க்கை  வெறுத்து  போய் விட முடியுமா?? அவசர கால  திட்டம் ஒன்று தீட்டினேன்.

 

அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் யார் யாருக்கு இந்த மாதம் கேஸ்  டெலிவரி  எடுத்திருக்கிறார்கள் , யார்  யார் போன  மாதம் டெலிவரி செய்திருக்கிறார்கள் என்று பார்த்ததில் ஒருவர் போன மாதம் எடுத்திருந்தது தெரிய வந்தது. அவருடைய gas agency புக் செய்த  நான்கு  நாட்களிலேயே  டெலிவரி  செய்து  விடுவார்கள்  என்பதும் தெரிய வந்தது. எனக்கு ஒரு கேஸ் சிலிண்டர்  35  நாட்கள் வரை வரும் . அவர்களுக்கு ஒரு  கேஸ் 60 நாளுக்கு வரும் என்பதால்  அவர்கள் எனக்கு கேஸ்  புக் செய்து வாங்கி தருவதாகவும், அதன் பின்னே நான் எங்களுடைய கேஸ்  agency  யில் அவர்களுக்கு புக் செய்து வாங்கி தருவதாகவும் முடிவானது. அந்த அண்டை வீட்டுக்காரர் அன்றைய தினமே எங்களுக்கு கேஸ் புக் செய்து விட்டார் !

ஒரு மூன்று நாட்கள் கடந்த பின்னே என் கைபேசிக்கு  ஒரு sms  வந்தது . என்னவென்று பார்த்தால் நாங்கள் கேன்சல் ஆகி விட்டது  என்று எங்கள் கேஸ் ஏஜென்சியால் அறிவிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் நாளை காலை எங்களுக்கு  வந்து சேரும் என்று அதில் குறிப்பிட பட்டிருந்தது. இதற்கு  நாங்கள் சந்தோஷப்படவா இல்லை துக்கபடவா என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலையும் வந்தது.. சிலிண்டரும் வந்தது… எனக்கும் வந்தது .. எனக்காக புக் செய்த அண்டை வீட்டுக்காரருக்கும் வந்தது. இருந்ததோ ஒரு காலி கேஸ் சிலிண்டர். என் விதியை நொந்து கொண்டே  உபயோகத்தில் இருந்த கேஸ் சிலிண்டரை கழட்டி  குடுக்கும்  முயற்சியில் நான் இறங்க, என் இன்னொரு அண்டை வீட்டுகாரர் ஆபத்பாந்தவரா ய்  எங்களுக்கு அவர்கள்  வீட்டில் இருந்த காலி  சிலிண்டரை தற்சமயத்தில் கொடுத்து  உதவினார். இப்போ ஒன்றுக்கு இரண்டு சிலிண்டர் கைவசம் வந்து  சேர்ந்து விட்டது. ஒன்றை எங்களுக்காக கேஸ் புக் செய்த அண்டை  வீட்டுக்காரருக்கு தூக்கி கொடுத்து  விட்டு  பெருமூச்சு விட்டவாரே  வந்து  நாற்காலியில் அமர்ந்தேன்.

prestige-mini-pic-1-0-mini-400x400-imadsfanst3bvz4r

 

இனிமேல் இந்த  கேஸை  எப்படி அதிக நாள் வருமாறு உபயோகிப்பது என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தேன் . ரொம்ப நாளாய் உபயோகம் செய்யபடாது  இருந்த Induction  அடுப்பு நியாபகத்துக்கு வர அதை தூசி தட்டி சமையல் அறையில் ஒரு ஓரமாய் வைத்தேன். அதற்கு ஏற்ற பெரிய த்ரீ பின் பிளக்  இல்லாமல் இருந்தது . அதற்கு ஏற்றாற் போல் ஒரு conversion  plug  வாங்கி  வர செய்து ஒரு வழியாய் Induction  அடுப்பை ஆன் செய்தோம் . நான்கு நாட்கள் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் தான் சென்றது. போன மச்சான் திரும்ப வந்த கதையாய்  பிரச்சனை  Conversionplug வழியாக வந்தது. அப்போ  அப்போ தீப்பொறி  சுவிட்ச் போர்டில் வந்து கொண்டிருந்தது. அய்யய்யோ என்று நினைத்து  கொண்டிருக்கும் போதே  சுவிட்ச் இறுகி ஆன்  செய்யவே முடியாத நிலைமைக்கு போனது!

IMG_20140623_170939

உஸ்ஸ்.. ஷப்பா … இந்த சிகப்பு உருளையால்  வந்த பிரச்சனை  என்ன விடவே விடாது போல . பார்க்கலாம் இந்த சனி பெயர்ச்சிக்கு  அப்புறமாவது  இந்த பிரச்சனை தீருதா என்று … ஹலோ  எலக்ட்ரீசியன்??? என்  திட்டங்கள்  அது  வரை தீட்டப்பட்டு கொண்டே தான் இருக்கும்…………

 

 

 

 

 


12 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )

நமக்கு இந்த ஸ்வீட் எல்லாம்
ஆகவே ஆகாது என்று அதை
வாங்கி வந்தவரை அட்வைஸ்
செய்யாமல் விட்டதும் இல்லை
அதன் பின்னே வாங்கி வந்த
ஸ்வீட்டை ஒரு பிடி பிடிக்காமல்
விட்டதும் இல்லை!!

Indian Sweets

செல்லரித்த ஏடுகளும்
புல்லரிக்க வைக்கும்…
பல் போன வயதினரின்
பால்ய வயது புகைப்படங்கள்!

 

images (9)

 

பார்வை ஒன்று போதும்
சோர்வடைந்து விடாது
கோர்வையாய் கவிதைகள் கிறுக்க!

How-to-Improve-Eyesight-Naturally

 

அதிகாலை சூரியனை சுட்டி காட்டி
‘சூரிய’ என்று தமிழில் உரைத்த
என் குட்டிப் பையனை கண்டு வியந்து
பெருமிதம் கொள்ள மாட்டாது இறக்கைகள்
இல்லாமலேயே உயரே உயரே பறந்த
என்னை ஒரே நொடியில் தரை இறக்கினான்
‘காந்தி ‘என்று அடுத்த வார்த்தையை உதிர்த்து!!

sun

 

தூரத்தில் தெரிந்த வெளிச்சம்
நோக்கி நடந்தேன் உயிர் மீண்டு
வந்தேன் என்று ‘கோமா’வில்
இருந்து நினைவு திரும்பியவர்
சொல்ல கேட்டதுண்டு..
தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தின்
மேல் கொண்ட’மோக’த்தில் அதை நோக்கி
பறந்து செல்லும் விட்டில் பூச்சிகள்
மட்டும் உயிர் மாண்டு போவது ஏனோ??

images (10)

 

 

அம்மா : Animals தமிழில் என்னவென்று சொல்லுவாய்
பையன் : பசுக்கள்.. மாடுகள்!!
அம்மா : தப்பு.. தப்பு
பையன்: Clue ஏதாவது குடுங்க
அம்மா : திருடனை பிடித்தவுடன் அவன் கையில என்ன மாட்டுவாங்க?
பையன்: watch.. chain.. மோதிரம்!!!
அம்மா: டேய்.. திருடன் என்ன மாப்பிள்ளையா ??
பையன் :அடுத்த clue?
அம்மா : ‘வி ‘ என்ற எழுத்தில் தொடங்கும்..
பையன் : Got it.. விலங்குகள்

images (11)

 

 

கனியுண்டு காயுண்டு வாழ்பவர்க்கு
நோயின்றி வாழ இறைவனின்
கனிவுண்டு காயாத வாழ்வுண்டு!!

scientistssay

 

ஒருவற்கு யாதேனும் ஒரு விஷயம்
‘பிடி’த்திருக்கிறதா இல்லை பிடிக்கவில்லையா
என்பதனை அவ்விஷயங்கள் சார்ந்த
உரையாடல்களின் போது அவர் ‘பிடி’
கொடுத்து பேசுகிறாரா என்பதனை
பொறுத்து கண்டு ‘பிடி’த்து விடலாம்!

images (12)


4 பின்னூட்டங்கள்

எலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்?

ஆறுமுகம் அய்யாசாமி

காட்சி 1
………….
இடம்: வெள்ளை மாளிகை டைனிங் ஹால், அமெரிக்கா
………………………………………………….
மிசேல்: சேச்சே, மானமே போவுது, ஏந்தான் நீங்க பிரெசிடென்ட் ஆனீங்களோ, என் பிரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் பதிலே சொல்ல முடியலே, வெளில தலைகாட்ட முடியல!
ஷாஸா: எனக்குந்தாம்மா, என் பிரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாரும் கேலி பண்றாங்க. காலேஜ் போகவே புடிக்கலை!
ஒபாமா: என்ன ரெண்டு பேரும் நை நைன்னு பேசீட்டே இருக்கீங்க, எனக்கு இருக்க பிரச்னைல நீங்க வேற, ஒரே தொணதொணப்பு!
மிசேல்: பின்ன என்ன? ஒரு ராக்கெட் ஒழுங்கா விடறாங்களா? தப்பித்தவறி ஒண்ணு விட்டா, பத்து ராக்கெட் வெடிக்குது, இந்த நாசாக்காரங்கள எல்லாம், கழுத மேய்க்க விட்டாத்தான் புத்தி வரும்!
ஒபாமா: ச்சே… என்ன பண்றதுன்னே தெரியலை. கேட்டா, அது இதுன்னு காரணம் வேற சொல்றாங்க…!
மிசேல்: இந்த இந்தியாக்காரங்கள பாருங்க, செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாங்க, இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போறாங்களோ, பேசாமா உங்காளுங்க எல்லாரையும், இந்தியாவுக்கு டிரெய்னிங் அனுப்பிடுங்க. இல்லைன்னா, நாசா காண்ட்ராக்ட் எல்லாத்தையும் இந்தியாக்காரங்களுக்கு கொடுத்திடுங்க, வெடிச்சாக்கூட, பழியை அவங்க மேல போட்டுடலாம்.
ஒபாமா: ஸ்டுப்பிட் மாதிரி பேசக்கூடாது மிசேல். ஏதாச்சும் நல்ல உருப்படியா ஐடியா இருந்தா சொல்லு!
மிசேல்: ஒரே ஐடியாதான். நேரா இன்டியன் பி.எம்., மோடி கிட்ட பேசுங்க. அவுங்க ராக்கெட் விடறக்கு என்னவெல்லாம் டெக்னாலஜி பாலோ பண்றாங்கன்னு கேளுங்க, கொஞ்சம் நாசாக்காரங்களுக்கு ஹெல்ப் பண்ணச்சொல்லுங்க. அந்தாளு நல்ல மனுசன். நீங்க…

View original post 1,213 more words