எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -34

8 பின்னூட்டங்கள்

போதுமா ஒன்னு போதுமா
ஆசை தீருமா??
.
.
.
.
.
பீடா!

Image

ஆட்டோவில் தனித்து
பயணம் செய்யும் போது
கூட வராத பயம்..
ஆட்டோவின் சீட்
தனித்து பிய்த்து கொண்டு
முன்னே வரும் போது
முந்தி அடித்து கொண்டு
வந்து விடுகிறது!!

Image

 

சன் லைட் பட்டவுடன்
ஆக்டிவேட் கூட ஆக வேண்டாம்
ஒரு லைட் எரிய கூடாதா
பேனா மேல ஒரு க்ரிஸ்டல்
வெச்சுட்டு விலை 80 ரூபாயாம்
இந்த அநியாயத்தை தட்டி
கேக்க யாருமே இல்லையா
க்ரிஷ்  பேனா!!

Image

 

மனம் நொந்து நூடுல்ஸ்
ஆகும் தருணம்..
மிக சுவாரசியமாக
எதேனும் புக் படித்து கொண்டே
ஸ்னேக்ஸ் உள்ளே தள்ளும் போது
திடீரென்று கைகள் தடவி பார்த்து
உணர்த்தும் தட்டு காலி என்பதை!!

Image

 

ப்பா.. என்னா மூளை
என்னா தைரியம்
என்னா தன்னம்பிக்கை
எவ்வளவு துன்புறுத்தினாலும்
இந்த கருமாந்திரம் புடிச்ச
சரவணபவன் டீயை குடித்து
முடிக்கும் வரை இவள் கவனம்
சிதறாது என்று மணிகட்டை
குறி பார்த்து ஸ்ட் ராங்கா ஒரு
கப் இரத்தம் குடிக்கும்
சென்னை சென்ட் ரல் ஸ்டேஷன்
கொசு!!

Image

 

வடகம் மீது திடீர் ஆசை 
வந்த பையனுக்காக எண்ணெய்யை
அடுப்பில் வைத்து விட்டு காத்து
நின்ற போது இன்னுமா பொறிக்கவில்லை 
என்று பொறுமை சிறிதும்
இன்றி வடகத்தை எண்ணெயில்
கவிழ்க்க வந்தவனை கண்டு
ஆக்கப் பொறுத்தவருக்கு இப்படி
ஒரு மைந்தனா என்று மனம்
நொந்தவாறே அவனை தடுத்து 
நிறுத்தி விட்டு சொன்னேன்
பொறு இன்னும் காயவில்லை…
என்னம்மா சொல்றீங்க வடகத்தை தொட்டு
பாருங்க இதுக்கு மேலாகவா காய
வேண்டியிருக்குது…
என் அறிவு கொழுந்தே
என் அவசர குடுக்கையே
நான் சொல்ல வந்தது இன்னும்
எண்ணெய் காயவில்லை என்று!!

Image

அம்மா சீக்கிரம் வாங்க
பாருங்க புதுசா ஒரு பென்
இதுல கேமரா இருக்கு
வீடியோ ரெகார்ட் பண்ணலாம்
16ஜீபீ Extendable Memory
எழுத வேற செய்யுமாம்
உண்மையான விலை ரூ.8000
ஆனா இங்க ஆர்டர் செஞ்சா
வெறும் ரூ.1990 மட்டும்தானாம்
சூப்பரா இருக்குல்ல ப்ளீஸ்
வாங்கி தர்றீங்களா..
டேய் இதெல்லாம் சுத்த வேஸ்ட்
போங்கமா நீங்க தான் சுத்த வேஸ்ட்
ஓஹோ.. அப்போ நான் அந்த பென்னை
ஆர்டர் பண்ணி வாங்கி தருகிறேன்
ஆனா ஒரு கண்டிஷன் இனி இந்த பெண்
உனக்கு எந்த விதத்திலும் உதவாது
சம்மதமா???

Image

 

8 thoughts on “சில எண்ணங்கள் -34

  1. சரியான படங்களுடன் அனைத்தும் அருமை…

  2. பீடா சாப்பிடுவதில் நானும் நீங்களும் ஒன்று. யாரெல்லாம் பீடா போடுவதில்லை என்கிறார்களோ, அவர்களிடம் ஒன்று எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்பேன்!
    ஆட்டோ சீட் கையோடு வந்தால் நான் கேட்கும் கேள்வி: உங்க ஆட்டோவில் பிரயாணம் செய்தால் சீட் ப்ரீயா? என்று!
    நகைச்சுவையுடன் எண்ணங்களை சொல்வது உங்களுக்கு கைவந்த கலையாகிவிட்டது, மஹா!
    பாராட்டுக்கள்!

  3. அடடே அம்மா! நீங்களும் என் போல் பீடா பிரியரா.. சூப்பர்! உங்களுக்கும் எனக்கும் நிறையவே அலைவரிசை ஒத்து போகிறது 🙂

  4. நானும் உங்கள் கட்சி தான். பீடா , ஐஸ்க்ரீம் இரண்டும் சாப்பிடாமல் கல்யான் வீட்டை விட்டு நகர மாட்டேன். ஆட்டோ சீட் நிஜமாகவே பயம் கொள்ள வைப்பது தான்.ஒரு கப்……….? டீயை சாரி…. சாரி…. ரத்தம் குடித்து விட்டதா அந்த காட்டேரி கொசு.
    வடகமும், பெண்ணும் கவிதையானத்தை ரசித்தேன் மஹா. முக நூலில் வேறு அலம்பல் செய்கிறீர்கள். எத்தனை அவதாரம்…….

    • வாங்க ராஜி மேடம்!
      நீங்களும் பீடா பிரியையா சந்தோஷம்..
      என்ன ராஜி மேடம் செய்ய ஒரு தம்மாதுண்டு கப் டீ 25ரூபாயாம்
      அதனால கொசு கடிய விட அந்த டீய கொட்டாம குடிக்கிர முயற்சியில இரத்தம் குடுக்க வேண்டியதா ஆயிடுத்து 🙂

  5. “போதுமா ஒன்னு போதுமா
    ஆசை தீருமா??” என்று தொடங்கி
    பீடா!, க்ரிஷ் பேனா!,
    சரவணபவன் டீ, வடகம் என அளந்து
    அடுத்ததாக
    16ஜீபீ Extendable Memory
    இதுல கேமரா இருக்கு
    வீடியோ ரெகார்ட் பண்ணலாம்
    என்றெல்லோ
    தங்கள் எண்ணங்களைக் காட்டியமைக்கு
    பாராட்டுகள்!

பின்னூட்டமொன்றை இடுக