எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

எதிர்காலத்தில் மீண்டும்-1

9 பின்னூட்டங்கள்

back1

கால இயந்திரம் என்ற ஒன்று நிஜமாகவே இல்லை என்றாலும், அப்படி ஒரு இயந்திரத்தை யாரேனும் கண்டு பிடித்து விட மாட்டார்களா என்ற அவா எல்லோருக்குமே உண்டு! கால இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு நிறைய  அறிவியல் புனை கதைகள் எழுதப்பட்டுள்ளன.. இதுவும் அவற்றில் ஒன்று தான்! 1985 ஆவது வருடம் வெளி வந்து சக்கை போடு போட்ட Back To The Future படத்தின் கதை பற்றி தான் இந்த பதிவு! யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற ஒரு நோக்கம் தான் வேறொன்றுமில்லை! விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்!

இது 1985 ஆம் வருடம் நடக்கும் ஒரு கதை !மார்டீ என்ற ஒரு இளைஞன் தான் கதையின் ஹீரோ. அவன், தான் ஒரு சிறந்த இசைக்  கலைஞனாக ஆக வேண்டும் என ஆசைப் படுபவன்!

back8

அவனுக்கு ஜெனிபெர் என்று ஒரு காதலி !

back13

அவனுடைய அப்பாவின் பெயர் ஜார்ஜ். அவர் பிப் என்ற பெயரையுடைய அவரது  மேற்பார்வையாளரால் சதா கொடுமைப்படுத்த படுபவர்!

back9

அவனுடைய அம்மாவின் பெயர் லோர்ரைனே. அவர் ஒரு மனசோர்வுக்கு ஆட்பட்ட , அதிக எடையுடைய குடிகார பெண்மணி!

back15

அவள் தன்  மகன் மார்டீக்கு , ஜெனிபருடன்   உண்டான காதலை எப்போதும் அங்கீகரித்ததில்லை  என்றாலும் , அவள், தன் இளவயதில்,  தன் கணவன் ஜார்ஜை , எந்த ஒரு சூழ்நிலையில் சந்தித்து , தன்  மனம் பறி கொடுத்தாள் என்பதை ஒரு நாளும் சொல்லாமல் இருந்ததே இல்லை! அப்படி  எந்த மாதிரி சூழ்நிலையில் , லோர்ரைனே தன் கணவன் ஜார்ஜை சந்தித்தாள் என்பதை இக்கதையை படிப்பவர் கண்டிப்பாக அறிந்து கொள்ளுதல் வேண்டும்! லோர்ரைனே யுடைய தந்தையார் ஒரு நாள் தெரியாமல் தன் காரை கொண்டு ஜார்ஜை இடித்து விட அவர் மயக்கமடைகிறார்! பதறி போன  , அவளுடைய தந்தை , ஜார்ஜை அவருடைய வீட்டுக்கு , அழைத்து சென்று ,அவர் உடல் நலமாகும் வரை கவனித்து கொள்கிறார்! இந்த சைக்கிள் கேப்பில் தான் நம் கதாநாயகன் மார்ட்டியின் அம்மாவான லோர்ரைனும் அப்பாவான ஜார்ஜும் காதல் வசப்படுகிறார்கள்! இனி நம் கதாநாயகன் மார்ட்டியின் கதைக்கு வருவோம்!

ஓர் இரவு , மார்டீ , தன்னை கேமராவும் கையுமாய் , அவசரமாக அழைத்திருந்த ,தன் விஞ்ஞானி நண்பன் , டாக்டர் .பிரவுனை ஒரு ஷாப்பிங் மாலின் , வாகன நிறுத்துமிடத்தில் சந்திக்கிறான்! அந்த தருணத்தில் , டாக்டர்.பிரவுன் தான் கண்டு பிடித்திருக்கும் கால இயந்திரத்தை , அவனுக்கு காட்டுகிறார்!

Back to the Future (1985) Directed by Robert Zemeckis Shown from left: Christopher Lloyd (as Dr. Emmett Brown), Michael J. Fox (as Marty McFly)

அந்த கால இயந்திரம் , காலத்தை கடந்து பயணிக்கும் , ஒரு  மாற்றம் செய்யப்பட்ட ஒரு கார்! அவ்வாறு அந்த கார் , காலத்தை கடந்து பயணிக்க , அதற்கு தேவையான சக்தியை தருவது ப்ளுடோனியம் !

back3

இந்த ப்ளுடோனியம் டாக்டர்.பிரவுனுக்கு எப்படி கிடைத்தது என்பது ஒரு தனி கதை! லிபியா நாட்டு கலகக்காரர்கள் , ப்ளுடோனியத்தை , எங்கிருந்தோ திருடி கொண்டு வந்து,பாம் செய்ய  , நம்ம டாக்டர்.பிரவுனிடம் கொடுக்க , அவர் , கால இயந்திர ஆராய்ச்சி மோகத்தில் , அவர்களுக்கு டம்மி பாம் செய்து கொடுத்து ஏமாற்றி விடுகிறார்! ஆக , இருக்கும் ப்ளுடோனியம் அனைத்தையும் , காலத்தை கடந்து செல்வதற்கு உபயோகப்படும் என்று ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து கொள்கிறார்! இனி திரும்ப , மெயின் கதைக்கு வருவோம்!

பத்திரப்படுத்தி வைத்த பெட்டியில் இருந்து ஒரு  ப்ளுடோனியத்தை எடுத்து,உபயோகித்து  , தன் கால இயந்திரத்தில்  ,தன் வளர்ப்பு நாயை , அனுப்பி , காலம் கடந்து பயணம் செய்வதை , நிரூபணம் செய்து  காட்டுகிறார்! பின் , தானே , அவ்வியந்திரத்தில் , காலம் கடந்து பயணிக்க , நவம்பர் 1, 1955 என்ற தியதிக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார் டாக்டர் .பிரவுன் ! இவை எல்லாவற்றையும் , மிகுந்த ஆச்சரியத்துடன் , தன கேமிராவில் பதிந்து கொண்டே இருக்கிறான் மார்டீ! அவ்வாறு , அவர் கிளம்ப , ஆயுத்தமாகும் சமயம் , எதிர்பாராமல் , லிபியா நாட்டு கலகக்காரர்கள் , டாக்டர் பிரவுனை , டம்மி பாம் கொடுத்து ஏமாற்றியதற்காக , மிகுந்த கோபத்தோடு கொல்ல வருகிறார்கள்! அவர்கள் , டாக்டர்.பிரவுனை சராமாரியாக சுட்டு கொன்று விடுகிறார்கள்! செய்வதறியாது தவித்த நம் கதாநாயகன் மார்டீ , தன் உயிரை காப்பாற்றி கொள்ள , அந்த கால இயந்திர காரில் ஏறி தப்பி செல்கிறான்! அவ்வாறு தப்பி செல்லும் அவன் , எதிர்பாராது , நவம்பர் 1, 1955 தியதிக்கு,அதாவது கடந்த காலத்துக்கு , தெளிவாக சொல்ல வேண்டுமெனில் 30 வருஷம் பின்னே பயணப்படுகிறான்!

அங்கே , கடந்த காலத்தில் , மார்டீ தன் இளவயது அப்பா அதாவது இளைஞன் ஜார்ஜை சந்திக்கிறான்!

back10

கடந்த காலத்திலும் , அவனுடன் வகுப்பில் ஒன்றாய் படித்த , முரட்டு மாணவன் பிப் பினது கொடுமைக்கு சதா ஆளாகிறார்!!

back11

அன்றைய தினம் , ஒரு கார் மோத வந்த விபத்தில் இருந்து , தன் இளவயது அப்பா ஜார்ஜை காப்பாற்ற முயற்சித்து , மார்டீ விபத்தில் சிக்குகிறான்! மூர்ச்சை அடைந்த அவனை , காரை வைத்து மோதியவர் , இரக்கப்பட்டு தன் வீட்டுக்கு அழைத்து சென்று முதலுதவி அளிக்கிறார்! ஒரு வழியாய் , நினைவு திரும்பி , கண் விழித்த மார்டீ , பார்த்த மாத்திரத்தில் காதல் வயப்பட்ட கண்களோடு , தன் அருகில் அமர்ந்து , தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் தன் இளவயது அம்மாவை கண்டு அதிர்ச்சி அடைகிறான்!

back6

ஆம் , அந்த வீடு மார்ட்டியின் அம்மா வீடு தான் ! விபத்தை உண்டாக்கியர் மார்ட்டியின் தாத்தா தான்!

இந்த இடத்தில் , நீங்கள் ஒன்று கவனிக்க வேண்டும்.. விதிப்படி என்ன நடந்திருக்க வேண்டுமோ , அது நடக்கவில்லை! ஜார்ஜ் தான் கார் விபத்தில் அடிப்பட்டு படுத்திருக்க வேண்டும். ஆனால் , எதிர்பாராது , மார்டீ கார் முன் விழுந்து  , வரலாறையே குழப்பி விட்டு விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்! ஜார்ஜை காதலோடு பார்த்திருக்க வேண்டிய லோர்ரைனே , தன் எதிர்கால மகன் என்று அறியாமல் , மார்டீயை கண்ட வுடன் காதல் கொண்டாள்! இந்த குழப்படியில் இருந்து , ஒருவாறு தப்பித்த , மார்டீ , தன் விஞ்ஞானி நண்பன் , இளவயது டாக்டர். பிரவுனை தேடி சென்றான் ! இனி , அவன் திரும்பவும் எதிர்காலம் செல்ல , டாக்டர்.பிரவுன் உதவியை தான் நாடி ஆக வேண்டும்!  ஏனெனில்  ப்ளுட்டனியமும் இல்லை ,வேறு வழி எதுவும் இப்போதைக்கு தென்படவும் இல்லை! அங்கே , இங்கே விசாரித்து , ஒரு வழியாய் தன் விஞ்ஞானி நண்பனை தேடி கண்டு பிடிக்கவும் செய்து விட்டான்  மார்டீ !

download

இளவயது டாக்டர்.பிரவுனுக்கு தான் எதிர்காலத்தில் இருந்து, கால இயந்திரம் மூலமாக வந்திருப்பதை , தன் கேமராவில் பதிந்து வைத்த காணொளி மூலமாக ஒருவாறு புரிய வைத்தான் மார்டீ!  ப்ளுடோனியம் இல்லாமல் எதிர் காலத்துக்கு மீண்டும் செல்வது சாத்தியப்படாது என்று விளக்கிய டாக்டர்.பிரவுன் , இத்தகைய சிக்கலில் இருந்து தப்பித்து செல்ல வேற ஒரு வழியை விளக்குகிறார்! கால இயந்திரத்தை கிளப்புவதற்கு 1.21கிகா வாட்ஸ் அளவு சக்தி வேண்டும்! அத்தகைய அளவு சக்தி ,ஒரு முறை மின்னல் வெட்டும் போது மட்டுமே வெளியிடப்படும்.. அந்த அளவு  சக்தியை ,மின்னல் வெட்டும் நேரம் , பிடித்து ,கால இயந்திரத்துக்கு குடுத்தோம் ஆனால் , மீண்டும் எதிர்காலம் செல்வது சாத்தியமாகும்!  மேலும் , மார்டீயை , அவனது இளவயது தாய் தந்தை யாரையும் இந்த தருணத்தில் சந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்!  ஒரு வேளை அவ்வாறு சந்திக்க நேரின் , அவனையும் அறியாமல், அவன் வரலாறையே எசகு பிசகாய் மாற்றி அமைக்க கூடும் என்று அச்சுறுத்துகிறார்! அப்பொழுது தான் , தன்னால் ஒரு பெருத்த பிழை உண்டாகி விட்டதை  மார்டீ உணர்கிறான்!  விதிப்படி , தன் தாத்தா ஓட்டி வந்த கார் , தன் அப்பா ஜார்ஜை இடித்திருக்கணும்! அப்பொழுது தான் , தன் இளவயது அம்மாவும் , அப்பாவும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்..  அதன் பின்னே காதலும் அரும்பி இருக்கும்! அப்படி நடந்தால் தானே , மார்டீ என்ற ஒருவன் பிறக்கவே வாய்ப்பு இருந்திருக்கும்! அதனால் , எப்படியாவது , அவனது இளவயது தாய்க்கும் , தந்தைக்கும் இடையே சந்திப்பை உண்டு செய்து , அவர்களுக்குள் காதல் மலர செய்யுமாறு , டாக்டர்.பிரவுன் அறிவுறுத்துகிறார் !

அது போக , மார்டீயை பத்திரமாய் , எதிர்காலம் அனுப்ப , மின்னலின் சக்தி வேண்டும்! அதற்கு எங்கே போவது! அதற்கு ஒரு வழி சொல்கிறான் மார்டி.. சரியாக இன்னும் ஒரு வாரத்தில் , அவ்வூரில் இருக்கும் மணிக்கூண்டின் மேல் , மின்னல் வெட்ட போவதை , வரலாற்றின் மூலமாக ஏற்கனவே அறிந்திருந்ததை டாக்டர்.பிரவுனிடம் உரைக்கிறான்! அவரும் , எப்படியாவது , அதன் சக்தியை பயன்படுத்தி ,அவனை எதிர்காலம் அனுப்பி வைக்க , உறுதி   மொழி அளிக்கிறார்!

back5

மார்டீ தன் இள வயது தந்தையை , தேடி போய் சந்திக்கிறான்! அவர் தன்னம்பிக்கை சிறிதும் இல்லாதவராக விளங்குகிறார்! நன்றாக அறிவியல் புனை கதைகள்  எழுதும் திறன் இருந்தாலும் , யாரிடமும் , தான் எழுதிய கதைகளை  காட்டாமல் , தனக்குள்ளே பூட்டி வைத்து கொள்கிறார்! எங்கே , தன் கதைகளை யாராவது படித்து , கேலி , கிண்டலுக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்டுகிறார்! தன் வயது பெண்களை அவருக்கு பிடித்திருந்தாலும், அவர்களிடத்தில் தன் மனதை வெளி காட்ட தெரியாத பயந்தாங்கொள்ளியாகவே விளங்கினார்! இப்படி இருக்கும் ஒருவரை எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்!  இந்த லட்சணத்தில் , இளவயது அப்பா ஜார்ஜின் , கூட படிக்கும் பிப் வேறு , அவ்வப்பொழுது , தன் சகாக்களோடு வந்து , தன் இளவயது அப்பாவையும் , அம்மாவையும் , பாடாய் படுத்துவது கண்டு , மனம் குமுறுகிறான்!

 

அந்த நேரத்தில் , இளவயது அம்மா லோர்ரைனே ,மார்டீயை , தன் எதிர்கால மகன் என்று அறியாமல் , வரப்போகும் ஒரு நடன நிகழ்ச்சிக்கு , தன்னுடன் நடனமாட , ஒரு தலை காதலோடு வந்து அழைக்கிறாள்! இந்த தருணத்தை , எப்படியாவது , தன் அப்பா , இளவயது ஜார்ஜுக்கு சாதகமாக்கி விட துடிக்கிறான் மார்டீ! அதற்காக ஒரு திட்டம் தீட்டுகிறான்! நடன நிகழ்ச்சிக்கு செல்லும் சாக்கில் ,தன் அம்மா லோர்ரைனோடு காரில் ஏறி , அவளிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சிக்கும் நேரம் , தக்க சமயத்தில் , அவனுடைய இள வயது அப்பா ஜார்ஜ் வந்து , மார்டீ யை அடித்து போட்டு , லோர்ரைனை காப்பாற்றுவதாக பிளான்! ஆனால் , பிளான் சொதப்பி , மார்டீக்கு பதிலாக , குடி போதையில் இருந்த பிப் , லோர்ரைனை அடைய முயற்சிக்க , தக்க சமையத்தில் ஜார்ஜ் வந்து , தன்னுள் இத்தனை நாளாய் , ஒளிந்து கொண்டிருந்த , வீராவேசத்தை வெளிப்படுத்தி ,முரடன் பிப் பினது மூஞ்சியில் ஒரு கும்மாங்குத்து விட்டான்!

back16

கிட்டத்தட்ட பிப் மூர்ச்சை யடைந்தான் என்று தான் சொல்ல வேண்டும்! ஊரே ஜார்ஜை பார்த்து வியந்தது ! இத்தனை நாள் பரிகாசம் செய்து சிரித்தவர்கள் கூட , இன்று அவனை ஒரு கதாநாயகனாக நோக்கினர்! லோர்ரைனே ஜார்ஜின் வீராவேசத்தை கண்டு சிறிது சொக்கி தான் போனாள்! அவளே , அவனை தேடி சென்று , அவளுடன் நடன நிகழ்ச்சியில் சேர்ந்து நடனமாட அழைப்பு விடுக்கிறாள்! அதன் பின் கண்ணும் , கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடியது என்று சொல்லவும் வேண்டுமா! எல்லாம் இனிதே நடந்ததை கண்டு இன்புற்ற மார்டீ , டாக்டர்.பிரவுனை தேடி செல்கிறான் !

back7        images (1)

மணிக்கூண்டின் மேல் மின்னல் வெட்ட போகும் அந்த நாளும் வந்து சேர்ந்தது. மின்னல் வெட்டும் போது , அது வெளிப்படுத்த போகும் சக்தியை , கால இயந்திரத்துக்கு கொடுப்பதற்கு ஏற்றாற் போல் , எல்லா ஏற்பாடுகளையும் செம்மையாய் செய்து வைத்திருந்தார் டாக்டர்.பிரவுன்! கிளம்ப நாலு நிமிடங்களே பாக்கி இருக்கும் பொழுது , மார்டீ , டாக்டரிடம் ,அவருக்கு எதிர்காலத்தில் , லிபிய கலகக்காரர்களால் , ஏற்படப் போகும் துர்மரணத்தை பற்றி எச்சரிக்கிறான்! அதன் பின்னே , மின்னல் தக்க சமயத்தில் வெட்ட , அதன் சக்தியை கொண்டு , மார்டீ 1955 இல் இருந்து , தான் இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் 1985 வருடத்திற்கு கால இயந்திரம் மூலமாக பத்திரமாய் ஓரிரு நிமிடங்கள் முன்னையே வந்து சேர்கிறான்! அந்த நிமிடம் , லிபியா கலகக்காரர்கள் டாக்டர்.பிரவுனை சராமாரியாக நெஞ்சிலே சுட்டு விட்டு தப்பி செல்கின்றனர்! செய்வதறியாது திகைத்து நின்றான் மார்டீ! ஆனால் , எதிர்பாராத ஒரு விடயம் அப்பொழுது நடந்தது! இறந்து விட்டதாக நினைத்த டாக்டர் பிரவுன் , சிறு கீறல் கூட இல்லாது எழுந்து அமர்கிறார்! ஆம் , அவர் , மார்டீ , கால இயந்திரம் மூலமாக வந்து ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் , தான் குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்ததாக உரைக்கிறார்! பிறகு , தன் கால இயந்திரத்தில் ஏறி , அவர் மட்டும் எதிர்காலத்துக்கு பயணப்படுகிறார்! மார்டீ தன் வீட்டை அடைகிறான்!

அங்கே , அவன் வீடே தலை கீழாக மாறி இருந்தது! மார்டீயின் தந்தை ஜார்ஜ் மிகுந்த தன்னம்பிக்கை மிக்க ஒரு புகழ் பெற்ற , அறிவியல் புனை கதை எழுத்தாளராக விளங்கினார்! அவன் தாய் லோர்ரைனே மிக உற்சாகம் நிரம்பிய , தன் உடலை இந்த வயதிலும் சிக்கென்று கச்சிதமாக வைத்து கொள்ளும் பெண்மணியாக விளங்கினாள்!

back12

அவள் , மார்டீ யின் காதலியான ஜெனிபர் பற்றி மிக ஆர்வமாக விசாரித்தாள்! பிப் தன் அப்பாவின் சொல் கேட்டு நடக்கும் பணியாளாக ,அவரடியில் வேலை செய்வதை பார்க்க ரொம்பவே ஆச்சரியமாக தான் இருந்தது மார்டீக்கு! அந்த ஆச்சரியத்தோடு , தன் காதலி ஜெனிபரை காண விரைகிறான் மார்டீ! அவளை சந்தித்து பேசி கொண்டிருக்கும் போது டாக்டர் பிரவுன் தன் கால இயந்திரத்தில் மீண்டும் வந்து சேர்கிறார்! அவர்கள் இருவரையும் தன்னோடு அவசரமாக எதிர்காலத்துக்கு வருமாறு அழைக்கிறார்! மார்டீ ஜெனிபருக்கு எதிர்காலத்தில் பிறக்க போகும் குழந்தைகளுக்கு ஏதோ பிரச்சனையாம்.. அதை தீர்க்க வேண்டும் என்ற காரணத்தோடு கால இயந்திரம் , மூவரையும் ஏற்றி கொண்டு , எதிர்காலத்துக்கு ஹாயாக பறந்து செல்கிறது!!

Back to the Future II

முதல் பகுதி முற்றும்!!

9 thoughts on “எதிர்காலத்தில் மீண்டும்-1

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பதிவு பக்கம் வந்துள்ளதாக தெரிகிறது. என் பதிவுகளை படிக்கிறீர்களா புதிய கதை அருமை
    உங்கள் அனைவருக்கும் எங்களின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    • மிக்க நன்றி விஜிகுமாரி மேடம்! இந்த தடவை தீபாவளி கொண்டாடவில்லை! டெங்குவோடு ஹொஸ்பிடலில் போராடி கொண்டு இருந்தோம்! தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு அதுவே காரணம்! உங்கள் பதிவுகள் அவ்வப்பொழுது படித்து கொண்டு தான் இருக்கிறேன் மேடம் 🙂

  2. சூப்பர் அக்கா! படம் பார்த்துடீங்க!! பார்ட் 2, 3 ஐயும் பார்த்துடுங்க! இதுவரை வெளிவந்த விஞ்ஞானபுனைக்கதைப் படங்களில் மிகவும் பிரசித்தமானது இது. பார்ட்2, 3 ல கதை இன்னும் சோக்கா போகும்!

  3. அட……நன்றாக இருக்கிறதே கதை. தொடருங்கள். அடுத்தடுத்த பாகங்கள் எப்படி போகிறது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசை.

  4. இத்தீபாவளி நன்நாள் – தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன்
    http://www.ypvnpubs.com/

    • இந்த தடவை தீபாவளி இல்லை யார்ழ்பாவணன் சார்! டெங்கு காய்ச்சலால் அவதி பட்டு கொண்டிருந்தோம்! இப்பொழுது யாவரும் நலம்! மிக கால தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு அதுவே காரணம்! மிக்க நன்றி 🙂

பின்னூட்டமொன்றை இடுக