எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )

12 பின்னூட்டங்கள்

நமக்கு இந்த ஸ்வீட் எல்லாம்
ஆகவே ஆகாது என்று அதை
வாங்கி வந்தவரை அட்வைஸ்
செய்யாமல் விட்டதும் இல்லை
அதன் பின்னே வாங்கி வந்த
ஸ்வீட்டை ஒரு பிடி பிடிக்காமல்
விட்டதும் இல்லை!!

Indian Sweets

செல்லரித்த ஏடுகளும்
புல்லரிக்க வைக்கும்…
பல் போன வயதினரின்
பால்ய வயது புகைப்படங்கள்!

 

images (9)

 

பார்வை ஒன்று போதும்
சோர்வடைந்து விடாது
கோர்வையாய் கவிதைகள் கிறுக்க!

How-to-Improve-Eyesight-Naturally

 

அதிகாலை சூரியனை சுட்டி காட்டி
‘சூரிய’ என்று தமிழில் உரைத்த
என் குட்டிப் பையனை கண்டு வியந்து
பெருமிதம் கொள்ள மாட்டாது இறக்கைகள்
இல்லாமலேயே உயரே உயரே பறந்த
என்னை ஒரே நொடியில் தரை இறக்கினான்
‘காந்தி ‘என்று அடுத்த வார்த்தையை உதிர்த்து!!

sun

 

தூரத்தில் தெரிந்த வெளிச்சம்
நோக்கி நடந்தேன் உயிர் மீண்டு
வந்தேன் என்று ‘கோமா’வில்
இருந்து நினைவு திரும்பியவர்
சொல்ல கேட்டதுண்டு..
தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தின்
மேல் கொண்ட’மோக’த்தில் அதை நோக்கி
பறந்து செல்லும் விட்டில் பூச்சிகள்
மட்டும் உயிர் மாண்டு போவது ஏனோ??

images (10)

 

 

அம்மா : Animals தமிழில் என்னவென்று சொல்லுவாய்
பையன் : பசுக்கள்.. மாடுகள்!!
அம்மா : தப்பு.. தப்பு
பையன்: Clue ஏதாவது குடுங்க
அம்மா : திருடனை பிடித்தவுடன் அவன் கையில என்ன மாட்டுவாங்க?
பையன்: watch.. chain.. மோதிரம்!!!
அம்மா: டேய்.. திருடன் என்ன மாப்பிள்ளையா ??
பையன் :அடுத்த clue?
அம்மா : ‘வி ‘ என்ற எழுத்தில் தொடங்கும்..
பையன் : Got it.. விலங்குகள்

images (11)

 

 

கனியுண்டு காயுண்டு வாழ்பவர்க்கு
நோயின்றி வாழ இறைவனின்
கனிவுண்டு காயாத வாழ்வுண்டு!!

scientistssay

 

ஒருவற்கு யாதேனும் ஒரு விஷயம்
‘பிடி’த்திருக்கிறதா இல்லை பிடிக்கவில்லையா
என்பதனை அவ்விஷயங்கள் சார்ந்த
உரையாடல்களின் போது அவர் ‘பிடி’
கொடுத்து பேசுகிறாரா என்பதனை
பொறுத்து கண்டு ‘பிடி’த்து விடலாம்!

images (12)

12 thoughts on “சில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )

  1. இனிப்பு, பல்லு,சொல்லு போனவர்களின் பால்ய வயதுப் போட்டோக்கள், சூரியகாந்தி,

    இப்படி எல்லாம் படித்து மகிழும்படி இருந்தது. இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள். அன்புடன்

  2. இரண்டாம் வருட நிறைவிற்கு பாராட்டுக்கள். அடிக்கடி தொடர்ந்து எழுதவும்.

    ‘பிடி பிடி’ என்று பிடித்துவிட்டீர்கள், மஹா!

    பல்போனவர்களின் பால்யவயது புகைப்படங்கள் என்னிடமும் நிறைய இருக்கின்றன. எனக்கும் பல் போனபின் போடலாம் என்றிருக்கிறேன்!

    வாழ்த்துக்கள், நிறைய நிறைய எழுதுங்கள்.

    • வாங்க ரஞ்சனி அம்மா! உங்கள் வருகைக்கு முதலில் என்னுடைய நன்றிகள்! ஆரம்பத்திலிருந்து நீங்கள் கொடுத்த ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் மிக்க நன்றி! நிறைய நிறைய எழுத வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நேரம் கிடைப்பது சிறிது கடினமாகி விட்டது. என் குட்டி பையன் நிறைய படிக்க ஆரம்பித்து விட்டான். அதனால் அவனோடு நிறைய நேரம் செலவு செய்ய ஆரம்பித்து விட்டேன். கண்டிப்பாக என் மனதில் அலை மோதி கொண்டிருக்கும்
      எண்ணங்களை பதிவுகளாக்கி அவ்வப்பொழுது சமர்பிக்க முயற்சிப்பேன்! நன்றி !

  3. இரண்டாம் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் மஹா. உங்களின் வார்த்தை ஜாலங்கள் வெகு அருமை அதிலும் அம்மா பிள்ளை க்ளு எனக்கு ரொம்பப் பிடித்தது. எழுத்துப்பணி தொடர நலவாழ்த்துக்கள்

  4. இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் மேடம்

  5. பிடித்து விட்டேன்…

    இரண்டாம் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் பல…

பின்னூட்டமொன்றை இடுக