இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் என்ற பெயரில் புதிய தளம் ஆரம்பித்திருக்கிறேன்! இதில் எளிய தமிழில் அறிவியலை யாவரும் புரிந்து கொள்ளும் படியாக பதிவுகளை பதிந்து கொண்டிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள் நண்பர்களே…
நேற்று வரை நல்லா ஓடி கொண்டிருந்த மின் விசிறி திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் எனக்கு என்ன என்று நின்று விட்டதா?? உடனே என்ன செய்வார்கள், எலக்ட்ரீஷியனை அவசர அவசரமாக அழைத்து , யப்பா… ஏதாவது பண்ணுப்பா.. உனக்கு புண்ணியமா போகும்.. புழுக்கம் தாங்கலை… என்று அங்கலாய்ப்பார்கள்! அவரும் மின் விசிறியை தொட்டு கூட பார்க்காமல் சொல்லுவார்.. Capacitor போயிருக்கும்! அப்படி சொல்லவில்லை என்றால் அடுத்ததாக அவர் உபயோகிக்கும் வார்த்தை.. காயில் எரிந்து போயிருக்கும்! இப்போ நான் கேட்குர கேள்விக்கு பதில் சொல்லுங்க .. என்னைக்காவது அப்படி என்றால் என்ன?? மின் விசிறியினுள்ளே அதன் பயன் பாடு என்ன?? ஒரு தடவையாவது கேட்டு அறிந்ததுண்டா????? உங்கள் பதில் இல்லை என்றால் மேற்கொண்டு படியுங்கள் ..
அதோ அந்த வெள்ளை நிற உருளை படத்தில் இருக்கறதே.. அது தான் மின்தேக்கி (capacitor )! இது என்ன மின்கலமா (Battery) என்று வியப்பவர்களுக்கு சொல்லுகிறேன்.. இது மின்கலம்(Battery) அல்ல ஆனால் மின்கலம் (Battery)மாதிரி.. ஆமாம், மின்தேக்கியிலும்(capacitor) மின்கலம் (Battery) போன்று சார்ஜ் ஏற்றி வைத்து கொள்ளலாம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்று தான்!மின்கலம்(Battery) உபயோகம் செய்ய செய்ய காலி ஆகும். மின்தேக்கியோ (Capacitor) உபயோகித்த மறுநொடியே தான் சேமித்து வைத்த அத்தனை சார்ஜையும் காலி செய்து விடும் இயல்புடையது .
இந்த மின்தேக்கியை (capacitor) எளிதாக புரிந்து கொள்ள நாம் Flash Camera வை பற்றி சிறிது நேரம் பார்க்கலாம்…
இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் என்ற பெயரில் புதிய தளம் ஆரம்பித்திருக்கிறேன்! இதில் எளிய தமிழில் அறிவியலை யாவரும் புரிந்து கொள்ளும் படியாக பதிவுகளை பதிந்து கொண்டிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள் நண்பர்களே…
சோப்பு பத்தி பேச என்ன இருக்கு?? இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. குளியல் சோப்பு , கை கழுவதற்கு என்று தனியாக சோப்பு , முகம் கழுவுவதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியே கடைகளில் விற்கபடுகிறது. இந்த சோப்புகள் என்னவோ நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மை தான்.. ஆனால் விளம்பரத்தில் சொல்வது போல் எல்லா சோப்புகளும் 99.9% கிருமிகளை அழிப்பது இல்லை ! பொதுவாக சோப்புகள் இயற்கையாக விளையும் காய்கறி கொழுப்புகள் மற்றும் எண்ணெயிலிருந்து தயாரிக்க படுகின்றன… அவை ரொம்பவே சுத்தமானது.
வெறுமனே தண்ணீர் வைத்து கைகளை கழுவும் போது கைகள் சுத்தமாவது இல்லை! பாக்டீரியா போன்ற கிருமிகள் நம் கைகளில் ஒட்டி கொண்டு தான் இருக்கும். அடுத்து நாம் சாப்பிடும் போது அக்கிருமிகள் நம் கைகளில் இருந்து வாய்க்கு சென்று விடும் வாய்ப்புகள் அதிகம். சாதாரண சோப்புகள் கூட கிருமிகளை விரட்டும் அதனை ஒழுங்காக உபயோகிக்கும் வழிதனை அறிந்து கொண்டால்.. சோப்பு போட்டு கைகளை நன்கு தேய்த்து பின் ஓடும் தண்ணீரில் கைகளை கழுவுவது நலம் பயக்கும்.. அதன் பின்னே நல்ல காய்ந்த சுத்தமான துண்டில் கைகளை துடைத்து கொள்ளும் போது ஓரளவு சுத்தமாகும். உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அதற்கு முன்னே நல்ல தரமான கிருமி நாசினிகள் உடைய சோப்பை பயன்படுத்தும் போது கிருமிகள் முழுவதும் அழிந்து விடுகின்றன. சோப்பு வழங்கு…
தளத்தின் பெயர் : இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்
இது என் நெடு நாளைய கனவு! அறிவியல் சார்ந்த பதிவுகளை எளிய தமிழில் பாமரருக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கவே இந்த தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன்… நிறைய பதிவுகளை பதித்து நான் படித்த படிப்புக்கும், என் தாய் மொழியாம் தமிழுக்கும் பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கையோடு தொடங்குகிறேன்… உங்கள் அனைவரின் மேலான ஆதரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கிறேன்! அத்தளத்தில் என் முதல் பதிவு நான் படித்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் படிப்பை சார்ந்தது. அந்த பதிவின் முகவரி இதோ ,
ஒரு சாயுங்காலம் வழக்கம் போல் சப்பாத்தியை சுட்டு அடுக்கி விட்டு , அதில் ஒன்றை எடுத்து கொண்டு பக்கத்து வீட்டு குஜராத்தி பாபிஜீயிடம் காட்டி , அதற்கு ஐந்துக்கு மூணரை மதிப்பெண் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது பக்கத்து வீட்டு பெண் பார்த்து சிரித்தாள். நானும் சிநேகமாய் சிரித்து விட்டு என் சப்பாத்திக்கு கிடைத்த மார்க்கை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். அவளும் ஒரு வாய் பிய்த்து சாப்பிட்டு பார்த்து நன்றாக இருக்கிறது என்று சர்டிபிகேட் கொடுத்தாள். அதன் பின்னே நடந்த சம்பாஷணைகள்…
பெண் : எங்க வீட்டில் இரவு எப்பொழுதும் சோறு தான். சப்பாத்தி எல்லாம் போட எங்கள் பாட்டி அனுமதிக்க
மாட்டார். ஆனால் நான் கல்யாணம் செய்து செல்லும் வீட்டில் இரவு எனக்கு பிடித்த மாதிரி எல்லா நாளும்
சப்பாத்தி தான்…
நான் : அதனால் தானோ என்னவோ அவர்கள் உன்னை தங்கள் வீட்டு மருமகள் ஆக்க பிரிய பட்டிருக்கிறார்கள்!
இன்னும் ஆறு நாள் தானே பாக்கி இருக்கிறது கல்யாணத்திற்கு, வேலைகள் எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது ??
பெண் : எல்லாம் நல்லா தான் போய் கொண்டிருக்கிறது.. எனக்கு தான் நாள் நெருங்க நெருங்க பயம் கூடி கொண்டே போகிறது . எனக்கு வரப்போகும் கணவரிலிருந்து, அவருடைய வீட்டுகாரர்கள் வரை எல்லோரும் புதியவர்கள். கூட்டு குடும்பம் வேறு. எப்படி தான் சமாளிக்க போகிறேனோ தெரியவில்லை. நினைத்தாலே பதை பதைப்பாக இருக்கிறது. எனக்கு கோபம் வேறு அதிகமாக வரும் . பிறந்த வீட்டில் கோபத்தை நினைத்த மாத்திரத்தில் வெளி காட்டுவது போல், புகுந்த வீட்டில் காட்டி விடாதே என்று ஒரு மாதமாக ஒவ்வொருவராய் அழைத்து உபதேசம் கொடுக்கின்றனர்!
நான்: ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும் . கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் பாதை தெரியாது மனது குழம்பும். அதற்காக முகமூடி அணிந்து கொள்ள மட்டும் நினைக்காதே. நீ நீயாக இரு .. ஒரு தடவை முகமூடி அணிய தொடங்கி விட்டால், நீ உன் வாழ்நாள் முழுக்க அதை கழட்ட இயலாது. உனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை முதலிருந்தே சொல்லி விடு. உன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருடனும் மனம் விட்டு பேச கற்று கொள். அவர்கள் உன்னை பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முயற்சி எடு. அவர்கள் உன்னை முழுதாய் புரிந்து கொள்ளும் வரை நீயும் பரஸ்பரம் அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்!!
பெண் : கூட்டு குடும்பமாக இல்லாமல் தனிக்குடித்தனம் செய்தால் நன்றாக இருக்குமா??
நான் : கண்டிப்பாக இல்லை! இவ்விரண்டும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போன்ற விஷயம்! தனிக்குடித்தனம் செய்யும் பொழுது நாம் தான் ராணி.. நாம் இயற்றுவது தான் சட்டம். பிரச்சனை என்று ஒன்று வரும் வரை எல்லாம் நன்றாக தான் இருக்கும்.. வீட்டில் யாருக்கேனும் உடம்பு சரி இல்லை என்றால் கூட உதவி செய்ய ஆள் இருக்காது.. தனித்தே எல்லா சிரமங்களையும் சமாளிக்க வேண்டும். வீட்டு நிர்வாகத்தை எடுத்து நடத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.. எது அவசியம், எது அவசியமில்லை என்று ஒவ்வொரு விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தே அறிந்து கொள்ள முடியும்.. அதற்கு சிறிது காலம் பிடிக்கும். கூட்டு குடும்பத்தில் இருக்கும் பொழுது இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நீ கற்று கொண்டு விடலாம்!
பெண் : எனக்கு வரப்போகும் கணவர் இது வரை ரொம்பவே நல்லவராக தான் தெரிகிறார்! இதுவரை நீ இப்படி தான் இருக்க வேண்டும் அப்படி தான் இருக்க வேண்டும் என்று எந்த கோட்பாடுகளும் எனக்கு விதிக்கவில்லை ….. ..
நான் : அவசரப்படாதே… ஆரம்பத்தில் எல்லோரும் இனிக்க இனிக்க தான் பேசுவார்கள்! ஓரிரு மாதங்கள் சென்ற பிறகே உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வரும்… என் மனைவி என் வீட்டுக்காரி என்ற எண்ணம் மனதில் தோன்றியவுடன் ஒவ்வொன்றாக கோட்பாடுகளை நம் மேல் திணிக்க ஆரம்பிப்பர்.. இந்த தருணத்தில் தான் சண்டைகள் முளைவிட ஆரம்பிக்கும். இவ்வாறாக ஆரம்பிக்கும் சண்டைகளே உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பலப்படுத்தும்… அதனால் சண்டைகள் வந்தால் உடைந்து போய் விட வேண்டாம்.. அத்தகைய நேரங்களில் நீங்கள் இருவரும் சந்தோஷமாக பேசி சிரித்த தருணங்களை நினைவில் கொள்ளவும். சண்டைகள் வர வர அந்த சண்டைகள் ஏன் எதனால் எப்படி வந்தது என்று ஆராய்ந்து அவற்றை களைய முற்பட வேண்டும்.. அவ்வாறு செய்ய முற்படும் போது சண்டைகள் தீர்ந்து நாளடைவில் சந்தோஷம் பூத்து குலுங்கும். இவ்வாறு தவறுகள் திருந்தப்படும் போது ஒரு 7 அல்லது 8 வருடங்கள் கழித்து நீ அவருக்காகவும் அவர் உனக்காகவும் நிறையவே மாறி இருப்பது கண்கூடாக தெரிய வரும். நீயே அம்மாற்றங்கள் கண்டு ஆச்சரியப்படுவாய்!
பெண் : மிக்க நன்றி! கல்யாணத்திற்கு முந்தைய நாள் இரவே வந்து விடுங்கள்!
நான் : கண்டிப்பாக! எங்களுடைய ஆசிர்வாதங்கள் உனக்கு எப்பொழுதும் உண்டு!
அம்மா : என்னடா சனி கிழமையும் அதுவுமா ஒரே சோகமா இருக்க ??
பையன் : என் கிளாஸ் மேட் சொன்னான் ஏதோ ஒரு செயிண்ட் கரெக்டா second saturday அன்னைக்கு போய் சேர்ந்துட்டாராம்… அதனால தான் எல்லா second saturday வும் லீவு விடுறாங்களாம்.. அவரு போனதே போனாரு ஒரு third saturday போயிருக்கலாம்… இன்னிக்கு லீவா இருந்திருக்கும்..
அம்மா : அடபாவி ! சரி யாருடா அந்த செயிண்ட்???
பையன் : யாரோ John L . Baird
அம்மா : என்னடா டீவீ கண்டு புடிச்சவரை போய் செயின்ட் அது இதுனு சொல்ற?
பையன் : ஹீ.. ஹீ.. உங்களுக்கு தெரியுமா.. நான் உங்களுக்கு என்னத்த தெரிஞ்சிருக்க போதுனு வாய்க்கு வந்த பெயரை அடிச்சி விட்டேன்..
அம்மா : !!!
பையன் : அம்மா.. ப்ளீஸ்.. Wash the affected area with lime water. Apply baking soda and cold cream. place ice pack on the affected area . If its itching apply calamine lotion… ஹும்.. ஹும்.. சீக்கிரமா…
பையன்: என்னம்மா.. பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஏதோ ஒரு கவரை உங்க கையில கொடுத்து உள்ள கோப்ரா இருக்கு கொஞ்சம் உங்க வீட்டு பிரிட்ஜ் உள்ள வையுங்கனு ஹிந்தில சொல்லிட்டு போறாங்க.. நீங்களும் ஈ..ன்னு சிரிச்சிட்டே வாங்கி உள்ள கொண்டு போறீங்க! உள்ள நிஜமாவே cobra வா இருக்கு???
அம்மா : ஆமா! cobra வை புடிச்சி carrybag ல கட்டி வெச்சி பிரிட்ஜ் உள்ள வைக்க போறேன்.. யாரு டா அவன்… கொப்பரை தேங்காய் டா !!
தொண்டை புண்ணால் அவதியுற்று
வாயை திறந்தால் வெறும் காற்று
தான் வரும் என்ற சூழ்நிலையிலும்
முந்தைய நாள் ஸ்கூல் கபோர்டில்
தன் பின் மண்டையை இடித்து
கொண்ட நாலாம் வகுப்பு
படிக்கும் என் தவப்புதல்வனை
ஸ்கூலில் இருந்து வீடு திரும்பிய
உடன் முதல் வேலையாய் குசலம்
விசாரிக்க எண்ணி அவன் பின் மண்டையை
என் கைகளால் சுட்டி காட்டி முக
பாவனைகளாலும் என் கைகளையும் ஆட்டி ஆட்டி
இப்ப எப்படி டா இருக்கு என்று அக்கறையோடு
கேட்க அவனும் சிறிது நேரம் யோசித்து
சொன்னான்.. எனக்கு Dandruff problem
எதுவும் இல்லையே!!
அம்மா : ஹே.. ஜாலி! இன்னிக்கு டின்னர் வெளில..
அப்பா இப்போதான் கால் பண்ணினாங்க..
பையன் : என்ன ஜாலி?? ஓஹோ.. நீங்க சமையல் பண்ண
வேண்டியது இல்லையோ.. எனக்கும் ஜாலி தான்..
நீங்க சமையல் பண்றத இன்னிக்கு நான் சாப்பிட
வேண்டியதில்லை..
அம்மா : !!!!!