எங்கோ இருக்கும் நெசவாளி
தறியில் பட்டு நூல் கோர்க்கும்பொழுதே
இந்த சேலை இந்த பெண்ணுக்கு தான்
என்று நினைத்து கொண்டே நெய்வார்..
கொஞ்சம் மெதுவா சொல்லும்மா திரிஷா
நெசவாளியின் வீட்டுக்காரம்மவுக்கு
கேட்டுட போவுது!!
எந்த ஒரு கல்யாண வீட்டுக்கு
சென்றாலும் அங்கே வரும் அழகான
மூக்கும் முழியுமாய் வரும் திருமதிகளை
பார்த்து விட்டு ‘இந்த பெண்ணை எனக்கு தான்
முதலில் பார்த்தார்கள்’ என்று மனைவியிடம்
பெருமையடிக்கும் ஆண்களே….
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் மனைவி அந்த பெண்ணை
பார்த்து பெருமூச்சு விட்டு
கண்டிப்பாக மனதினுள் எண்ணுவாள்
தப்பிச்சிட்டியேடி!!!
பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி விட
இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி
இருக்கும் போது தான் ஃபோன் வரும்..
கண்ட நேரத்தில யாருனு எரிச்சலோட
நீ எடுடா என்று பையனை கை நீட்ட
அவனும் ஃபோனை எடுத்து ரிசீவரை
காதில் வைத்து விட்டு
பொய்யான வருத்தம்
குரலில் தொணிக்க சொன்னான்
‘என்னது ஸ்கூல் லேதா???’
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான்
ரிசீவரை பிடுங்கி காதில் வைக்க
எவரோ ‘விஷ்ணு லேதா? ‘நு கேட்டு
கொண்டு இருந்தார்…..
அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு!!
‘பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க
இல்லையா டொரேமான் ஸ்டிக்கர்
வாங்கிடுங்க…
எங்க கிளாஸ் பொண்ணுங்களுக்கு
இந்த இரண்டும் தான் புடிக்கும்’
ரக்சா பந்தனை இன்று ஸ்கூலில்
கொண்டாட போகும் என் பையன்!!
யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல்
இருப்பதற்க்காக அணிய படுகின்ற
உடைகள் கூட பளிச் பளிச் என்று
கண்ணை சிமிட்டி நம்மை திரும்பி
பார்க்க வைக்கிறது
.
.
.
.
வெள்ளை நிற கற்கள் பதிக்கபட்டு
அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட
பர்தாக்கள்!!!