எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -12

6 பின்னூட்டங்கள்

வாழ்க்கையில் சூடு பட்ட நெஞ்சமும்
டீயால் சூடு பட்ட நாக்கும்
சுவைகளை அறிய முற்படுவதில்லை!!

படம்

 

ஆவின் கண்கள் இவ்வளவு அழகா என்று
ஆவென்று வாயை பிளந்து வியந்தால்
அது Bulls Eye!!

படம்

 

பருப்பு வெந்து முடிந்த கையோடு
சூட்டோடு சூடாக மசித்து விட்டு
விடுதல் நலம் இல்லையேல்
எவ்வளவு திறமையாக சாம்பார்
வைத்தாலும் பருப்பு தனித்தனியாக
முழித்து கொண்டு தான் நிற்கும்…
படம் எடுத்து முடிந்த கையோடு
சூட்டோடு சூடாய் ரீலீஸ் ஆக
முடியாமல் தடை செய்யபட்டு பின்பு
வெளி வருகின்ற திரைபடங்கள் போல!!

படம்

 

இளமை கொப்பளிக்கும்
முகப்பருக்களுக்கு
பாதுகாவலாய்
கருப்பு பூனை படைகள்
.
.
.
.
.
.
Black Heads!!

 

நம்ம ஆசை ஆசையா
திருப்பி திருப்பி 
எத்தனவாட்டி
கால் செய்தாலும் 
ஃபோனை கையில 
எடுப்பேனா என்று
அடம் பிடிப்பவர்
.
.
.
.
.
கேஸ் புக் செய்பவர்!!

படம்

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் 
ஒரு காலம் இருக்குது என்று
சொன்னால் புரியவா போகுது
.
.
.
.
.

பகலிலும் என்னை சுற்றி சுற்றி
கடிக்கும் மரமண்டை கொசுக்கள்!!

படம்

 

 

6 thoughts on “சில எண்ணங்கள் -12

  1. வணக்கம்
    சகோதரி

    படங்களுக்கு ஏற்றால்ப்போல் கருத்தும் மிக அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. காஸ் புக் செய்வதற்கு இங்கெல்லாம் தனியாக தானியங்கி எண் வந்துவிட்டதே! அங்கு வரவில்லையா? நாம் போன் செய்தால் போதும். அதுவே எல்லாம் செய்துவிடும். நம் தொலைபேசி எண் கூட அதில் கணணிமயமாக்கப் பட்டிருக்கும். பதிவு எண் ஒன்று கொடுத்துவிடும். எப்போது வேண்டுமானாலும் புக் செய்யலாம்.

    வேகாமல் நிற்கும் பருப்புக்கும் வெளிவராமல் தவிக்கும் திரைப்படத்திற்கும் போட்ட முடிச்சு சூப்பர்!

    • ஆம் அம்மா, இப்பொழுது தான் நான் எங்கள் ஃபோன் நம்பரை ரிஜிஸ்டர் பண்ண முயன்று கொண்டிருக்கிரேன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா!

  3. பதிவிலுள்ள எல்லா எண்ணங்களும் சூப்பர், அதிலும் அந்தக் கடைசி (கொசு) எண்ணம் சூப்பரோ சூப்பர்.

பின்னூட்டமொன்றை இடுக