எதிர்பாராத தருணத்தில்
அறியாமல் நடந்தது
தான் அந்த உரசல்
முதல் ஸ்பரிசமோ என்னவோ
சற்றே சிவந்து தான் போனாள்
அடுத்தடுத்து நடந்த
பட்ட இடத்திலேயே படும்
என்பது போன்ற உரசல்களால்
உள்ளுக்குள் எரிய ஆரம்பித்த அவள்
முதன் முறையாக தன் நிலைக்காக
வருந்தினாள்….
கையில் சூடு பட்ட
உடனேயே ஒரு BandAid
ஆவது போட்டிருக்கலாம் என்று!!
என்னையும் ஒருவர்
இவ்வளவு நேரம்
நினைக்கிராரா…
ஆச்சர்யம் தாங்க
முடியாமல் இரு விரல்களால்
என் மூக்கை அழுத்தி பிடித்து
ஒரு நிமிடம் வரை
மூச்சை நிறுத்தினேன்..
.
.
.
.
.
அப்பாடா! ஒரு வழியாய்
விக்கல் நின்று விட்டது!
அம்மா டீ போடுர குச்சி தரீங்களா
என்று ஆர்வமாய் கேட்ட என் பையனை
பார்த்து வியந்த நான்,
‘என்னடா உங்க சைன்ஸ் மிஸ் கொண்டு
வர சொன்னார்களா…. என்று கேட்டு கொண்டே
டீ பாக்கெட்டுக்கு பின்னால் அச்சடிக்கபட்ட
அஷ்வகந்தா, முல்லேத்தி, துளசி, ஏலக்காய், இஞ்சி
ஆகியவற்றை நோட்டமிட்டு விட்டு சொன்னேன்,
முல்லேத்தி ஒன்று தான் குச்சி மாதிரி இருக்கு
அதுவாடா வேனும்…’ என்று படபடவென கூறிய என்னை
வியப்போடு பார்த்த அவன் சொன்னான், அது இல்லை
அம்மா, நான் சொல்வது டீ போடுர குச்சி, Fire வருமே…
ஓ தீ குச்சியா!!