வாழ்க்கையில் சூடு பட்ட நெஞ்சமும் டீயால் சூடு பட்ட நாக்கும் சுவைகளை அறிய முற்படுவதில்லை!!
ஆவின் கண்கள் இவ்வளவு அழகா என்று ஆவென்று வாயை பிளந்து வியந்தால் அது Bulls Eye!!
பருப்பு வெந்து முடிந்த கையோடு சூட்டோடு சூடாக மசித்து விட்டு விடுதல் நலம் இல்லையேல் எவ்வளவு திறமையாக சாம்பார் வைத்தாலும் பருப்பு தனித்தனியாக முழித்து கொண்டு தான் நிற்கும்… படம் எடுத்து முடிந்த கையோடு சூட்டோடு சூடாய் ரீலீஸ் ஆக முடியாமல் தடை செய்யபட்டு பின்பு வெளி வருகின்ற திரைபடங்கள் போல!!
இளமை கொப்பளிக்கும் முகப்பருக்களுக்கு பாதுகாவலாய் கருப்பு பூனை படைகள் . . . . . . Black Heads!!
நம்ம ஆசை ஆசையா திருப்பி திருப்பி எத்தனவாட்டி கால் செய்தாலும் ஃபோனை கையில எடுப்பேனா என்று அடம் பிடிப்பவர் . . . . . கேஸ் புக் செய்பவர்!!
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் ஒரு காலம் இருக்குது என்று சொன்னால் புரியவா போகுது . . . . .
பகலிலும் என்னை சுற்றி சுற்றி கடிக்கும் மரமண்டை கொசுக்கள்!!
போன வாரம், ஞாயிற்று கிழமை, இரவு SetMax சேனலில், Murder 3 ஹிந்தி படம் காண்பித்து கொண்டிருந்தார்கள்.. அது ஒரு த்ரில்லர் படம், நான் பார்க்க அமர்ந்த சமயம், பாதி படம் முடிந்து விட்டிருந்தது, தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, இருந்தும் படம் பரபரப்பாக இருந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் இருந்தது! நேரம் ஆகி விட்ட படியால், டீவீயை அணைக்க வேண்டிய கட்டாயம், இல்லையேல் அடுத்த நாள் காலை எந்திரிக்க முடியாது. அரை மனதோடு படுக்க சென்றேன்…. அடுத்து என்ன ஆயிற்று, என்ன ஆயிற்று என்ற புலம்பலோடு தூங்கி போனேன்!!
சிறு வயதில் இருந்தே, ஒரு பழக்கம், எந்த கதை புத்தகத்தை எடுத்தாலும், கதை முடிவு தெரியாமல் எந்திரித்ததில்லை.. அது இன்னிக்கு வரைக்கும் அந்த ஆர்வம் குறையவே இல்லை… அதே ஆர்வத்தோடு, அடுத்த நாள் காலை, என் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, இணையத்தில் Murder3 படத்துக்கான விமர்சன பக்கங்களை தேடி, தேடி படித்தேன், அப்போ தான் தெரிந்தது, இந்த படத்தை, ‘La Cara Oculta(The Hidden Face’ என்ற Spanish படத்தின் கதையை தான் ஹிந்தியில் எடுத்திருக்கிரார்கள் என்று.. டூப்ளிகேட்டை விட ஒரிஜினல் இன்னும் நல்லா இருக்கும் இல்ல, இணையத்தில் ஒரு வழியாய் தேடி பிடித்து பார்த்து விட்டேன்….
படத்தின் ஹீரோ Adrian, அவனை தான் முதல் காட்சியில் அறிமுக படுத்துகிரார் இயக்குனர்.. அவன் ஒரு புகழ் பெற்ற இசை கலைஞன்.. அவன் தன் உயிர் காதலி அவனுக்காக விட்டு சென்ற ஒளி படத்தை எடுத்து பார்த்து, மனது வெறுத்து போய் அழுது கொண்டிருந்தான்.. அந்த ஒளி படத்தில், அவனுடைய காதலி Belen, தன்னால் இனி ஒரு நிமிடம் கூட அவனுடன் சேர்ந்து இருக்க முடியாது எனவும், தன்னை தேடி வர வேண்டாம் எனவும், இந்த முடிவு தான், இருவருக்கும் நல்லது என்று மிகுந்த மன வருத்தத்துடன் கூறி கொண்டிருந்தாள்.. அழுது முடித்த கையோடு, தன்னை போலவே அழுது கொண்டிருந்த மழையில், தன் காரை எடுத்து கொண்டு, தன் மனதை அமைதி படுத்த Bar க்கு சென்றான்.. மனது வெறுத்த நிலையில், அந்த Barரில் வேலை செய்யும், Fabiana அவனுடைய மன காயத்துக்கு மருந்தாகிறாள்..
மெல்ல அவன் மனதுக்குள் நுழைந்த Fabiana, அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறாள். பெலென் விட்டு, விட்டு சென்றதை, கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தான் Andrean.. அவர்கள் தங்கி இருந்த வீடு, Columbiaவில் Bogota என்ற மாநகரத்தில், ஊருக்கு வெளியே ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் அமைந்திருந்தது! சற்றே பெரிய, அழகான, அமானுஷ்யமான வீடு அது.. அந்த வீட்டில், வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான நாய் ஒன்றும் இருந்தது. அதன் பெயர் Hans.
Fabiana , தனியாக இருக்கும் போது சிறிது பயமாகவே இருக்கிரது.. நிறைய விஷயங்கள் வித்யாசமாக அவள் கண்ணில் படுகிரது.. முக்கியமாக, அவள் குளியலறையில் இருக்கும் போது, தண்ணீர் தேங்கி இருக்கும் வாஷ் பேசினில், அலைகளை கவனிக்கிராள்..வாஷ் பேசின் குழாய் வழியாக, சன்னமாக ஒரு ஒலியை உணர்கிராள். அவ்வப்பொழுது, லோக்கல் போலீஸ், காணாமல் போன Belen பற்றி , விசாரித்து செல்கிரார்கள். அதில் ஒரு போலீஸ், Fabiana உயிருக்கு உயிராக காதலிப்பவன்! அவனுக்கு, Fabiana, Adrianனுடன் வந்து இருப்பதில் சிறிது வருத்தம் தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை எச்சரிக்கை செய்கிரான்.. Fabiana, புது பணக்கார காதலன் கிடைத்த மோகத்தில் எதையும், சட்டை செய்ய மறுக்கிறாள்.. Fabiana வுக்கு, அந்த வீட்டில், அடுதடுத்து ஆச்சரியங்கள், காத்து கொண்டிருந்தன.. ஒரு செய்னில், கோர்த்து வைக்க பட்டிருந்த சாவியை, தற்செயலாக கண்டெடுக்கிறாள்.. ஒன்றும் புறியாமல் அதை எடுத்து மாலை போல அணிந்து கொள்கிராள்.
ஒரு நாள், படுக்கையறையில் உள்ள புத்தக அலமாரி, சிதறி கிடக்கிறது, Fabiana குளியலறையில்,கண்ணாடி முன் நின்று, யாரிடமோ பேசும் சத்தம் கேட்டு, அட்ரியன் ஆச்சரியத்தோடு, உள்ளே நுழைகிறான்.. அவனை கண்டவுடன், பேச்சை மாற்றுகிராள் Fabiana. அவனுடைய, முன்னால் காதலியான, Belen பற்றி, ஏதாவது, தகவல் தெரிந்ததா, என்று அக்கறையோடு விசாரிக்கிராள்! உடனே குறுக்கிட்டு பேசிய Adrian, Belen என்பவள், என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டு, வேறு ஒரு ஆடவனை தேடி சென்று விட்டாள், அவளை பற்றி எதுவும் பேசாதே என்று அவள் வாயை அடைத்து, அவளை அணைத்து கொள்கிரான்.. Adrianனை அணைத்தபடி, படுக்கையறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை முறைத்து பார்க்கிராள் Fabiana!! அந்த கண்ணாடியின் உள்ளே, ஒரு பயங்கரமான, அதிர்ச்சியான, கோபத்தொட கத்தி கொண்டிருக்கும் Belen உடைய முகத்தை, முதன் முறையாக காட்டுகிரார் இயக்குனர்!!!