ஒண்ணு ரெண்டு மூணு நாலு நாலுக்கப்புரம்
கீழ இருக்கிர நாலு பீட கீழ இறக்கிரனும்
அப்புறம் மேல இருக்கிர பீட கீழ இறக்கிரனும்,
அடுத்து ஆறு ஏழு எட்டு ஒன்பது ஒன்பதுக்கப்புரம்
திரும்ப இந்த நாலு பீடையும் கீழ இறக்கிரனும்
அப்புரம் மேல இருக்கிற பீட மேல தள்ளிரனும்…
டேய் டேய் ப்ளீஸ் டா, விட்டிடு டா..
அம்மாவுக்கு நாக்கு தள்ளிரும் போலயே டா..
இப்படிதான் ஒவ்வொரு நாள் சாயுங்காலமும்
பையன் என் உசுர வாங்குவான்
ABACUS CLASS எடுக்கரேங்கிற பேர்ல!
சோம்பேறித்தனமான நேரங்களில்
கடிகாரம் முன்னை விட
சிறிது வேகமாய் ஓடுகிறதோ
என்று மனதில் ஒரு ஐயம் தோன்றினால்
அது இயற்கை தான்!!
T.B
W.B
S.T
DICT
C.W
H.W
2 T.S
.
.
மிஸ்சுக்கும் அம்மாவுக்கும்
மட்டுமே புரிந்த
சங்கேத வார்த்தைகள்
ஸ்கூல் டைரியில்!!
குழம்பு கொதிக்கையில்
ஆளை தூக்கும் வாசனை அளித்து
சுவையை நாக்கில் நர்த்தனம் புரிய வைக்கும்
மசாலா பொடி வகைகள்
வெறுமனே தின்று பார்க்கும் போது
மண் போல் சுவை தருவது
ஆச்சரியம் அளிக்கும் உண்மை!!
சாப்பிட்டு கொண்டே
செய்தி தாள் படிக்கும்
கெட்ட பழக்கத்தை
இன்றோடு விட்டொழித்தேன்
Paradontax ToothPaste முதல் பக்க ADக்கு
என்னுடைய நன்றிகள்
12:16 பிப இல் ஜூலை 26, 2013
நீங்களும் abacus கற்றுக்கொள்ளுகிறீர்களா? குழந்தைகளுடன் சேர்ந்து நாமும் நிறையக் கற்றுக் கொள்ளலாம்.
அம்மாவுக்கும் டீச்சருக்கும் மட்டுமே புரிந்த jargons எங்களுக்குப் புரியவில்லை. ஆனாலும் ரசிக்க முடிந்தது.
மசாலா பொடி தத்துவம் உண்மை. அதில் உப்பு இல்லையே! நாம் சேர்க்கும் புளி, உப்பு இவற்றால் மசாலா பொடி மணம் பெறுகிறது!
கடைசி ஒன்று (டூத் பேஸ்ட்) புரியவில்லை. டியூப் லைட்!
2:55 முப இல் ஜூலை 27, 2013
வாருங்கள் அம்மா!
பையன், அவன் கற்ற Abacus சை, அம்மாவும் கற்று கொள்ளனும் என்று விரும்புகிரான், எனக்கு தான் ஒன்றும் புரியவில்லை, முயற்சி செய்து கொண்டிருக்கிரேன்…
மிஸ்ஸுக்கும் அம்மாவுக்கும் இடையே இருக்கும் சங்கேத வார்த்தைகள்,
TextBook
WorkBook
SurpriseTest
Dictation
ClassWork
HomeWork
2 Times
டூத்பேஸ்ட் Ad Photo
நன்றாக உத்து நோக்குங்கள் அம்மா,
யாரோ ஒருவர், பல் தேய்க்கும் போது, வாயில் வரும் நுறையை, சிறிது ரத்தம் கலந்த எச்சிலுடன் WashBasin இல் உமிழ்ந்து இருக்கிரார்! இந்த அரைபக்க செய்தி தாள் விளம்பரத்தை, சாப்பிடும் போது பார்த்தால், எப்படி தான் இருக்கும், நீங்களே சொல்லுங்கள் அம்மா!! நொந்து போய் எழுதியது
3:38 முப இல் ஜூலை 27, 2013
புரியாததெல்லாம் இப்போது புரிந்தது!
நாங்கள் சாப்பிடும்போது சரியாக ஹார்பிக் விளம்பரம் வரும். சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்க்கவேண்டாம் என்று அதை ஒரு எச்சரிக்கையாக நான் என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லுவேன்.
நன்றி மஹா!
8:02 முப இல் மார்ச் 11, 2014
எடுத்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது இட்ட விளம்பரங்களும் கண்ணில் பட்ட காட்சிகளும் .அனைத்தும் சிலர்க்கு தேவை -சிலர்க்கு வேலை-
பூஜையறையை ஒட்டி-அல்லது மேலே கழிவறை ,…
சாப்பிடும் மேசைக்கு நேர் மேல் மாடியில் கழிவறை ,..
அருவெறுப்பு கொண்டால் அரிசி வந்த விதம் அறிந்தால் உணவுண்ண வோ வாழவோ முடியாது to–ரஞ்சனி ,மஹா …………
அதுவும் ஒரு பெண் அருவெறுப்பு கொள்வது = பெண்மையை வெறுப்பது
9:26 முப இல் மார்ச் 11, 2014
வாங்க சார்,
உங்கள் வார்த்தைகளை எப்படி எடுத்து கொள்ள வேண்டுமோ அப்படி எடுத்து கொண்டேன்.. ஒரு நல்ல அறிவுரையாக.. நன்றி 🙂