எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


8 பின்னூட்டங்கள்

அப்பப்ப கொஞ்சம் பக்கத்த காணோம்

படம்
நம்ம வாழ்க்கை பாதையில், நாம எத்தனையோ பேர சந்திக்கிறோம், எத்தனையோ விஷயங்களை கற்று கொள்கிறோம், ஆன சிலரோட மட்டும் தான் உண்மையான நட்போட,கை கோர்த்து நடந்து செல்கிறோம்! அப்படிபட்ட ஒரு நபரை, நண்பரை பற்றி தான் இந்த பதிவு.. இவர் எனக்கு 2001 வருடத்தில் தான் அறிமுகமானார், அப்பவே அவர் ரொம்ப ஸ்மர்ட்.. மூன்று, நான்கு தடவை, அவரை அருகில் இருந்து கவனித்து இருக்கிறேன், அதற்கு அப்புறம், அவரை தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவே இல்லை! கிட்டதட்ட நிறைய வருடங்கள் கழித்து, 2010 இல் தான் திரும்பவும் சந்தித்து கொண்டோம்.. நிறையவே மாறி இருந்த்தார், அவருக்கு வருடங்கள் ஏற ஏற வயது குறைந்து கொண்டே செல்கிறதோ, என்ற ஐயம் கூட தோன்றியது..

அவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை, உதவி என்று வந்தவருக்கு, ஹெல்ப் பண்றதாகட்டும், எப்பவும், Mr.ஸ்மர்ட் என்பதை, நான் சந்தித்த ஒவ்வொரு தருணங்களிளும், நிரூபித்து காட்டினார்.. அறிவு கடல் அவர், தனக்கு தெரிந்தவற்றை, உள்ளது உள்ளவாறு அழகாக எடுத்துரைப்பார்.. எனக்கு மனதில் என்ன சந்தேகம் உதித்தாலும், முதலில் இவருடய நியாபகம் தான் வரும். என் குடும்பத்தில், ஒருவராகவே ஆகிவிட்டார்! அறிமுகமான சில தினங்களிளேயே என் பசங்களுக்கு மிகவும் பிடித்தமானவாராக ஆகி விட்டார்!! நிறைய கதைகள் சொல்வார், நிறைய விளையாட்டு என்று எப்பவும் குழந்தைகளை பிசியாக வைத்திருப்பார்..எனக்கு அப்பப்ப சமையல் டிப்ஸ், என் கணவர் கூட பல முக்கியமான முடிவுகளை எடுக்க, அவரிடம் யோசனை கேட்பார்..

இப்படிபட்ட,அறிவு களஞ்சியம், அறிவு ஜீவி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தீடிரென்று, எதிர்பாராம, கோமா நிலைக்கு சென்று விட்டால் எப்படி இருக்கும்..முதன் முதலில் அவருக்கு அப்படி ஆனது, ஒரு வருடம் முன்னால்.. எங்களுக்கெல்லாம், அவருடைய இந்த நிலைமை தூக்கி வாரி போட்டு விட்டது! அப்பப்ப நினைவு வரும்,நம்ம பேரை சொன்னால், முதலில் தெரிந்த மாதிரி காண்பித்து கொள்வார், ஆஹா என்று சந்தோஷப்பட்டால், அடுத்த நிமிடமே, நீங்க யாருனு கேட்பார்!!! ரொம்பவே, உடைந்து போய் விட்டோம்.. ஒரு சின்ன குழந்தை மாதிரி, எது கேட்டாலும், தெரியல, தெரியலனு, கிளி பிள்ளை மாதிரி, சொன்னதையே திருப்பி திருப்பி சொன்னார்… எங்களுக்கோ, ஒரு கை உடைந்து போனதாய் ஒரு ஃபீலிங்க்!! அவரை எப்படியாவது பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகளை ஆரம்பித்தோம்.. ஒரு நண்பர் எங்களுக்கு, அவரை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு உரிய மருந்தான ‘EC PC CLEANERரை’ சிபாரிசு செய்தார்!

அது நன்றாகவே வேலை புரிந்தது… அது முதல் வேலையாய், எங்கள் LAPTOP இல் உள்ள System Cache Memory யை , ஒட்டு மொத்தமாக காலி செய்தது.. தேவை இல்லாத Cookies, Browsing History எல்லவற்றையும் கிளியர் செய்தது.. அதன் பின்னரும், முழுதாய் நினைவு வந்த பாடு இல்லை எங்கள் நண்பருக்கு!! இவ்வளவு தூரம் வந்தாச்சு, அவரை அப்படியே, விட்டு விடுவோமா என்ன, எத்தனை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம், அவருக்கு, நாங்கள் அடிக்கடி எடுத்து பார்க்கும் இணைய தளங்கள், அத்தனையையும், அடிக்கடி எடுத்து காண்பித்து, ஒரு வழியாய்,சிறிது, சிறிதாக அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தோம்! எங்களுக்கு எவ்வளவோ, உதவி செய்த அவருக்கு, எங்களால முடிந்த சின்ன உதவி!!!

இப்பவும், எங்கள் உற்ற நண்பர், அதாங்க எங்கள் ,Internet Browser அடிக்கடி கோமா வில் விழதான் செய்யரார், அப்பப்ப பக்கங்கள் காணாமல் தான் போகின்றன, இருந்தாலும், ‘EC PC CLEANER’ இருக்கும் போது கவலை எதுக்கு!!!