எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -6

4 பின்னூட்டங்கள்

Threading இன்றைய
பெண்களுக்கு மட்டுமே 
உரித்தான புருவத்தை
சீர் திருத்தும் 
அழகு கலை அல்ல
ஆண்கள் அந்த காலத்திலேயே
செய்து பார்த்திருக்கிரார்கள்

.
.
.
பென்சில் மீசை!!

படம்

கட்டாய 
மல்லேஸ்வரிகளாகும்
பூவையர்
.
.
.
.
.
இருபது லிட்டர்
தண்ணீர் கேனை
ஒரே தம்மில் தூக்கி
கவிழ்த்தும் நம்
வீட்டு பெண்கள்!!

படம்

 

அதிகாலை நேர
ஒரு நொடி சபலம்
காலை நேரம் 
முழுக்க அவலம்
.
.
.
.
Snooze செய்வதற்கு
பதிலாய் தெரியாமல்
Dismiss செய்யப்பட்ட
அலாரம்!!

படம்

ரச வடை ருசிக்கும்
ரச மலாய் இனிக்கும்
மாம்பழ ரசம் தித்திக்கும்
மாதுளங்காய் ரசம் துவர்க்கும்
குமட்டி கொண்டு வரும் 
ஒரே ரசம்
.
.
.
ரஸ்ஸே வாலே நூடுல்ஸில் உள்ள ரசம்!!

படம்

 

4 thoughts on “சில எண்ணங்கள் -6

  1. கட்டா ய மல்லேஸ்வரிகளும், பென்சில் மீசை ஆண்களும் , ரசமும் உங்கள் கைவண்ணத்தில் மேலும் அழகு பெற்றன.

  2. பென்சில் மீசையும், கட்டாய மல்லேஸ்வரிகளும் ரசிக்க வைத்தன.
    நல்லகாலம் வீட்டில் வாண்டுகள் யாரும் இல்லை. அதனால் நூடுல்ஸ் ரசம் கிடைப்பதில்லை!

    எனக்கு சாதாரண நூடுல்ஸ் கூடப் பிடிக்காது.

    உங்களது எண்ணங்கள் ரசிக்க வைக்கின்றன.

பின்னூட்டமொன்றை இடுக