எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -7

8 பின்னூட்டங்கள்

10 பைசா 10 பைசாவாக திருடும்
மானங்கெட்ட திருடன்….
முழுதும் திருடி விட்டு சொல்வான்
.
.
.
More Than full talktime only for you!
AIRTEL!!

படம்

நாள் பூரா
விடாமல் லைட்டா
வயிறு பசித்து
கொண்டே இருந்தா..
உங்க ஊருல
விடாம மழை
வெளுத்து வாங்குதுனு
அர்த்தம்!!

படம்

பார்த்து பார்த்து
பொறுமையாய்
காம்போடு பிய்க்க
நினைத்த அந்த ஒரு
வாழைப்பழம் தவிர
இழுத்த இழுப்பில்
சீப்பில் உள்ள
மற்ற அனைத்து பழமும்
காம்பில்லாமல் அறுந்து
விழுந்தா கண்டிப்பா
நினைக்க தோணும்
நமக்கு மட்டும் ஏன்
இப்படி எல்லாம் நடக்குதுனு!!

படம்

மழையும் பாரதிராஜா படமும்
ஒன்னு தான்..
ஆரம்பத்தில் மண் வாசனையோடு
நம்மை வசீகரித்தாலும்
போக போக இல்லாத
துர்நாற்றத்தை எல்லாம்
கிளப்பி விட்டு
பெஞ்சு முடிஞ்சா தேவலை
என்று நினைக்கும் அளவுக்கு
நம்மை ஓட ஓட விரட்டும்!!

படம்

8 thoughts on “சில எண்ணங்கள் -7

  1. கடைசியாக இருப்பதை மிகவும் ரசித்தேன்

  2. ”…இழுத்த இழுப்பில்
    சீப்பில் உள்ள
    மற்ற அனைத்து பழமும்
    காம்பில்லாமல் அறுந்து
    விழுந்தா கண்டிப்பா
    நினைக்க தோணும்
    நமக்கு மட்டும் ஏன்
    இப்படி எல்லாம் நடக்குதுனு!!..”

    வியப்படைய வைக்கும் சிந்தனைகள் மிக ரசித்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

  3. என்ன மஹா! வெளுத்து வாங்கறீங்க! நான் இப்ப ‘அப்பப்ப லைட் ஆ தின்னுகிட்டே இருக்கேன். உங்க கவிதை படித்தவுடன் வெளியில் பார்த்தால் அட! ஆமா, மழை!

    வாழைப்பழ எண்ணம் ஜூப்பரு!

    பாரதிராஜாவுக்கு தொலைபேசிட்டேன். உங்க மேல கேசு போடப் போறாராம்! இந்த எண்ணங்களில் இதுதான் டாப்பு டக்கரு!

    • நன்றி அம்மா! என் அப்பா பெரிய பாரதிராஜா ரசிகர்! இதை படித்து விட்டு சொன்னாங்க, புதிய வார்ப்புகள் படத்தை பார், எண்ணத்தை மாற்றி கொள்வாய் என்றார் 🙂

  4. நீயும் வெளுத்து வாங்குகிறாய். எப்படியெப்படியெல்லாம் எண்ணங்கள் போகிரது? அழகாக ரஸிக்க முடிகிறது. அன்புடன்

பின்னூட்டமொன்றை இடுக