அம்மா : என்னடா சனி கிழமையும் அதுவுமா ஒரே சோகமா இருக்க ??
பையன் : என் கிளாஸ் மேட் சொன்னான் ஏதோ ஒரு செயிண்ட் கரெக்டா second saturday அன்னைக்கு போய் சேர்ந்துட்டாராம்… அதனால தான் எல்லா second saturday வும் லீவு விடுறாங்களாம்.. அவரு போனதே போனாரு ஒரு third saturday போயிருக்கலாம்… இன்னிக்கு லீவா இருந்திருக்கும்..
அம்மா : அடபாவி ! சரி யாருடா அந்த செயிண்ட்???
பையன் : யாரோ John L . Baird
அம்மா : என்னடா டீவீ கண்டு புடிச்சவரை போய் செயின்ட் அது இதுனு சொல்ற?
பையன் : ஹீ.. ஹீ.. உங்களுக்கு தெரியுமா.. நான் உங்களுக்கு என்னத்த தெரிஞ்சிருக்க போதுனு வாய்க்கு வந்த பெயரை அடிச்சி விட்டேன்..
அம்மா : !!!
பையன் : அம்மா.. ப்ளீஸ்.. Wash the affected area with lime water. Apply baking soda and cold cream. place ice pack on the affected area . If its itching apply calamine lotion… ஹும்.. ஹும்.. சீக்கிரமா…
அம்மா : டேய்.. கொசு உன்னைய கடிச்சதுக்கு பதிலா என்ன கடிச்சிருக்கலாம்! உஸ்.. அப்பா.. முடியல!
பையன்: என்னம்மா.. பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஏதோ ஒரு கவரை உங்க கையில கொடுத்து உள்ள கோப்ரா இருக்கு கொஞ்சம் உங்க வீட்டு பிரிட்ஜ் உள்ள வையுங்கனு ஹிந்தில சொல்லிட்டு போறாங்க.. நீங்களும் ஈ..ன்னு சிரிச்சிட்டே வாங்கி உள்ள கொண்டு போறீங்க! உள்ள நிஜமாவே cobra வா இருக்கு???
அம்மா : ஆமா! cobra வை புடிச்சி carrybag ல கட்டி வெச்சி பிரிட்ஜ் உள்ள வைக்க போறேன்.. யாரு டா அவன்… கொப்பரை தேங்காய் டா !!
தொண்டை புண்ணால் அவதியுற்று
வாயை திறந்தால் வெறும் காற்று
தான் வரும் என்ற சூழ்நிலையிலும்
முந்தைய நாள் ஸ்கூல் கபோர்டில்
தன் பின் மண்டையை இடித்து
கொண்ட நாலாம் வகுப்பு
படிக்கும் என் தவப்புதல்வனை
ஸ்கூலில் இருந்து வீடு திரும்பிய
உடன் முதல் வேலையாய் குசலம்
விசாரிக்க எண்ணி அவன் பின் மண்டையை
என் கைகளால் சுட்டி காட்டி முக
பாவனைகளாலும் என் கைகளையும் ஆட்டி ஆட்டி
இப்ப எப்படி டா இருக்கு என்று அக்கறையோடு
கேட்க அவனும் சிறிது நேரம் யோசித்து
சொன்னான்.. எனக்கு Dandruff problem
எதுவும் இல்லையே!!
அம்மா : ஹே.. ஜாலி! இன்னிக்கு டின்னர் வெளில..
அப்பா இப்போதான் கால் பண்ணினாங்க..
பையன் : என்ன ஜாலி?? ஓஹோ.. நீங்க சமையல் பண்ண
வேண்டியது இல்லையோ.. எனக்கும் ஜாலி தான்..
நீங்க சமையல் பண்றத இன்னிக்கு நான் சாப்பிட
வேண்டியதில்லை..
அம்மா : !!!!!
12:57 முப இல் திசெம்பர் 3, 2014
ஹிஹி…
எவ்வளவு நல்ல சாப்பாடு செய்து தருகிறார்கள்…! ஹா…. ஹா…
4:24 முப இல் திசெம்பர் 3, 2014
வாங்க தனபாலன் சார்! பதிவை படித்து ரசித்து சிரித்து கருத்துரை இட்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂
8:37 முப இல் திசெம்பர் 3, 2014
வெளியில் சாப்பாடு உங்களுக்கும் ஜாலிதான்.மெனுதான் என்னவோ?
4:09 முப இல் திசெம்பர் 4, 2014
ஆம் காமாட்சி அம்மா! நாமே நமது கையால் சமைத்து சாப்பிட்டு விட்டு சில நேரம் வேறொருவர் சமைத்து நமக்கு சாப்பிட தந்தால் நன்றாகத்தான் இருக்கும் 🙂
4:50 பிப இல் திசெம்பர் 6, 2014
அருமை அருமை மேடம். நல்ல பொழுதுபோக்குப்பதிவு!
4:45 முப இல் திசெம்பர் 8, 2014
நன்றி ஆறுமுகம் சார்! ஆமாம் சார்.. பொழுதுபோக்க எழுத படுவது தான் நிறைய… இதை படித்து யாரேனும் மனம் விட்டு சிரித்தால் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன் 🙂
10:59 முப இல் திசெம்பர் 9, 2014
அம்மாவும் பையனும் சரியான ஜோடி தான்!
பெஸ்ட் ஜோக் என்றால் தொலைக்காட்சி கண்ட்பிடித்தவரை செயின்ட் ஆக்கியதுதான். எப்படித்தான் சமாளிக்கிறீங்களோ, இந்த தலைமுறைக் குழந்தைகளை!
9:45 முப இல் திசெம்பர் 10, 2014
வாங்க ரஞ்சனி அம்மா.. ஆமாம் அம்மா , இரண்டு பேரும் எலியும் பூனையும் தான் 🙂 சிறு வயதில் என் உடன் பிறந்த சகோதரனுடன் இப்போ என் மைந்தனுடன்…… வயோதிகத்தில் அநேகமாக பேரனுடன் இது போல் பேசி கொண்டிருப்பேனோ என்னவோ 🙂