எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -28

7 பின்னூட்டங்கள்

கணவனை முழுவதும் புரிந்து
கொள்ள முடியாது என்பதை மனைவியும்
மனைவியை முழுவதும் புரிந்து
கொள்ள முடியாது என்பதை கணவனும்
புரிந்து கொள்ளும் போது மகிழ்ச்சியான
வாழ்க்கையின் ரகசியம் புரிந்து போகிறது!!
images (5)
‘சன்’நை புகைப்படம்
எடுக்க எத்தனிக்கையில்
சைக்கிள் கேப்பில்
புகுந்து விட்ட
சண்டாளன்!!
1460127_549784751781105_1967711882_n
முந்திரி பருப்பு இருந்தா
தூத்துகுடிகாரங்க மக்ரூன் செய்வாங்க..
திருநெல்வேலிகாரங்க முந்திரி அல்வா செய்வாங்க..
சூரத்காரங்க காஜு கத்ரிசெய்வாங்க..
கொடுமை கொடுமை..
இந்த குண்டூர்காரங்க மட்டும் வெல்லம் போட்டு
முந்திரிமிட்டாய்(இத வேற எப்படி சொல்றது)
செஞ்சு வைக்கிராங்க
இதை எப்படி சாப்பிடறது!!
1422435_550407868385460_201639140_n
அடி மேல் அடி விழும் போது
அவசரப்பட்டு உடைந்து விடாதீர்கள்
செதுக்கிவிடப்பட்டு கொள்ளுங்கள்
யார் கண்டார் நாளை அழகு மிளிரும்
சிலையாகவும் உருமாறலாம்!!
images (4)
மெனக்கெட்டு மனப்பாடம் செய்த
என் மொபைல் நம்பர் முக்கிய
மொமென்டில் மறந்து என்னை
மலங்க மலங்க முழிக்க வைத்து
மானத்தை வாங்குவதேனோ!!
images (3)
டேய் கொஞ்சமாவது அறிவிருக்கா??
என்று என் பையனிடம் இப்பவெல்லாம்
கேக்கவே முடியரதில்லை..
தப்பி தவறி கேட்டு விட்டால் பதிலுக்கு
உங்களுக்கு அறிவிருந்தா எங்க என்ன விட
ஸ்பீடா 16த் டேபிள் சொல்லுங்க பார்ப்போம்!!
16-times-table-multiplication-chart
அம்மா 3/9 + 6/9 என்ன வரும் சொல்லுங்க..
இது சிம்பிள் டா 1 வரும்
பரவாயில்லையே கரெக்டா சொல்லுறீங்க
ஓல்ட் ஏஜ் ல Fraction எல்லாம் உண்டா…
ஓல்ட் ஏஜா விட்டா ஸ்டோன் ஏஜ்னு சொல்லுவான் போல!!
fractions_3bmu

7 thoughts on “சில எண்ணங்கள் -28

 1. வணக்கம்
  ஒவ்வொரு எண்ணங்களும் ஒவ்வொன்றைப் பற்றி வித்தியாசமான சிந்தனையில் அமைந்துள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்

  என் வலைப்பூபக்கம் வாருங்கள் வாருங்கள் அன்புடன்….
  உயிரில் பிரிந்த ஓவியமாய் என்ற தலைப்பில் கவிதையாக …புதிய பதிவு…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. பதிவு அருமை.
  இனிய வாழ்த்து.
  Vetha.Elangathilakam.

 3. //சன்’ னை புகைப்படம்
  எடுக்க எத்தனிக்கையில்
  சைக்கிள் கேப்பில்
  புகுந்து விட்ட
  சண்டாளன்!
  ஏங்க எங்கூர்ல அதை “ரயிலு” ன்னு சொல்லுவோம். ஒங்க ஊர்ல அதைத்தான் “சைக்கிள்” ன்னு சொல்லுறீங்களா

 4. புரிதல் பற்றிய கவிதையை ரசித்தேன்.புரிந்தும் புரியாமலும் இருக்கிற எது ஒன்றுமே
  சுவாரஸ்யம் தான் . மண வாழ்வின் ரகசியத்தை இப்படி போட்டு உடைத்து விட்டீர்களே!
  எந்த தைரியத்தில் சண்டாளன் என்று திட்டு கிறீர்களோ தெரியவில்லை. சும்மாவே டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பு. இனிமேல் கஷ்டம் தான். எனக்கில்லை உங்களுக்கு.
  வாய்ப்பாடு இப்பவாவது மனப்பாடம் ஆனதா இல்லையா? ஜாக்கிரதை உங்கள் பையனிடம் சொல்லி விடுவேன்.
  ஓல்ட் ஏஜ் கவிதையையும், அதற்கு உங்கள் நண்பர் கொடுத்திருந்த கமெண்டும் (FB)
  ரசிக்க வைத்தன.

  எப்பவும் போல் கலக்கல் எண்ணங்கள்.

  • ராஜி மேடம், நான் ரயிலை சண்டாளன் என்று சொல்வதில் எந்த தப்பும் இல்லை, நாங்கள் இரண்டு மாதம் முன்பே, டிக்கட் பதிவு செய்து தீபாவளிக்கு கிளம்பினால், மிகவும் தாமதமாக முதலாம் ரயில் சென்று, இரண்டாம் ரயிலை நாங்கள் தவற விட காரணமாகியது 😦 கடைசியில் லேட் நைட் தீபாவளி கொண்டாடினோம் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s