எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -22

8 பின்னூட்டங்கள்

தேவைக்கு அதிகமா
உணவு உட்கொள்ளும் போது
குண்டாயிடறது நீங்களோ
உங்க வீட்டு நாய் குட்டியோ மட்டும்
அல்ல உங்க வீட்டு ரீசார்ஜபல்
பேட்டரிகளும் தான்!

படம்

 

ஒரு வாரத்துக்கு ஷட்டரை இழுத்து மூடு
என்று கணவரின் அலுவலகத்துக்கும்
கேட்டை இழுத்து சாத்து
என்று பிள்ளைங்களின் ஸ்கூலுக்கும்
அன்பு கட்டளை பிறப்பித்திருக்கும்
போராட்டகாரர்கள் ஒருத்தர் கூட
என்னை ஒரு வாரத்துக்கு வேலை செய்யாதே
என்று சொல்ல மாட்டீகிராங்க…
Samaikyandhra Agitation!! — feeling sad in Guntur.

படம்

 

உலக வரலாற்றில் 
முதன் முறையாக
துருவ கரடியும்
நம்மூர் கரடியும்
இணைந்து மிரட்டும்
இராம நாராயணனின்
புத்தம் புது திரைபடம்
ஆர்யா சூர்யா!

படம்

 

நாளையில் இருந்து முழு
மூச்சோடு பந்த் செய்ய
போறாங்களாம் என்னவோ
இவ்ளோ நாள் வென்டிலேட்டர்
உதவியோடு பந்த் செஞ்சா மாதிரி!! — feeling irritated in Guntur.

படம்

 

எவுக வந்து நின்னாலும்
சரியா காது கேட்காது
முழுசா பார்வை தெரியாது
ஒழுங்கா பேச முடியாது..
.
.
.
.
.
When ur connection is too slow
in Skype than the opponent!!

படம்

கண்டவுடன் உண்டானதோ மலைப்’பூ’
மறு நொடி உள்ளம் கொண்டதோ பூரிப்’பூ’
இது நாவில் சுவைத்ததோ இனிப்’பூ’
அதிகாலை நேர எதிர்பாராததொரு களிப்’பூ’.

படம்

8 thoughts on “சில எண்ணங்கள் -22

 1. rechargeable பாட்டரிகள் பற்றிய எண்ணம் சற்று குழப்புகிறது.
  நீங்கள் சொல்வது போல் நாமும் பந்த் செய்தால் என்ன என்று நினைப்பதுண்டு. ஒரு பதிவு எழுதும் அளவிற்கு அதில் விஷயம் அடங்கும்.
  ஆர்யா, சூர்யா, தேங்காய் பூ என்று எல்லாவறறையுமே ரசித்தேன் மஹா.

  • Bloated batteries கேள்வி பட்டது இல்லையா நீங்கள்?? அளவுக்கு அதிகமாக சார்ஜ் ஏற்றும் போது பேட்டரிகள் சிறிது உடம்பு பருத்து வீணாகி போவதுண்டு. வந்து ரசித்து பின்னூட்டம் இட்டமைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙂

 2. Closing down the shutters due to agitation , struck a chord. We in Hyderabad went through for years!. I understand and agree about , our work. Once all are at home, our work increases.:-)

 3. இந்தப் பதிவின் எண்ணங்களும் வழக்கம்போலவே சுவாரசியமாக உள்ளன. அதென்னங்க தேங்காய் மூடிக்குள்? கண்டிப்பாக விளக்குமாவு கிடையாது.

  • தேங்காய் உடைக்கும் போது அதற்க்குள் பூ பூத்திருந்தால் மிகுந்த விசேஷமாக சொல்லுவார்களே கேள்வி பட்டதில்லையா நீங்கள்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா அக்கா 🙂

 4. ”..அதென்னங்க தேங்காய் மூடிக்குள்..”
  இதை நாம் பூரான் என்று கூறுவோம். சாப்பிட மிகவும் சுவையானது.
  வேதா. இலங்காதிலகம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s