எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -44

20 பின்னூட்டங்கள்

யாதொரு இழப்பின் கொடுமையையும்
தாங்கி கொள்ள சிறு வயதிலிருந்தே
மனம் பழகி கொள்ளுகிறது நாம் ஊதிய
ஒவ்வொரு பலூன் உடையும் போதும்!!

படம்

உன்னால்
தலை முதல் கால் வரை
உருகுகிறேன்..
உன் தலை மறைந்த பின்பும்
மருகுகிறேன்..
இது எது வரையில் என்று
மருளுகிறேன்..
உன் குளிர் முக நினைவில்
வருந்துகிறேன்..
கோடை வெயில்!

படம்

எந்த ஒரு மருத்துவரை 
பார்க்க கூட்டம் கொள்ளே
கொள்ளே என்று நிற்கிறதோ
அங்கே யாரும் சொல்லாமலே
நாம் அறிந்து கொள்ளும் ரகசியம்
அங்கே கொள்ளையடிக்கப்படுவதில்லை!!

படம்

 

பெயர் என்னது??
ப்ளேசரா இல்லை..
பைஜாமாவா இல்லை..
குர்தாவா இல்லை..
ஐய்யோ என்ன பெயர்..
என்ன பெயர்..
ஆங்.. நியாபகம் வந்தது
ஷெர்வானி
ஒவ்வொரு தடவை கூப்பிட
நினைக்கும் போதும் மறந்து
தொலைக்கும் பக்கத்து வீட்டு
பெண்ணின் பெயர்!!

படம்

பார்த்த பின்னே ஏற்படும் 
பரவசத்தை விட பார்ப்பதற்கு 
முன்னே ஏற்படும் எதிர்பார்ப்புடன்
கூடிய பரவசமே கூடுதல் மகிழ்ச்சியை தருவது..

படம்

 

கொட்டுகிற அருவியில்
காட்டாற்று வெள்ளத்தை
கோர்த்து விட்டாற் போல்
கோடை காலத்து கடும்
வெயிலில் மின் தடையும்
கை கோர்த்து கொள்ள
ஊத்தி தள்ளுகிறது வியர்வை!!

படம்

 

20 thoughts on “சில எண்ணங்கள் -44

  1. பலூன் கவிதையும், வியர்வையும் புன்னகையை வரவழைத்தது.
    ஷெர்வானி என்று பெயரா? எனது மருமகள் அலுவலகத்தில் பாண்டா என்று ஒருவர்! அவரது குடும்பப்பெயராம் அது.
    என்னிடம் படிக்க வந்த ஒரு மங்கோலிய மாணவரிடம் பெயர் கேட்டதற்கு ‘எனது பெயர் கூப்பிடுவது கடினம். You can call me Nuts! அவர் எதிரில் நிற்பதையும் மறந்து நான் சிரித்த சிரிப்பு!

    உங்களின் நகைச்சுவை இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளரட்டும், மஹா! வாழ்த்துக்கள்!

    • வாங்க ரஞ்சனி அம்மா! நான் ஷெர்வானி பெயர் கேட்டவுடன் ஷாக் ஆகி விட்டேன்! பிறகு தனியாக இருக்கும் போது யோசிக்கையில் சிரிப்பு வந்தது 🙂 பாண்டா என்று கூடும்ப பெயரா? சிரிக்காமல் எப்படி இருக்க முடியும் 🙂 இன்று காலை கூட நியூஸ் வாசிப்பவரின் கடைசி பெயர் குண்டு என்று போட்டிருந்தது 🙂 வருகைக்கு மிக்க நன்றி அம்மா:)

  2. சிறிய பிரேக் பிறகு வந்திருக்கிறீர்கள். வருக

  3. ஷெர்வானி ரஸிக்கும்படியான பெயர். மற்றதெல்லாம் ரஸித்தேன்.இந்தப் பொண்ணு எப்படி சிந்திக்கிறது நான் சிந்தித்தேன். அன்புடன்

    • வாங்க காமாட்சி அம்மா! உங்கள் உடல் நலம் தேறி விட்டதா! நீங்கள் இந்த பதிவை படித்து, ரசித்து, பின்னூட்டம் இட்டு தெரியப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂

  4. மஹாவின் பதிவில், பலூங்கள் எல்லாம் சாமியாராகி தத்துவம் பேசுகிறதே ! உண்மை தானே அது ரசித்தேன். ஷெர்வானி பெயரை நினைவிற்குக் கொண்டு வர நீங்கள் பட்ட பாடு…..ஹா……ஹா……..கோடை காலம் பற்றியக் கவிதைகள் அசத்தல். தொடருங்கள் மகா……உங்கள் முக நூலிலும் அசத்தல் ஸ்டேடஸ்.. ரசிக்கிறேன்…..

    • வாங்க ராஜி மேடம்! ஸ்கூல் லீவு விட்ட படியால் எதாவது குழந்தைகளுக்கு விளையாட குடுக்க வேண்டும் இல்லையா.. பலூனை ஊதி ஊதி உடைத்து கொண்டிருக்கிறோம்! ஒவ்வொரு தடவை உடையும் போதும் மனது தாங்காமல் அழுது விடுவான் எங்கள் குட்டி பையன் 🙂 ஷெர்வானி எங்கள் பக்கத்து வீட்டு 2 வயது குட்டிப் பெண் 🙂 உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி மேடம் 🙂

  5. “கொட்டுகிற அருவியில்
    காட்டாற்று வெள்ளத்தை
    கோர்த்து விட்டாற் போல்
    கோடை காலத்து கடும்
    வெயிலில் மின் தடையும்
    கை கோர்த்து கொள்ள
    ஊத்தி தள்ளுகிறது வியர்வை!!” என்ற
    அடிகளை படிக்கையிலே
    தமிழகத்தில் கத்திரி வெயிலும்
    யாழ்பாணத்தில சித்திரை வெயிலும்
    கண் முன்னே பார்க்க முடிகிறதே!

  6. //ஆங்.. நியாபகம் வந்தது
    ஷெர்வானி
    ஒவ்வொரு தடவை கூப்பிட
    நினைக்கும் போதும் மறந்து
    தொலைக்கும் பக்கத்து வீட்டு
    பெண்ணின் பெயர்!!//

    எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறீர்கள் மகா! அனைத்து எண்ணங்களும் அருமை..

    • வருக வருக தியானா ! என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.. நான் ஊருக்கு சென்றிருந்ததால் என்னால் உடனே பதில் அளிக்க முடியவில்லை! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி 🙂

  7. ”..நாம் அறிந்து கொள்ளும் ரகசியம்
    அங்கே கொள்ளையடிக்கப்படுவதில்லை..”
    இடைவேளை விட்டிருந்தீர்களா?
    எழுத்தில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
    அனைத்தது வரிகளும் மிக மிக ரசனையாக உள்ளது. வாருங்கள்
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    • வணக்கம் சகோதரி! இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று தான் வொர்ட்பிரசை திறந்தேன்! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! கண்டிப்பாக விரைவில் உங்கள் தளத்துக்கு வருகிறேன் 🙂

  8. எந்த ஒரு மருத்துவரை
    பார்க்க கூட்டம் கொள்ளே
    கொள்ளே என்று நிற்கிறதோ
    அங்கே யாரும் சொல்லாமலே
    நாம் அறிந்து கொள்ளும் ரகசியம்
    அங்கே கொள்ளையடிக்கப்படுவதில்லை!!
    —————-

    ஏதோ ஒரு மருத்துவமனையில் இருந்தபொழுது தோன்றியதென்று நினைக்கிறேன்
    🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s