எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சும்மா ஒரு நிஜ கதை

15 பின்னூட்டங்கள்

அது ஒரு இரவு நேரம், மணி சரியாக, 8:30, நித்யா, அவள் பெற்றோர், அவளோட பசங்க, எல்லாரும் ரெடியாக, கார் சீறி கொண்டு கிளம்பியது! கிளம்பிய பத்து நிமிடம் வரை எல்லாம் நினைத்த மாதிரி தான் நடந்து கொண்டிருந்தது! நித்யாவின் கண்கள் அவ்வப்பொழுது ஸ்பீடோ மீட்டரை பார்த்த வண்ணம் இருந்தது! முள், 40க்கும் 50க்கும் இடையே அல்லாடி கொண்டிருந்தது, அவள் மனதை போல! முள் 50ஐ தொட முயன்று முயன்று தோற்று போனது! நித்யாவுக்கு, ஸ்பீட் படம் சம்பந்தம் இல்லாமல் நியாபகம் வந்தது!

7 நாளாக இப்போ பெய்யரேன், அப்போ பெய்யரேன்னு ஏமாற்றி கொண்டிருந்த மழை , அந்த நிமிடம் சோ வென்று பெய்ய தொடங்கியது! காற்றுடன் கூடிய பெரிய மழை! சாதாரணமான நாட்களில், நித்யா மழையின் பெரிய ரசிகை! ஆனால், அன்று அவள் மேல் தெறித்த ஒவ்வொரு மழை துளியும் எரிச்சலை கிளப்பியது! அவசர அவசரமாக, கார் கதவின் கண்ணாடியை ஏற்றி விட்டாள்!

அமைதியான கடல் போல ரொம்ப தெளிவாக இருந்த அவளது உள்ளம், அந்த நிமிடங்களில்,சூராவளியில் சிக்கி கொண்ட படகு போல் ஆனது! எவ்வளவு மனதை கட்டுப்படுத்த முயன்றும், முடியாமல் தோல்வியை தழுவினால் நித்யா! ஸ்பீடோ மீட்டரையும், கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள்! கார் மழையின் சீற்றம் தாங்காமல், நத்தையை விட வேகமாய், ஆமையை விட சிறிது வேகத்தில் கம்மியாய் ஊர்ந்து கொண்டிருந்தது! முள் இப்போது 20 ஐ தொட்டு கொண்டு இருந்தது! கிளிஞ்சது போ, என்று நித்யாவின் மனம் அங்கலாய்த்தது! ஒரே டென்ஷன் அவளுக்கு! சரியாக, 9:50 க்கு அவள் நினைத்தது நடக்க வில்லை என்றால், நினைக்கும் போதே நித்யாவின் மனம் பதறியது!

இந்த நாளுக்காக நான்கு மாதம் முன்பே ப்ளான் செய்திருந்தாள் நித்யா, இன்று மட்டும் நினைத்தது நடக்க வில்லை என்றால், என்ன செய்வது, இரு குழந்தைகளை வைத்து கொண்டு, நினைத்து பார்த்தாலே பயமாக இருந்தது நித்யாவுக்கு! மணி இப்போது சரியாக 9:05, இன்னும் 45 நிமிடங்களே பாக்கி இருந்தது! காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில், மழை தன் கோடாணு கோடி கைகளை விரித்து பெய்து கொண்டிருந்தது!

சாலைகள் எல்லாம் நீரினால் சூளப்பட்டு, கார் ஏறக்குறைய சாலையில் மிதந்துக் கொண்டிருந்த்து! வெளியில் கும்மிருட்டு, கரண்ட் வேறு இல்லை, டிரைவர் அப்ப அப்ப ஒரு துணியினால் கண்ணாடியை துடைத்து கொண்டே வந்தார்! மின்னல் பேய் அவ்வப்பொழுது தன் முகத்தை காட்டி பயமுறுத்தியது! என்ன நடந்தாலும், சரியாக பத்து மணிக்கு அவர் ஃபோன் பண்ணுவார், என்ன பதில் சொல்ல என்று நினைத்த பொழுது, நித்யாவின் அடி வயிரு சற்றே கலங்கியது! நாக்கு பயத்தில் வறண்டு போய் இருந்தது, நித்யா தன் கை பைய்யில் இருந்து, தண்ணி பாட்டிலை திறந்து சிறிது தண்ணீரை ஒரு மிடறு விழுங்கினாள், தொண்டை வலித்தது! முந்தைய நாள், ருசித்த குல்பி ஐஸ் தன் வேலையை காட்டி இருந்தது!

அவருடைய முகம், அடிக்கடி அங்கும் இங்கும் மாய் தெரிந்து கொண்டே இருந்தது! பயத்தில் நித்யாவின் துடிதுடித்த இதயம், அவள் வாய் வரை வந்து விட்டிருந்தது! அவளைத் தவிர, அவளுடன் பிரயாணம் செய்யும் அத்தனை பேரும், இயல்பாகத்தான் இருந்தனர்! நித்யாவின் தகப்பனார், டிரைவருடன் தொண தொணவென்று பேசி கொண்டே வந்தார்! ‘ டிரைவர் தன் முழு கவனத்தோடு ஓட்டட்டும், சிறிது நேரம் அமைதியாக இருங்கள் அப்பா என்று கத்த வேண்டும் போல் இருந்தது நித்யாவுக்கு!

நித்யாவின் முதல் பையன் அடித்த காற்றுக்கும், கொட்டிய மழைக்கும் தூங்கியே விட்டான், அவளுடைய இரண்டாவது பையனுக்கு மூன்று வயது, அவள் மடியில் உட்கார்ந்து அரைத்துக் கொண்டே வந்தான்! அப்போ அப்போ எழுந்து, காரின் பின்னால் வந்த வாகனங்களின் ஹெட் லைட்டை பார்த்து இம்கி இம்கி என்று தன் கூசிய கண்களை சிமிட்டி சிமிட்டி விளையாடி கொண்டே வந்தான்! நித்யாவுக்கு அவனை பார்த்து, சிறிது பொறாமையாக கூட இருந்தது, தானும் சிறு பிள்ளையாகவே இருந்திருக்கலாம் என்று!

நித்யாவின் அம்மாவுக்கு அவளுடைய முகத்தை பார்த்து புரியாமல் இல்லை, ஏதோ டென்சனில் இருக்கிராள் என்று! அவளாகவே சொல்லட்டும் என்று அமைதியாக வந்தாள்! தான் நினைத்தது மட்டும் நடந்து விட்டால், பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக நித்யா மனமுருக வேண்டி கொண்டாள்!

ஒரு வழியாக ஊர்ந்து ஊர்ந்து, சரியாக மணி 9:40 க்கு வர வேண்டிய இடத்தை வந்து அடைந்தார்கள் நித்யாவின் குடும்பத்தினர்! இன்னும் பத்து நிமிடங்களிள் தான் நினைத்தது நடந்து விடும், என்று நித்யாவின் மனது குதூகலித்தது! லேசாக பெய்து கொண்டிருந்த சாரல் மழை , நித்யாவின் மனதை குளிர்வித்தது! இனி அவருடைய ஃபோன் காலை நினைத்து கவலை பட வேண்டியது இல்லை, மனது லேசாக இருந்தது நித்யாவுக்கு!
ஒலி பெருக்கியில் சொல்லி கொண்டு இருந்தார்கள், நித்யாவும் அவளுடைய குழந்தைகளும் ஏற வேண்டிய ரயில், 20 நிமிடம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது என்று! நித்யா தான் நான்கு மாதம் முன்பே ரிசர்வு செய்த டிக்கெட்டை எடுத்து ஒரு முறை கோச் நம்பரை சரி பார்த்து கொண்டாள்! சரியாக 10:00 மணிக்கு ஃபோன் செய்த கணவரிடம் சிறிது எரிச்சலோடு சொல்லி கொண்டிருந்த்தாள் நித்யா, ‘இன்னும் டிரெய்ன் ஏற வில்லை, வண்டி 20 நிமிடம் லேட்டாம்!’ அம்மா அப்பாவிடம் விடை பெற்று, சரியாக 10:20 க்கு தன் பசங்களோடு, அரை ஆண்டு விடுமுறையை கொண்டாடி முடித்த களைப்போடு டிரெய்னில் ஏறத் தயாரானாள் நித்யா!!

15 thoughts on “சும்மா ஒரு நிஜ கதை

  1. oh Nijamaavaa Anu Sis, this is my first attempt of writing a story 🙂

  2. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  3. பாசமா,பயமா,பிரிவு படுத்தும் பாடா, என்னவோ,ஏதோன்னு நினைச்சா ரயிலைப் பிடிச்சுடுவா. நன்னாயிருக்கு. பொங்கல் வாழ்த்துகள்.

  4. சிறுகதையில் எனக்கு ஆர்வமில்லை அதனால் வாசிக்கவில்லை…மன்னிப்பு… எப்படி நலமா?…
    வேதா. இலங்காதிலகம்.

    • உண்மையாக இது சிறுகதை அல்ல, என் நிஜ கதை 😀 மிக்க நலமாகவும், உங்களைப் போன்றவர்களின் அன்பான விசாரிப்புகளாலும் மிகுந்த சந்தோஷமாகவும் இருக்கிறேன்! ஊரிலிருந்து வந்திருக்கும் என் மாமனாரையும் , மாமியாரையும் கவனித்து கொண்டிருக்கிறேன் , அவ்வளவே 😀

  5. ok..ok…I read it.. good story.இப்படித்தான் எழுதப் பழகுவது தொடர்ந்து முன்னேறவும்.
    சிறிது சிறிதாக எழுதித்தான் முன்னேறுவது.
    மறக்காமல் எங்க பக்கமும் எட்டிப்பார்க்கவும்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

  6. எங்க ரொம்ப நாளா உங்களை காணுமேன்னு பார்த்தேன்.

    இந்த சிறுகதையை வாசிக்கத் தவறிட்டேன், எப்படின்னு தெரியலை.

    நீங்க ரொம்ப பில்ட்-அப் கொடுக்கும்போதே தெரிந்து விட்டது, கதையின் முடிவு!
    நல்ல முயற்சிக்கு பாராட்டு சொல்லியே ஆக வேண்டும்.

    இன்னும் நிறைய எழுதுங்கள். எழுத எழுதத்தான் மெருகேறும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதுங்கள். உங்களுக்காக மட்டுமே எழுதுங்கள்.

    இவ்வளவு நாட்கள் ‘ரீடர்’ இல் உங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். இனி இமெயில் மூலம் தொடர்கிறேன்.

    இனிமேல் பதிவுகளைத் தவற விடாமல் படிக்கலாம்.

    • நன்றி அம்மா! சிறிது நாளாக கொஞ்சம் பிசி! எழுதுவது எனக்கு சிறிது மனதுக்கு உற்சாகத்தை குடுக்கிறது! உங்களைப் போன்றவர்களின் நட்பு மனதுக்கு இதமளிக்கிறது! கண்டிப்பாக எனக்காக எழுதுவேன் அம்மா!

  7. இது எதோ, பெயர மாத்தி உண்மைய எழுதினாபோல இருக்கே எழுதினாபோல இருக்கே ஹிஹி

பின்னூட்டமொன்றை இடுக