எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -48

15 பின்னூட்டங்கள்

அம்மா : 1 to 50 சொல்லு

பையன் : 1 2 3 4 5 6 7 8 9 10

11 12 13 14 15 16 17 18 19 20

21 22 23……….!!!!!!

அம்மா : என்னடா திரு திருன்னு முழிக்கிற…..

23 அதுக்கு அப்புறம் என்ன வரும் ?

பையன் : பாத்ரூம்

அம்மா :ஓடுடா … ஓடுடா …..

boy

 

 

இதில் போடப்படும் அனைத்தும்

கோவிலுக்கே சொந்தம் என்று

போர்டு ஒன்று தான் எழுதி மாட்ட

வில்லை மற்றபடி typical ஆளுயர

மஞ்சள் துணி சுற்றிய பெருமாள்

கோவில் உண்டியலின் பக்கவாட்டில்

காணிக்கை செலுத்துவதற்காக

ஏற்படுத்தப்பட்ட ஓட்டை வழியாக

தன் மண்டையை நுழைத்து ஆராய்ச்சி

செய்த தன் மைந்தனின் செயல்

சகிக்காமல் அவன் காதில் கிசுகிசுத்தாள்

அன்னை… டேய்… what is this???

அவனும் தன் ஆராய்ச்சியை தொடர்ந்தவாரே

பதிலளித்தான்.. உண்டியல் அம்மா!!!

what_

 

 

துப்பு கெட்ட  விஷயமாக

இருந்தாலும் துப்பு துலக்காமல் தப்பு

யார் மீது என்று கை காட்டுவது தப்பு!

 

images

வர்ஷம் அதிகம் இல்லாத

ஊர்களில் எல்லாம் ஒவ்வொரு

நிமிஷமும் வருஷம் தான்!

RAIN

 

கோ பத்தினால் என்ன லாபம் ??

.

.

.

.

.

.

.

.

.

அதன் பால் உற்பத்தி திறனையும்

1 லிட்டர் பாலுக்கு நிர்ணயிக்கப்பட்ட

விலையையும் பொறுத்தது!

10 cows

 

பானி பூரி சாப்பிட என்றே

ஒரு தனி பாணி உண்டு

நாலு பேரு முன்னிலையில்

புசிக்கும் போது எங்கே நம்

மரியாதை கெட்டு விடுமோ

என்ற அச்சத்தில் முடிந்தும்

முடியாமல் ஒரே வாயில்

பூரியை திணித்து விழுங்கிட

தயுவு செய்து முயற்சி செய்யாதீர்..

யார் கண்டார் பின் தங்களுக்கு

இறுதி மரியாதை செய்ய நேரிடும்!

PANI

 

 

என்னமா.. எப்படி இருக்க?

என்று என்னை கேட்பதற்கு

பதிலாக என் வீட்டு குக்கரில்

அவிந்து கொண்டிருக்கும்

அவரைக்காயை கேட்டால்

என் நிலை சொல்

லுமே!

 aeternum-pressure-cooker-ready-to-cook

15 thoughts on “சில எண்ணங்கள் -48

  1. வர்ஷம் / வருஷம் வைத்து சொல் விளையாட்டு விளையாடிவிட்டீர்கள், மஹா! முதல் கவிதை வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டது. நாளுக்கு நாள் முன்னேறி வருகிறீர்கள், பாராட்டுக்கள்!

  2. இது ஒரு ‘அச்சா ஹை’ பதிவு. கலக்கல்.

  3. நகைச்சுவை ரசிக்க வைத்தது பாராட்டுக்கள் மஹா

  4. ரொம்பரொம்ப ரஸித்தேன். எல்லாவற்றையும். அன்புடன்

  5. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
    http://wp.me/pTOfc-bj

  6. “..யார் கண்டார் பின் தங்களுக்கு
    இறுதி மரியாதை செய்ய நேரிடும்!..”
    சூப்பராக இருக்கு

பின்னூட்டமொன்றை இடுக