எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


8 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -33

வஞ்ச புகழ்ச்சி யாவரும் அறிவர்..
வஞ்ச அக்கறை யாரும் அறிந்ததுண்டோ?
அதிகாலை நேரம் துகில் கலைய மறுத்த
பையனை அரும்பாடுபட்டு எழுப்பி
பின் ஒருவாறு குளியலறை அனுப்பி
அவன் குளித்து முடியும் வரை பொறுத்திருந்து
பின் அவனுடைய ஈரத் தலையை துடைத்து
விடுகிரேன் என்ற பெயரில் தலையை 
துண்டால் நற நற.. வென துடைத்து
அவன் மூளைக்கு செல்லும் ரத்த 
ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்ச்சி
அளித்ததோடு மட்டுமல்லாமல் என்னுள்ளே
பொருமி கொண்டிருக்கும் கோபமும்
கத்தி தீர்க்காமல் சாந்தமாய் வெளியேறவும்
வழி வகுக்கிறது!!

Image

கணவர் செய்யும்
மன்னிக்கவே முடியாத
குற்றங்களில் ஒன்று..
.
.
.
சீப்பா கிடைத்தது
என்ற ஒரே ஒரு 
காரணத்துக்காக
2 கிலோ மூன்று கிலோ
ஏதேனும் ஒரு காய்கறியை
தன் சிறிய குடும்பத்துக்காக
வாங்கி வந்து குவிப்பது!!

Image

காதல் பொங்கி வழிந்தது!!
.
.
.
.
.
குழம்பு கூட்டு பொரியல்
பக்காவா ரெடி பண்ணிட்டு
சோறு பொங்க நான் மறந்து
விட்ட போதிலும் ஆங்கார
பசியிலும் பத்து நிமிடம்
கோபம் பொங்காமல் பொறுமை
காத்த அன்பு கணவர் மேல் 
மேல் இருந்து படிக்கவும்..

Image

 

நல்ல உச்சி வெயிலில்
கதவை திறந்து பார்த்து
விட்டு யாரு இங்க வெட்டியா
லைட்ட போட்டு வெச்சிருக்கா
என்று அவசர அவசரமா
ப்ரிஜ் உள்ளே அதை அணைப்பதற்க்கு
ஸ்விட்சை தேடுனீங்க என்றால்
பெருமை பட்டு கொள்ளுங்கள்
நீங்க தான் உண்மையான
மின் சிக்கனவாதி!!

Image


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -3

எடுப்பார் இன்றி
கிடந்து போகும்
குண்டு முட்டைகோஸுக்கு
வந்தது வாழ்வு!
சும்மாவா,
எந்த சைஸில் உள்ள
கோஸை எடுத்தாலும்
ஒன்றின் விலை
25 ரூபாயாம்
சூப்பர் மார்க்கெட் சூட்சமங்கள்!!!

படம்

 

பார்ப்பதற்க்கு பசுமையாக
கண்ணுக்கு குளிர்ச்சியான
பச்சை நிறத்தில் இருந்த போதிலும்
கத்தியால் ஒரு வெட்டு
வெட்டும் வரை தெரிவதில்லை
இன்று இது கூட்டு ஆகுமா
இல்லை கூட்டி தள்ள படுமா என்று!
பீர்க்கங்காய்!!

படம்

 

வாரம் ஒரு முறையேனும்
அருவாமனையால்
அறியாமல் கொலை
செய்து விடுகிறேன்
.
.
.
கத்திரிக்காயில்
ஒளிந்திருக்கும்
புழு!

படம்

 

 

எனக்கு மனதினுள் ஒரு தணியாத ஏக்கம் உண்டு
அந்த குண்டு கால், வீட்டு எஜமானியின் திருமுகத்தை
ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டும் என்று..
.
.
TOM & JERRY கார்ட்டூன்!

படம்