எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


8 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -25

மின் தடையால்
மிக்ஸி ஓடவில்லை
கிரைண்டர் ஓடவில்லை
ப்ரிஜ் ஓடவில்லை
வாசிங் மிஷின் ஓடவில்லை
மோட்டர் ஓடவில்லை
டீவீ ஓடவில்லை
ஆக மொத்தம் எனக்கு
கையும் ஓடவில்லை
காலும் ஓடவில்லை!

படம்

என்னது பூரிக்கு தொட்டுக்க கிழங்கா??
என்ன கொடுமை அம்மா இது!
.
.
.
.
புரட்டாசியில் புறப்படும்

புதல்வனின் புலம்பல்கள்!!

படம்

ஒரு ஊருல ஒரு ராஜா
இருந்தானாம்…
அவர் ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி ஒரு
எலுமிச்சம்பழம் கொண்டு
வந்தாராம்….
ரெண்டு வரி கதை 
சொல்வதற்குள்ளேயே
பையன் அலுத்து கொண்டான்..
பக்கத்து பெட்டி கடை பாட்டி
கிட்ட கேட்டாலே குடுத்திருக்கும்..
போங்கடா நான் கதையே சொல்லல!!

படம்

ஒன்ன ரெண்டாக்கி
ரெண்ட நாலாக்கி
நால எட்டாக்கி
ஒவ்வொன்றுக்கும் 
இடையே கால் ஸ்பூன்
சீனி போட்டு தண்ணி
ஊற்றி…..
ஐய்யையோ சத்தியமா
ரெசிபி எல்லாம் இல்லை
ஒரே வாயில போட்டு
மாத்திரையை விழுங்க
சொன்னா கேக்க
மாட்டிகிரான் என் பையன்!

படம்

குக்கரின் சூடு பொறுப்பாள்
எண்ணெயில் பொரிந்து கைகளில்
வெடித்து சிதறும் கடுகின்
சூடை பொருட்படுத்த கூட மாட்டாள்
எதிர்பாராமல் கைகளில் கொட்டி
விடும் வெந்நீரை பூ வென்று ஊதி
வலி மறந்து போவாள்
மனம் பொறுக்க மாட்டாமல்
அலறுவாள் ‘அம்மா’ தன் குழந்தையின்
மேனி சுடும் போது மட்டும்!!

படம்


2 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -20

என்னது.. வராமல் வந்த
மாப்பிள்ளை என்ன குறையை
கண்டுவிட்டார் என்று இப்படி
முறுக்கி கொண்டு ஓடுகிரார்!
என் துணிகளை எல்லாம்
இன்றாவது வாழ sorry காய
வைத்துவிடலாம் என்று பார்த்தால்
ஒன்றும் நடக்காது போலையே..
மேகங்களின் பின் ஒளிந்து
கொள்ளும் மழை காலத்து சூரியன்!!!

cloud

கடல் மாதிரி வீடு என்ற
ஆசை வார்த்தையை நம்பி
மோசம் போய் விடாதீர்கள்
அங்கே வேலைகள் ஓய்வதில்லை!!

images (7)

இந்த பல்லும் ஒரு நாள்
சூத்தையாகும் என்பது
தெரிந்த ஒரு விஷயம் தான்..
அதுக்காக விழுந்து விழுந்து
இரண்டு வேளை பல்லை தேய்க்கனும்
ரூட் கேனால் பண்ணனும்
ஸ்டெம் கேனால் பண்ணனும்
அப்படியெல்லாம் எந்த ஒரு
அவசியமும் இல்லை
.
.
பூண்டு பல்!!

images (10)

இன்று ஒரு பூனை
அது வசிக்கும் வீட்டினுள்
இருந்து வெளியே கிளம்ப
எத்தனிக்கையில் நான் குறுக்கே
வந்துட்டேன், இந்த சகுனம்
நல்லதா கெட்டதா பூனைக்கு!!

images (11)

கோதுமை மாவை
தண்ணீர் விட்டு பிசைந்து
உருண்டைகள் இட்டு
அதை கல்லில் போட்டு
வட்டமாக தேய்த்து
எண்ணெய் காய்வதற்கு
முன்பே பூரிகள் இட
முயற்சித்தால் உங்கள்
மூளை இன்னும் சரி வர
காய ஆரம்பிக்கவில்லை
என்று அர்த்தம்!!

images (12)