எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


15 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -27(வெற்றிகரமான முதலாம் ஆண்டு நிறைவு நாள்)

இன்னிக்கே இப்பவே
அடுப்படியிலேயே
டமால் டுமீல்
அவசர தீபாவளி
கொண்டாடனுமா..
காதை குடுங்க
.
.
.
.
.
.
அரிசி மாவு
சீடை பண்ணுங்க!!!

download (5)

 

பரபரப்பான கிளைமேக்ஸ் பட
காட்சியில் வில்லனை கூண்டோடு
அழிக்க ஹீரோ தானே மனித
வெடிகுண்டாய் மாறி வெடித்து
சிதறி எங்கும் தீ மளமளவென
பரவி கொழுந்து விட்டு எரிவதை
பார்த்து கொண்டிருக்கும்
எங்க குட்டி பையன் மட்டும்
பய பக்தியோடு எழுந்து
தீபம் காட்டுவதாய்
இரு கை கூப்பி சாமி கும்பிடுவான்
பக்தி பழமோ!!

download (6)

எதாவது உருப்படியா பேச வேண்டும்
என்றால் பேசு இல்லை இடத்தை
காலி பண்ணு என்று காலை நேர
பரபரப்பில் வெட்டி பேச்சு பேசும்
என் பையனிடம் எரிந்து விழும்
என் சொற்களை கொஞ்சம் கூட தட்டாமல்
அலுத்து கொள்ளாமல் திரும்பவும்
பேச்சு கொடுப்பான் ஏரோப்ளேன் எப்படி
ஓட்டரதுனு சொல்லி தர்றீங்களா..
தாய் சொல்லை தட்டாத தனையன்!!

download (7)

 

புழுங்கலரிசியை ஊற வைத்து
பின் மைய்யாய் அரைத்து
இரும்பு சட்டியில் பேருக்கு சிறிது
எண்ணெய் ஊற்றி அரைத்த மாவை
அதில் கொட்டி கையில்
ஒட்டாத பதம் வரும் வரை வதக்கி
அதாவது திரிசங்கு சொர்க்க நிலையில்
வெந்தும் வேகாமலும்..
கையில் ஒட்டியும் ஒட்டாமலும்..
வதங்கி வரும் வேளையில்
கவன குறைபாடால் ஏதாவது
தவறு நேர்ந்து அதிகமாக வதங்கி விட்டால்
மாவை குழலில் இட்டு பிழியும் போது
அழகு அழகாக இடியாப்பம் வராது
மாவை பிழிய முடியாமல்
அழுகை அழுகையாக மட்டும் வரும்!!

download (8)

 

தன் வெளிச்சத்தால் விளக்கு விளக்கி
காட்டுவதால் ‘விளக்கம்’ உண்டாயிற்றா..
இல்லை விளக்கம் கொடுப்பதால் விளக்கு
என்ற பெயர் உண்டாயிற்றா..
ஒரே குழப்பம்!!

download (9)

எதை பார்த்து பயந்து போயிற்று
இப்படி தலை முடி விரைத்து நிற்பதற்கு…
.
.
.
.
.
.
.
குட்டி பையனின் டூத் பிரஷ்!

images (7)


10 பின்னூட்டங்கள்

திகட்டாத காதல்

படம்

எப்போ இருந்து இந்த காதல் ஆரம்பிச்சிதுனு சரியா சொல்ல தெரியல!

இன்னிக்கு நேத்துனு இல்ல, ரொம்ப வருஷமா தீராத காதலா வளர்ந்து கிட்டேதான் இருக்கு!

இன்னிக்கு வரைக்கும், கொஞ்சம் கூட அந்த காதல் குறையவே இல்ல!

ஆனா யார்கிட்டையும் சொன்னதே இல்ல, ஏன்னா சொன்னா அது காதலே இல்லயே!

சரி இப்போவாது யாருனு சொல்லி தொலைனு சொல்லுரீங்களா

, இருங்க, இருங்க எல்லாம் நம்ம ஊரு ஸ்வீட் மேலதான்! அதாங்க, இந்த நெய், பால், அது இதுனு போட்டு  செஞ்சு  குடுப்பாங்கலே அதே தான்!


நமக்கு எவ்ளோ பிரச்சனை இருந்தாலும், ஒரே ஒரு ஸ்வீட் அ வாயில போட்டு, கண்ண மூடிட்டு, அந்த சில நிமிடங்கள, உலகை மறந்து ரசியுங்க!

நம்ம மனச அமைதி படுத்த இத விட ஒரு ஈசி, டேஸ்டி வழி இருக்கா என்ன!

ஆனா நான் ஒரு தடவை கூட, ஸ்வீட் பிரியைனு பகிரங்கமா அறிவிச்சதே இல்லை!

எப்போ ஸ்வீட் பத்தி பேசுனாலும், அது எனக்கு சுத்தமா பிடிக்காத மாதிரியே தான் பேசுவேன்!

ஸ்வீட் எல்லாம் ரொம்ப சாப்பிடாதீங்க, உங்க வாயை கொஞ்சம் கன்ட் ரோல் பண்ணுங்கனு கூசாம மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவேன்!

எல்லா அட்வைஸும் ஸ்வீட் கண்ணுல படாத வரைக்கும் தான்! ஸ்வீட் வீட்டுக்குள்ள வந்துரிச்சுனா, என்னால, என் வாயையோ, என் கையையோ, சத்தியமா கன்ட் ரோல் பண்ணவே முடியாது!

போகிர வழி, வர்ர வழினு, ஸ்வீட் ட கடந்து போகும் போதெல்லாம், ஒன்ன எடுத்து வாயில போடாம இருந்ததே இல்ல!

ம ன சு ஒரு பக்கம், வெய்ட் கெய்ன் பத்தி அலெர்ட் பண்ணாலும், இன்னொரு பக்க மனசு, யார் பேச்சையும் கேக்காது!!

ஒவ்வொரு ஸ்வீட் ட வாயில போடும் போதும், நானே எனக்குள்ள சொல்லிப்பேன், ‘இன்னிக்கு ஸ்வீட் சாப்பிடுர கோட்டா முடிச்சதுனு… 

குடிகாரன் பேச்சாவது, விடிஞ்ச்சாதான் போச்சு, என் பேச்சு, ஒரு மணி நேரத்திலேயே போச்சு!!!

ஒரே ஸ்வீட் டா இருந்தா கூட பரவாயில்லை, ஒன்னு இல்ல ரெண்டு, இல்ல மிஞ்சி போனா  மூனு சாபிட்டா போர் அடிச்சிடும்!

இந்த assorted ஸ்வீட் இருக்கு பாருங்க அது கொடுமை, இது கொஞ்சம், அது கொஞ்சம்னு மனச அலைய வெச்சிடும்!

எல்லாம் சாப்பிடுர வறைக்கும் நல்லாதான் இருக்கும், எப்பவாது, ஸ்வீட்ட சாப்பிட்டு பிரச்சனை ஆச்சு, ஸ்வீட் மேல கோவம் பயங்கரமா வந்துடும்!

 அத வாங்கி குடுத்தவங்க மேல அத விட பயங்கரமா வந்துடும்!!!

ஒவ்வொரு தடவையும், தீபாவளி முடிந்து, திகட்ட, திகட்ட ஸ்வீட்ட காலி செஞ்ச பிறகு, தவறாம, என் கணவர் கிட்ட சொல்வேன், இந்த ஸ்வீடட பாத்தாலே எரிச்சல் எரிச்சலா வருது, இனிமே, ரெண்டு வருஷத்துக்கு, இந்த ஸ்வீட் பக்கம் தலை வெச்சி கூட படுக்க மாட்டேனு சத்தியம் பண்ணுவேன்!!

ஆன என்ன பண்ண, எவ்ளோதான் ஸ்வீட்ட வீட்ட விட்டு தள்ளி வெச்சாலும், கடவுளுக்கே பொறுக்காது!!

திருப்பதி இல் இருந்து, பெருமாளே பார்த்து, அப்போ, அப்போ, யார்கிட்டையாவது லட்டு குடுத்து அனுப்பிச்சுடுவார்! செஞ்ச சத்தியத்த எல்லாம், மறந்து, இது சாமி பிரசாதம் நு சொல்லி சாப்பிட வேண்டியதுதான்!!!