எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


2 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -24

மதியம் உண்ட மயக்கத்தில்
சொக்கிய கண்களையும்
ஒரு நிமிடம் விரித்து 
கணக்கு புத்தகத்தை திறந்து 
பார்த்து வியந்தேன்
என்ன இது ப்ரிண்டிங் மிஸ்டேகா??
The smallest four digit number is 1111
1000 இல்லையா??
ரொம்ப தெளிவா பையன் சொன்னான்
நல்ல பாருங்க அம்மா
அது True or False!

படம்

பல் வலி தோன்றிய
மறு நொடியே
நம் கண்ணீர் குடத்தை
உடைத்து விட்டு பிறந்து
விடுகிறது ஞானம்
இனியாவது பல்லை
சரியாக பேண வேண்டும் என்று!

படம்

யாரு இந்த தெலுங்கானா Aunty?
என்பதில் ஆரம்பித்து
Anti Virus
Anti Hero
Anti corruption
அத்தனை வார்த்தைகளின்
பொருளையும் ஒருங்கே
அறிந்து கொண்டான் 
என் தவபுதல்வன்!

படம்

இப்போதெல்லாம் என் கைபேசியில்
வரும் குறுஞ்செய்தியில் இன்னிக்கு
பந்த் தா இல்லை பந்த் இல்லையா
என்பதை பொறுத்தே என் 
காலைகள் விடிகின்றன! — in Guntur.

படம்

எனக்கு இன்ப அதிர்ச்சியையும்
என் பசங்களுக்கு தாள முடியா
துக்கத்தையும் குடுத்த ஒரு செய்தி
இன்னிக்கு ஸ்கூல்!

படம்

எதிர்பார்த்து காத்திருந்த காலை
6 மணி முதல் மாலை 7 மணி வரை
தொடர்ச்சியாக ஏற்படும் மின் தடை
இல்லாமல் போனதால் நிம்மதி பெருமூச்சு
விட்டது நான் மட்டும் அல்ல
என் வீட்டு குளிர்பதன பெட்டியில்
உள்ள காய்கறிகளும் தான்!

படம்

 


2 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -21

ஒரு மதியம் ஏதேச்சையாக
ஸ்டார் மூவீஸ் சேனலை மாற்றினால்
The Twilight Saga-Breaking Dawn: Part 1
மூவீயில் நாயகி பெல்லா
கருவுற்று இரண்டு வாரங்களே
ஆன நிலையில் அசுரத்தனமாய்
வளர்ச்சி அடைந்த தன் வயிற்றை
அதிர்ச்சியுடன் நோக்குவதை கிலியுடன்
நோக்கிய எனக்கும் என் வயிற்றினுள்
ஏதோ ஒன்று அசுரத்தனமாய் வளர்ந்து
கொண்டிருந்த உணர்வு…
ஆம் ஆங்காரமாய் வளர்ந்திருந்த பசி
‘It’s Time to Lunch’என்று உணர்த்தியது!!

படம்

யாரொருவர் காலங்கார்த்தாலயே
வீடு சுத்தம் பண்றேன் பேர்வழி என்று
அழுக்கு போச்சா கறை போச்சா
என்று பார்த்து பார்த்து தரையை
पोछा செய்கிரார்களோ அவர்களே
மோடி ஊர்காரைங்க!

படம்

எந்த வெயிலில் இப்படி காய்ந்து
மெலனின் ஒரேடியாக கூடி போய்
கன்னங் கரேலென்று வருகிரதோ..
என் பையனுடன் நிதம் ஸ்கூல்
போய் வரும் பளிச்
வெள்ளை நிறத்து அழிப்பான்!!

படம்

நீயா வேகமா சாப்பிட்டு விடு
இல்லாட்டி நான் சாப்பிட்டு விடுவேன்
என்று ஒயாமல் மிரட்டும்
முரட்டு மீசை மாமா
.
.
.
AIRTEL!

படம்

சர்ரென்று வழுக்கி கொண்டு
வளைந்து நெளிந்து வந்து எங்கே
நம்மை பொட்டுனு போட்டு தள்ளிடுமோ
என்று நினைக்க வைப்பது
பாம்புகள் மட்டும் அல்ல
.
.
.
குண்டூர் ,ஆட்டோக்களும் தான்!!

படம்


2 பின்னூட்டங்கள்

நினைவுகள்-1

படம்

எப்படி ஆரம்பிப்பது தெரியவில்லை, நினைவு தெரிஞ்ச நாள், அது எந்த நாள், சரியாக நியாபகம் இல்லை! அப்பா அம்மா உறவினர்கள் சொல்ல கேட்டதுண்டு, நீ இது செய்வாய் , அது செய்வாய் என்று, என் நியாபகத்தில் அழியாமல் இருப்பது மட்டும் இங்கே காலத்தால் அழியாத சுவடாய் பதித்து விடுகிரேன். மழலை பேசும் வயதில் சொட்ட சொட்ட நான் நனைந்த மழை தான் முட்டி மோதி கொண்டு முதல் நியாபகமாய் கண் முன் வருகிறது. ஸ்கூலில் முதல் தடவையாய் தண்டனை வாங்கியதும் அதற்காகதான்! எல்.கே.ஜி படித்து கொண்டிருந்த நேரம். மழையில் நனைந்ததை கூட அவர்கள் குற்றமாக சொல்லவில்லை, தூரத்தில் ஆசிரியை வருவதை கண்டவுடன், கமுக்கமாக உள்ளே ஓடி சென்று சமர்த்து பிள்ளையாய், ஈரமாய் உட்கார்ந்து இருந்ததை தான் அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை!

 
வாழ்க்கையில் அந்த குட்டி வயதில் என் லட்சியம் என்ன தெரியுமா, எங்கள் வகுப்பின் முன் அமைந்த சிறு விளையாட்டு திடலில் இருந்த ஊஞ்சலில் வேகமாய் ஆடி, அதன் பக்கத்தில் இருந்த வேப்ப மர உச்சியில் உள்ள பேய் இல்லை, இலையை காலால் தொட்டு விட வேண்டும் என்பது தான் அந்த தணியாத ஆசை! அந்த ஆசையும் ஒரு நாள் நிறைவேறியது. நான் பிற்காலத்தில் பற்பல சுவர்களையும் அசால்டாக ஏறி இறங்க இந்த சிறு விளையாட்டு திடலே எனக்கு பாலமாக இருந்தது. அந்தவயதில் பிடிக்காத ஒரே ஒரு விளையாட்டு குடைராட்டினம், பூமி என்னை சுற்றுவதை நான் ஒரு போதும் விரும்பியதே இல்லை.
எல்.கே.ஜி முடித்து, லீவு விட்டு ஸ்கூல் ஆரம்பித்தவுடன், யு.கே.ஜி செல்ல மனமின்றி திரும்பவும் எல்.கே.ஜி யிலேயே சென்று அமர்ந்தது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. பிறகு வலுக்கட்டாயமாக யு.கே.ஜி அனுப்பியது வேறு கதை. அந்த வயதில் எனக்கு ஸ்கூல் ரசித்ததே இல்லை. ஏதோ கடனுக்கு போய் விட்டு வருவேன். அடிக்கடி நோய்வாய்ப்படுவதுண்டு. என்னதான் மருந்து, டாக்டர் ஊசி என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்கூல் போக வேண்டாம் என்ற நினைவு சந்தோஷத்தையே தரும். நான் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் முதல் செல்ல மகள் என்பதால் சிறிது செல்லம் உண்டு. இந்த மாதிரி உடம்பு சரி இல்லாமல் போகும் சமயங்களில் எல்லாம், என் வீட்டு பாடத்தை அம்மாவே எழுதி குடுத்து விடுவார். ருசி கண்ட பூனை சும்மாவா இருக்கும், வீட்டு பாடங்களை எல்லாம், எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது என்று அம்மாவையே செய்ய வைத்து விடுவதுண்டு. ஒரு நாள் அம்மா என் வீட்டு பாடத்தை செய்ய மறந்து போனார். காலையில் தான் அம்மாவுக்கு நியாபகம் வர, அன்று வீட்டு பாடத்தை அப்பாவை எழுதி வைக்க சொல்லி விட்டார்.
அன்று பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாய்,மாறி இருந்த கையெழுத்தால் அன்று நான் பிடிபட்டேன். இத்தனை நாள் ஏமாற்றிய கை வலி கால் வலிகள் அன்று நிஜமாகின. முதன் முறையாய் வகுப்புக்கு வெளியே முட்டி போட வைத்தனர். அதுக்கப்புறம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நானே என் வேலைகளை செய்து கொள்ள ஆரம்பித்தேன். அன்று நான் கூடுதலாக கற்று கொண்ட இன்னொரு பாடம், வலிக்காமல் முட்டி போடுவது எப்படி என்பதை! பின்னாளில் அவசிய படும் இல்லையா!
என் முதலாம் வகுப்பு ஆசிரியை மிகவும் கண்டிப்பானவர். எப்பவும் உம் என்று முகத்தை தூக்கி வைத்திருப்பார். அவரை பார்த்தாலே எனக்கே குலை நடுங்கும். எப்பொழுதும் அவருடைய கோபத்துக்கு இரையாவது என் காது மடலின் நுனிகள். அவருடைய கூர்மையான நகங்களை வைத்து நன்கு கிள்ளி வைத்து விடுவார். ஒரு நாள், என் பெயரை சொல்லி அழைத்தார், ரொம்பவே பயந்து போனேன், அய்யையோ போச்சுடா என்று காதை கைகளால் மறைத்து கொண்டே அருகில் சென்றேன், ரிபோர்ட் கார்டை கையில் குடுத்து, நீ முதல் ரேங்க், வாழ்த்துக்கள் என்று முறைத்து கொண்டே சொன்னார். இது கனவா, நிஜமா என்று அவர் கிள்ளாத குறைக்கு, நானே என்னை கிள்ளி பார்த்து கொண்டேன். நான் வாழ்க்கையில் வாங்கிய முதல் ரேங்க், அதுவே முதலும் கடைசியும்!
இன்னும் நியபகத்தில் இருக்கும் ஒரு விஷயம், எனக்கு அடிக்கடி ஆகஸ்ட் 15 1947(சுதந்திர தினமும்), ஜனவரி 26 குடியரசு தினமும் குழப்போ, குழப்பென்று குழப்பி தள்ளி விடும். அதனால் ஈசியாக படிக்க நான் செய்தது, விடைகளை எல்லாம், கட்டிலுக்கு அடியில், அம்மாவுக்கு தெரியாமல் எழுதி வைத்து விட்டு, அம்மா கேள்வி கேட்க கேட்க டான் டான் என்று, பார்த்து பார்த்து சொல்லி விடுவேன். பரிட்சைக்கு முந்தய தினம் ஒருவாறு சமாளித்தாலும், எவ்ளோ நாள் சோற்றுக்குள் முழு பூசணியை மறைத்து வைக்க முடியும்! பரிட்சை தாள் திருத்தி வந்தவுடன், அம்மா ஸ்கூலுக்கு வந்து மிஸ்ஸோடு சண்டையிட்டு கொண்டிருப்பார். வீட்டில் நன்கு படிக்கும் பிள்ளைக்கு ஏன் பரிட்சையில் சோபிக்க முடியவில்லை, அம்மா ஆராய்ந்து பார்த்து என்னை கையும் களவுமாய் பிடித்து விட்டார் ஒரு நாள்.அப்புறம் என்ன அடி, படி படி என்று உயிரை வாங்கி என்னை படிக்க வைத்த பெருமை என் அம்மாவையே சாரும்!

 

—-நினைவுகள் தொடரும்


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -14

எங்கோ இருக்கும் நெசவாளி
தறியில் பட்டு நூல் கோர்க்கும்பொழுதே
இந்த சேலை இந்த பெண்ணுக்கு தான்
என்று நினைத்து கொண்டே நெய்வார்..
கொஞ்சம் மெதுவா சொல்லும்மா திரிஷா
நெசவாளியின் வீட்டுக்காரம்மவுக்கு 
கேட்டுட போவுது!!

படம்

எந்த ஒரு கல்யாண வீட்டுக்கு
சென்றாலும் அங்கே வரும் அழகான
மூக்கும் முழியுமாய் வரும் திருமதிகளை
பார்த்து விட்டு ‘இந்த பெண்ணை எனக்கு தான்
முதலில் பார்த்தார்கள்’ என்று மனைவியிடம்
பெருமையடிக்கும் ஆண்களே….
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் மனைவி அந்த பெண்ணை 
பார்த்து பெருமூச்சு விட்டு 
கண்டிப்பாக மனதினுள் எண்ணுவாள்
தப்பிச்சிட்டியேடி!!!

படம்

 

பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி விட
இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி
இருக்கும் போது தான் ஃபோன் வரும்..
கண்ட நேரத்தில யாருனு எரிச்சலோட
நீ எடுடா என்று பையனை கை நீட்ட
அவனும் ஃபோனை எடுத்து ரிசீவரை
காதில் வைத்து விட்டு
பொய்யான வருத்தம்
குரலில் தொணிக்க சொன்னான் 
‘என்னது ஸ்கூல் லேதா???’ 
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான்
ரிசீவரை பிடுங்கி காதில் வைக்க
எவரோ ‘விஷ்ணு லேதா? ‘நு கேட்டு
கொண்டு இருந்தார்…..
அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு!!

படம்

 

‘பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க
இல்லையா டொரேமான் ஸ்டிக்கர்
வாங்கிடுங்க…
எங்க கிளாஸ் பொண்ணுங்களுக்கு
இந்த இரண்டும் தான் புடிக்கும்’
ரக்சா பந்தனை இன்று ஸ்கூலில்
கொண்டாட போகும் என் பையன்!!

படம்

யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல்
இருப்பதற்க்காக அணிய படுகின்ற
உடைகள் கூட பளிச் பளிச் என்று
கண்ணை சிமிட்டி நம்மை திரும்பி
பார்க்க வைக்கிறது
.
.
.
.
வெள்ளை நிற கற்கள் பதிக்கபட்டு
அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட
பர்தாக்கள்!!!

படம்

 


6 பின்னூட்டங்கள்

எங்க ஊரு ரயில்வே கிராசிங்

படம்                  ஏன் லேட்டுன்னு யாரவது ஸ்கூல்லயோ , அலுவலகங்களிலோ யாரவது கேட்டால் , சொல்வதற்கு இருக்கும் நூறு காரணங்களில், இதுவும் ஒன்று,’ ரயில்வே கிராசிங் மூடி இருந்தது!’ காலையில் அவசர அவசரமாக , மிகமிக சூடான இட்லியை , அம்மாவுக்காக வாயில் அடைத்து, மென்று, விழுங்கி, தண்ணீர் குடித்தும் குடிக்காமலும் , கணக்கு ஸ்பெஷல் வகுப்புக்காக , சைக்கிளில் பறந்து சென்றால், வழக்கம் போல் கேட் மூடி இருக்கும்! ரயில் வந்து, கேட்டை திறந்து , ஸ்கூல்லை அடைவதற்குள் , பாதி வகுப்பு நடந்து முடிந்து விடும்!

இந்த மாதிரி பிரச்சனைகளை சமாளிப்பதற்காகவே ஒரு சின்ன குறுக்கு பாதையை உருவாக்கி வைத்திருந்தார்கள்! கொஞ்சம் தில் இருந்தால் போதும், சைக்கிளை அலேக்காக தூக்கி, ரயில் தடத்தை தாண்டி அந்த பக்கம் சென்று விடலாம்! பத்து பேரில் கிட்டத்தட்ட எட்டு பேர் அந்த குறுக்கு பாதையை தான்  உபயோகிப்பார்கள். அதில் நானும் ஒருத்தி! ரயில் கேட்டை வந்து அடைவதற்கு ஒரு இருநூறு அடி முன்னால் ஒரு ஆற்று பாலம், அதனால் சிறிது மெதுவாகத்தான் ஊர்ந்து வரும். எத்தனையோ தடவை, ரயில் ஊர்ந்து வருவதை பார்த்து கொண்டே, தடத்தை தாண்டி சென்றிருக்கிறேன். நான் தனியாக சென்றவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. ஒரு தடவை , தெரியாத்தனமாக , நான் கெட்டது போதாதென்று , என் தங்கையையும். அந்த குறுக்கு பாதையில் அழைத்து சென்றேன். நான் எப்போதும் போல் தாண்டி சென்று விட்டேன், என் தங்கையோ, சைக்கிளை தூக்க முடியவில்லை என்று நட்ட நடு தடத்தில் நின்று விட்டாள்! ரயில் வேறு வந்து கொண்டிருந்தது , நான் என் சைக்கிளை கீழே போட்டு விட்டு , அவள் சைக்கிளை தூக்க சென்றேன், அடுத்த நொடி என் சித்தப்பா கண்களில் தீ பொறியுடன்  முறைத்து கொண்டே சைக்கிளை தூக்கி கொடுத்தார்கள்! அப்புறம் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவே வேண்டியதில்லை!

ரயில்வே தடத்தில் பேலன்ஸ் செய்து நடந்து செல்வது , ரொம்பவம் பிடித்தமான ஒரு விஷயம்! எப்பொழுதும் ஒரு கிறுக்கு தனம் செய்யாமல் இருந்ததில்லை, ரயில் வருவதற்கு சற்று முன் , தடத்தின் மேல் சிறு கல்லை வைத்து விட்டு, அது ரயிலின் சக்கரத்தில் உடைந்து  பொடி ஆவதை ஆசையோடு பார்போம்! ஒரு நாள் மூன்று வெவ்வேறு அளவிலான கற்களை ஒன்றன் பின் ஒன்றாக தடத்தின் மேல் வைத்து வழக்கம் போல் காத்து கிடந்தோம்! எங்க ஊரு புகை வண்டி வழக்கம் போல் அக்கட்களை சுக்கு நூராக்கிவிட்டு சென்றது! கூடவே ரயிலின் ஓட்டுனரும் தன் நாக்கை மடக்கி , விரலை ஆட்டு ஆட்டென்று  ஆட்டி விட்டு சென்றார்! அதுக்கப்புறம் ரயில்வே தடத்தின் திசையில் கூட தலை வைத்து படுத்ததில்லை!