எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


8 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -22

தேவைக்கு அதிகமா
உணவு உட்கொள்ளும் போது
குண்டாயிடறது நீங்களோ
உங்க வீட்டு நாய் குட்டியோ மட்டும்
அல்ல உங்க வீட்டு ரீசார்ஜபல்
பேட்டரிகளும் தான்!

படம்

 

ஒரு வாரத்துக்கு ஷட்டரை இழுத்து மூடு
என்று கணவரின் அலுவலகத்துக்கும்
கேட்டை இழுத்து சாத்து
என்று பிள்ளைங்களின் ஸ்கூலுக்கும்
அன்பு கட்டளை பிறப்பித்திருக்கும்
போராட்டகாரர்கள் ஒருத்தர் கூட
என்னை ஒரு வாரத்துக்கு வேலை செய்யாதே
என்று சொல்ல மாட்டீகிராங்க…
Samaikyandhra Agitation!! — feeling sad in Guntur.

படம்

 

உலக வரலாற்றில் 
முதன் முறையாக
துருவ கரடியும்
நம்மூர் கரடியும்
இணைந்து மிரட்டும்
இராம நாராயணனின்
புத்தம் புது திரைபடம்
ஆர்யா சூர்யா!

படம்

 

நாளையில் இருந்து முழு
மூச்சோடு பந்த் செய்ய
போறாங்களாம் என்னவோ
இவ்ளோ நாள் வென்டிலேட்டர்
உதவியோடு பந்த் செஞ்சா மாதிரி!! — feeling irritated in Guntur.

படம்

 

எவுக வந்து நின்னாலும்
சரியா காது கேட்காது
முழுசா பார்வை தெரியாது
ஒழுங்கா பேச முடியாது..
.
.
.
.
.
When ur connection is too slow
in Skype than the opponent!!

படம்

கண்டவுடன் உண்டானதோ மலைப்’பூ’
மறு நொடி உள்ளம் கொண்டதோ பூரிப்’பூ’
இது நாவில் சுவைத்ததோ இனிப்’பூ’
அதிகாலை நேர எதிர்பாராததொரு களிப்’பூ’.

படம்


2 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -20

என்னது.. வராமல் வந்த
மாப்பிள்ளை என்ன குறையை
கண்டுவிட்டார் என்று இப்படி
முறுக்கி கொண்டு ஓடுகிரார்!
என் துணிகளை எல்லாம்
இன்றாவது வாழ sorry காய
வைத்துவிடலாம் என்று பார்த்தால்
ஒன்றும் நடக்காது போலையே..
மேகங்களின் பின் ஒளிந்து
கொள்ளும் மழை காலத்து சூரியன்!!!

cloud

கடல் மாதிரி வீடு என்ற
ஆசை வார்த்தையை நம்பி
மோசம் போய் விடாதீர்கள்
அங்கே வேலைகள் ஓய்வதில்லை!!

images (7)

இந்த பல்லும் ஒரு நாள்
சூத்தையாகும் என்பது
தெரிந்த ஒரு விஷயம் தான்..
அதுக்காக விழுந்து விழுந்து
இரண்டு வேளை பல்லை தேய்க்கனும்
ரூட் கேனால் பண்ணனும்
ஸ்டெம் கேனால் பண்ணனும்
அப்படியெல்லாம் எந்த ஒரு
அவசியமும் இல்லை
.
.
பூண்டு பல்!!

images (10)

இன்று ஒரு பூனை
அது வசிக்கும் வீட்டினுள்
இருந்து வெளியே கிளம்ப
எத்தனிக்கையில் நான் குறுக்கே
வந்துட்டேன், இந்த சகுனம்
நல்லதா கெட்டதா பூனைக்கு!!

images (11)

கோதுமை மாவை
தண்ணீர் விட்டு பிசைந்து
உருண்டைகள் இட்டு
அதை கல்லில் போட்டு
வட்டமாக தேய்த்து
எண்ணெய் காய்வதற்கு
முன்பே பூரிகள் இட
முயற்சித்தால் உங்கள்
மூளை இன்னும் சரி வர
காய ஆரம்பிக்கவில்லை
என்று அர்த்தம்!!

images (12)


10 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -17

ஒரு நாள் தாங்கி பிடித்தேன்
மறு நாள் கை நழுவ விட்டேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா…..
என் உயிர் கை பேசியே!

படம்

 

உளுந்தை ஊற வைத்து
நன்கு அரைத்து
உப்பு, வெங்காயம், மிளகாய்,
கரிவேப்பிலையுடன் சிறிது
அன்பையும் சேர்த்து
துளி கூட எண்ணெய்
குடிக்காமல் சுட சுட மெது
வடை சுட்டு குடுத்து
விட்டு ஆசையுடன் கணவரின்
விமர்சனத்தை எதிர்பார்த்தால்
நன்கு ருசித்து புசித்து விட்டு 
சொல்வார் உளுந்து நல்ல
உயர்ந்த ரகம் போல என்று..
முடிவு செய்தாயிற்று
இனி அடுத்த வாரம் வடை 
சுடுவதற்கு பதில் ஒரு
கிண்ணத்தில் இதே உளுந்தை
கொஞ்சம் போட்டு ஸ்பூன்
போட்டு குடுத்து விட
வேண்டியது தான்!!

படம்

நான் எப்போ வருவேன்
எப்படி வருவேன்னு சொல்ல
முடியாது ஆனா மசாலா
நெடி மூக்குல ஏறுகிர ஒவ்வொரு
நொடியும் கண்டிப்பா வந்தே தீருவேன்
.
.
தும்மல்!

படம்

 

வைரசுக்கும் என் மூச்சு
குழாய்க்கும் இடையே
நடந்த ‘வைரஸ்ஸே வெளியேறு’
போராட்டத்தின்
உச்ச கட்டமாய் மூக்கடைத்து
தன் வேலை நிறுத்தத்தை
பகிரங்கமாய் உடம்புக்கு அறிவித்து
இருக்கிறது என் மூக்கு!!

படம்


7 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -10

எந்த கொம்பனாலையும்
எடுக்க முடியாத
வெள்ளை துணிகளில் படியும்
கலர் சாய கரைகளை
சும்மா அசால்ட்டா ஒரே
சலவையில் நீக்கிடுவான்
இந்த கும்கி
AMWAYயின் SA8!!

படம்

பஸ்ஸில் சீட் இருப்பது
போல் கண் கட்டு வித்தை
காட்டினால் அவர்
MAKE MY TRIP.COM
பஸ்ஸில் சீட் இருக்குதா
என்று நோட்டம் விட்டாலே
போதும் அடுத்த நிமிஷமே
கர்சீப் போடாத குறையாய்
ஒரு சீட்டை பிடித்து நம்மை
திக்குமுக்காட வைப்பார்
TRAVELYAARI.COM!!

படம்

 

ஒரு பாவமும் அறியாமல்
தான் உண்டு தன் வேலை உண்டு
என்று தேமேனு இருக்கும் போதும்
நீ இந்த தப்பு பண்ணிட்ட
அந்த தப்பு பண்ணிட்ட என்று
கூசாமல் பொய் சொல்லி
கழுத்தை புடிக்காத குறையாய்
வெளியே தள்ளி விட்டு
அடுத்த நொடியே உள்ள வா வா
என்று அழைக்கும் அவரின் 
சொல்லுக்கு உடன்பட்டு மானம்
கெட்டு நாமும் உள்ளே நுழைந்தால்
அவரே IRCTC!!

படம்

 

நேற்று இரவிலிருந்து
எடுத்ததெற்கெல்லாம்
சள் புள்ளு என்று 
எறிந்து விழும் என்னை
பார்த்த பின் நிச்சயமாக
என் கணவருக்கு புரிந்திருக்கும்
நேற்று இரவு கோமா நிலைக்கு சென்ற
ஸ்டெபிலைசர், இது நாள் வரை
ஃப்ரிஜின் வோல்டேஜை
மட்டும் கண்ட் ரோல் செய்யவில்லை
தன் மனைவியின் மனநிலையையும் 

சேர்த்து தான் என்று!!

படம்

ஸ்கூலுக்கு மட்டம்
போட்டு விட்டு பிள்ளைகள்
பந்தும் கையுமாய்
விளையாட கிளம்பினால் 
.
.
.
.
.
.
.
அன்று பந்த்!!
படம்
 
Alpenliebe Juzt Jelly
ஒன்னு எடுத்து சாப்பிடுவதும்
Rinogel மருந்து பாட்டிலை திறந்து
ஒரு 10 மில்லி வாயில் ஊற்றிகொள்வதும்
சாத் சாத் ஒன்று தான்!!
படம்


8 பின்னூட்டங்கள்

ஒளிந்திருந்த முகம் -2

படம்

Belenனின் கோபமான, கோர முகத்தை காட்டிய இயக்குனர், அவளுடைய கடந்த கால நிகழ்வுகளுக்கு நம்மையும் இழுத்து செல்கிரார்.. Belenனின் காதலன் Adrianனுக்கு, கொலம்பியாவில் உல்ல Bogota மாநகரத்தின், Cவை, தலைமை ஏற்று, வழி நடத்த அழைக்கிரார்கள்! அவன் தன் உயிர்க் காதலி Belenனையும், அழைத்து செல்கிரான். Belen தன் காதலனுக்காக, தான் பார்த்து கொண்டிருக்கும் வேலையை துறந்து விட்டு, காதலோடு அவனை தொடர்ந்து செல்கிறாள்.படம்

Bogotaவில், ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில், அமைந்த, அரண்மனை போன்ற பெரிய வீட்டை வாடகைக்கு எடுக்கிரார்கள். அந்த வீடு, Emma என்ற ஒரு பெண்மணிக்கு சொந்தமான வீடு. அவளுடைய கணவர் ஒரு ஜெர்மானியர். அவர் இறந்து விட்ட படியால், அவள் இந்த வீட்டில் இருக்க விரும்பவில்லை எனவும், தான் பெர்லின் செல்ல விரும்புவதாகவும், குறிப்பிடுகிராள். தன் வளர்ப்பு நாயான Hanசை பார்த்து கொள்ளுமாரும், பெர்லின் கிளம்புவதற்க்கு முன், ஒரு தடவை, வருவதாய் சொல்லி விட்டு கிளம்புகிராள்.படம்

Adrianனும், Belenனும், தங்கள் வாழ்க்கையை அவ்வீட்டினுள் இனிதே ஆரம்பிக்கின்றனர்!! ஒரு நாள் தான் வழி நடத்தும்,இசை குழுவினர் அரங்கேற்றிய நிகழ்ச்சியை காண்பிக்க, Belenனை அழைத்து கொண்டு செல்கிரான் Adrian. மிக அற்புதமாக, இசை குழுவை வழி நடத்தும் Adrianனை கண்டு, உள்ளம் பூரித்து போகிராள் பெலென். நிகழ்ச்சி, பெருத்த ஆரவாரத்துடனும், கைத்தட்டலுடன் இனிதாக முடிகிரது. மிகுந்த உற்சாகத்துடன் Adrianனை தேடி செல்கிராள் பெலென். அவனை, காணாமல் ஏமாற்றம் அடையும் அவள், ஒரு மறைவான இடத்தில்,பேசி கொண்டிருக்கும், Adrianனையும், அவனுடைய இசை குழுவின், வயலின் வாசிக்கும் Veronicaவையும் முதன் முறையாக பார்க்கிராள். பிறகு, இருவரும் வீடு திரும்புகிரார்கள்.

அடுத்த நாள், Adrian வேலைக்கு செல்ல, பெலெனும் தன் வேலை சம்பந்தமாக, தனியே ஊருக்குள் செல்கிராள். வேலை வேகமாக முடிந்த படியால், Adrian வேலை செய்யும் இடத்துக்கு, சென்று விட்டு வர நினைக்கிராள். அவனுடைய அலுவலகத்துக்கு உற்சாகமாக சென்றவளுக்கு,ஏமாற்றமே மிஞ்சுகிரது. அங்கே, Adrian, Veronicaவுடன், சிரித்து பேசி, தண்ணியடித்து கூத்தடித்து கொண்டிருக்கிரான்! படம்விருட்டென்று, அவனை இழுத்து கொண்டு வெளியேறிய, பெலென்,வீட்டுக்கு செல்லும் வரை, அவனை கடிந்து கொண்டே வருகிராள். Adrianனும், தனக்கும், Veronicaவுக்கும், எந்த ஒரு உறவும் இல்லை என்று அவள் தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிரான். ஊடலுடன் ஆரம்பித்த அந்த தினம், இரவில் காதலுடன் முடிவடைகிரது.

அடுத்த நாள், Adrian வேலைக்கு, செல்ல ஆயுத்தமாக, அவனின், கை பேசியை எடுத்து கொண்டு, கோபமாக, அவனை இடை மறிக்கிராள் பெலென். ‘உனக்கும், Veronicaவுக்கும் என்ன சம்பந்தம், அதிகாலையில், எதற்கு இவ்வளவு குறுஞ்ச்செய்திகள்’ என்று கோபம் கொள்கிராள். அப்பவும், Adrian, முகத்தில் சின்ன சலனம் கூட இல்லாமல், ‘ உன்னை தவிர வேறு ஒரு பெண் என் வாழ்வில் கண்டிப்பாக இல்லை’ என்று பதிலளித்து விட்டு தன் வேலைக்கு செல்கிரான். அப்பொழுது, அந்த வீட்டினுடைய உரிமையாளர், Emma ,வீட்டுக்கு வருவதாய் போன் செய்கிரார். அடுத்த, அரைமணி நேரத்தில் வந்து சேரும் Emma, தான் பெர்லின் புறப்பட்டு விட்டதாகவும், கடைசியாக, பெலெனை பார்த்து விட்டசெல்ல வந்ததாகவும் குறிபிடுகிறாள். பெலெனும், எம்மாவும் மனம் விட்டு பேசி கொள்கின்றனர். எம்மா, தன் ஜெர்மானிய காதல் கணவனுக்காக, இந்த Bogota மாநகரத்துக்கு வந்தவள், இன்று தன் சொந்த ஊரான, பெர்லினுக்கு கிளம்பி விட்டதாக கூறுகிராள். உடனே பெலெனும், தானும், தன் காதலனுக்காக, இங்கு வந்ததாகவும், இப்படி இங்கே காதலனை நம்பி வந்து,பெரிய பிழை செய்து விட்டேனோ என்று மன கிலேசம் கொள்கிராள்.படம்

இதை கேட்ட எம்மா, பெலெனுக்கு, தன் மனதின் உள்ளே, மறைத்து வைத்த ரகசியத்தை போட்டு உடைக்கிராள். எம்மா, பெலெனை, வீட்டினுள்ளே அவர்களுடைய படுக்கை அறைக்கு அழைத்து செல்கிராள். அங்கே, இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்னே, ஒரு ரகசிய அறையை காண்பிக்கிராள். அந்த அறைக்கான தாழ்ப்பாள், புத்தக அலமாரின் உள்ளே அமைந்திருந்தது. இவர்களுடைய, படுக்கையறையிலும், குளியலறையிலும், இருக்கும் கண்ணாடி, One Way Vision கண்ணாடி. ரகசிய அறையிலிருந்த படியே, படுக்கையறையிலும், குளியலறையிலும் நடப்பவற்றை தெள்ள தெளிவாக காண முடியும், சத்தத்தையும் தெளிவாக கேட்க முடியும் என்று சொல்கிராள். அதே போல், ரகசிய அறையில் இருந்து, ஒரு சின்ன சத்தம் கூட வெளியே வராது, என்றும் சொல்கிராள். இந்த வீடு, தன் ஜெர்மானிய கணவரின் ஆசைப்படி, ஒரு இத்தாலிய கட்டிடம் கட்டுபவராள் வடிவமைக்கப்பட்ட வீடு. போர் காலங்களில், மறைந்து கொள்வதற்கு என்று கட்ட பட்ட ஒரு ரகசிய அறை இது என்றும், Adrianனின் உண்மையான காதலை கண்டு கொள்ள இந்த அறை உனக்கு உதவும், என்று கூறிவிட்டு, விடை பெறுகிரார் எம்மா.படம்

அன்றே, தன் உயிர் காதலனுக்கு, காதல் பரிட்சை, வைத்து, சிறிது அவனுக்கு, புத்தி புகட்ட எண்ணுகிராள் பெலென்.அவசர, அவசரமாக, தன் உடைமை அனைத்தையும், எடுத்து கொண்டு, அந்த ரகசிய அறைக்குள் தஞ்சம் அடைகிராள் பெலென். அதற்கு முன், தன்னை தானே, ஒரு ஒளி படத்தை எடுத்து, முன் பதிவில் கூறியபடி, தான் அவனை விட்டு  நீங்கி செல்வதாகவும், இனி தன்னை தேட வேண்டாம் , இந்த முடிவே இருவருக்கு நல்லது என்று உருக்கமாக பதிவு செய்து, அவன் அதை எடுத்து பார்க்க, ஒரு பேப்பரில் குறிப்பு எழுதி, அதை முகம்பார்க்கும் கண்ணடியில் ஒட்டுகிறாள். Adrianனின் கார் வரும், சத்தம் கேட்கவே, அவசர அவசரமாக, ரகசிய அறைக்குள் ஓடி,கதவை சாத்துகிராள். அந்தோ பரிதாபம், ஓடுகிர அவசரத்தில், ரகசிய அறையின் சாவி, கீழே விழுவது கூட தெரியாமல், ஓடி ,கதவை சாத்தி கொண்டாள், நம் கதா நாயகி..

Adrian, காலையில் நடந்த வாக்குவாதங்களை மனதில் வைத்து, தன் காதலி பெலெனுக்காக, அழகான பூங்கொத்துடன், படுக்கையறைக்குள் நுழைகிரான். பெலெனை, காணாமல், தவிக்கும் அவன் கண்ணில், அவள் கண்ணடியில்,ஒட்டிய குறிப்பு கண்ணில் படுகிரது. ஒளி படத்தை பார்த்து விட்டு, துக்கம் தாங்க முடியாமல், ஒவென்று கதறிஅழுகிரான். இவை அனைத்தையும் ஒன்று விடாமல், ரகசிய அறையில் இருந்து பார்த்த பெலெனுக்கு, தான் தேவை இல்லாமல், தன் அன்பு காதலனை சந்தேகம் கொண்டு விட்டோமோ என்று பதறியடித்து ,ரகசிய அறையை திறந்து வெளியே சென்று தன் அருமை காதலனை கட்டிகொள்ள துடிக்கிராள்.

படம்சாவியை எடுக்க தன் கை பையின்னுள், துலாவிய போது தான், தான் சாவியை தொலைத்தது அவளுக்கு தெரிய வருகிரது. காட்டு கத்தல் கத்தியும், பிரயோஜனம் இல்லை, ஒரு சத்தம் கூட, வெளியே Adrianனுக்கு கேட்க வில்லை. அழுது முடித்து, வாஷ்பேசினில், தண்ணீர் நிரப்பி, முகம் கழுவிய Adrianனை, குளியலறை கண்ணாடி வழியாய், பார்க்கும் பெலென், ஒரு உருட்டு கட்டையால், ரகசிய அறையில் செல்லும் தண்ணீர் குழாய்களை அடித்து, வாஷ் பேசினில் எழுந்த நீர் அலைகள் மூலம், அவனின் கவனத்தை கவர முயலுகிராள்.. மனம் வெறுத்த அவனோ, அவள் பிரிந்து சென்ற துக்கம் தாங்காமல், வீட்டை விட்டு, தன் கார் போன போக்கில் செல்கிரான். விதியை நொந்தவாறு பெலென் ரகசிய அறைக்குள் செய்வதறியாமல் திகைக்கிறாள். பெலென் தப்பித்தாளா, அவள் காதலனுடன்  சேர்ந்தாளா, பொறுத்திருந்து அடுத்த பதிவில் பார்ப்போம்.


4 பின்னூட்டங்கள்

மிஸ் யூ …..

படம்

நம்ம வாழ்க்கையில், ஒருத்தர் நம்ம கூடவே இருக்கிர வரையில்,

அவர்களுடைய அருமை நமக்கு

தெரியாது! அவர்கள் தூர விலகி சென்ற பின்னர் தான், அவர்களுடைய

நியாபகங்கள் நம்மை துரத்தி துரத்தி வரும். இந்த பதிவு கூட, நான் ரொம்பவே

மிஸ் செய்யர ஒருத்தர பத்தி தான்! சின்ன வயசில், எனக்கு அவர அவ்வளவா

பிடித்ததில்லை! அவரை நேரில் கண்டாலே, ஒட்டம் பிடித்து விட்டு தான் மறு

வேலை, இல்லையேல் அழ அழ வைத்து விடுவார்! ஆனால் இவர் இல்லாம

நான் இல்லை என்ற நிலைமை ஒரு கால கட்டத்தில் வரும் என்று கனவில்

கூட நினைத்ததில்லை!

அவர் இப்போ எங்க கண்ணில் பட்டாலும், முதல் ஆளாய் அழைத்து வருவது

நான் தான்! இவ்ளோ ஸ்பெசலானவர், வேற யாரும் இல்ல.. நம்ம

Mr.சின்னவெங்காயம் அவர்கள் தான்!!

இவர் நம் தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை! தமிழ் நாட்டை

தாண்டி, எந்த ஊர் சென்றாலும், முதலில் தேடுவது இவரை தான்! தமிழர்,

மலையாளீ, இவர்களை தவிர, வேறு மாநிலத்தவர் எவருக்கும், இதன்

அருமை தெரியவில்லை! பெரிய வெங்காயமே, அவர்களுடைய விருப்பம்!

இதை எப்போ உரிச்சி, எப்போ வேலையை முடிக்க, என்று எரிச்சலை

வெளிப்படுத்துவார்கள்!

உண்மைதான், அதை தோலை உரித்து, வெட்டுவது,

என்பது அவர்கள் சொல்வது போல பெரிய வேலை தான், ஆனால், அவற்றின்

நற்குணங்களை அறிந்தோர் குறை சொல்ல மாட்டார்கள்!

இப்போ வெங்காயம் வெட்டுவதற்கு என்று நிறைய கருவிகள் வந்து விட்டன,

இதே மாதிரி, வெங்காய தோலை உரிப்பதற்க்கும், ஏதாவது கண்டுபிடித்தால்

நன்றாக இருக்குமே, என்று நானே பல முறை யோசித்ததுண்டு!  நான்

சமையல் செய்ய படித்த புதிதில் இருந்து இன்று வரை, அழாமல் வெட்டியதே

இல்லை! நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, சில நேரம் காரணமே இல்லாமல் அழ

வைப்பர்கள், அது மாதிரி தான் இதுவும் என்று மனதை தேத்தி கொள்வேன்!

எனக்கு கல்யாணம் முடிந்து, புகுந்த வீடு சென்ற புதிதில், என்

அத்தைஎன்னை, வெங்காயம் வெட்டவே விட மாட்டார்… அவருக்கு பயம்,

நான் அழுது, அழுது வெட்டுவதை பார்த்து, என்ன புது பெண், வந்து கொஞ்ச

நாள் கூட ஆக வில்லை, இப்படி அழுதே  என்று யாரும் சொல்லி

விடுவார்களோ என்று!! எவ்வளவு அழுகை வந்தால் என்ன, எனக்கு எந்த

குழம்பு, எந்த கூட்டு வைத்தாலும், கை நிறைய வெட்டி போட்டால் தான்

திருப்தியாக இருக்கும்!

என் பசங்க இருவரும், நான் சிறு வயதில் செய்தது போலவே,

வெங்காயத்தை, தனியாக எடுத்து தட்டின் ஒரமாக வைத்து விடுவர்!

அதனால் நான், வெங்காயம் போட்டதே தெரியாமல், குழம்பு

வைத்து, அவர்களை சாப்பிட வைத்து விடுவேன்! சும்மாவா, சின்ன

வெங்காயம், உடம்புக்கு குளிர்ச்சியை தரும், நம் ரத்தத்தை சுத்திகரிக்கும்

ஆற்றல் கொண்டது! மெட்ராஸ் ஐ, போன்ற கண் நோய், வரும் சமயங்களில்

எல்லாம், இந்த வெங்காயத்தை, வீட்டினுள், ஆங்காங்கே உரித்து

வைத்து விட்டால், ஒருத்தரிடம் இருந்து, இன்னொருவருக்கு பரவாது.. மிக

சிறந்த கிருமி நாசினி! காலில் முள் குத்தி வலி எடுப்பவர் கூட, இந்த சின்ன

வெங்காயத்தை நன்கு வதக்கி, ஒரு துணியில் வைத்து கட்டி விட்டால், முள்

தானாக சிறிது நேரத்தில் வெளியில் வந்து விடும்.. இப்படி நிறைய

பாட்டி வைத்தியங்கள் சொல்லிட்டே போகலாம்!

சரி, சரி நம்ம விஷயத்துக்கு வருவோம், இப்போ நாங்க இருக்கிர

குண்டூரில் சின்ன வெங்காயம் இல்லை! கல்யாண சீசன் சமயங்களில்

மட்டுமே விற்பனை செய்ய படுமாம்! விசேஷங்களின் போது, சாம்பாரில் இந்த

சின்னவெங்காயத்தை போடுவார்களாம்! இப்பெல்லாம், எவ்வளவு

கவனமாக சமையல் செய்தாலும், ஏதோ ஒன்றின் சுவை குறைந்தது

போலவே இருக்கிரது! நிஜமாவே, ரொம்ப மிஸ் செய்யரேன், Mr.சின்ன

வெங்காயம், மிளகாய் குழம்பு, வெந்தய குழம்பு, மீன் குழம்பு எதுவுமே, நீங்க

இல்லாமல் ருசிக்கவே இல்ல! அய்யோ, நம்ம ஊரு சின்னவெங்காய

பக்கோடா, எல்லாம் கண்ணுக்குள்ளேயே இருக்குது, போதும் இதுக்கு மேல

யோசிச்சா அழுகை வந்து விடும்! சின்ன வெங்காயம், உரிக்க, உரிக்க உள்

ள ஒன்னுமே இல்ல தான், ஆனால் என் உள்மனசுல, அதுக்கு நிறையவே

இடம் இருக்கு!!!!!!!