எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


8 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -35

ஒரே சத்தம் உள்ள இரு வார்த்தைகள்
ஆனால் அர்த்தமும் எழுத்துக்களும்
வெவ்வேறு என்றால் அது ஹோமோபோனு..
வாங்க நினைக்கும் பழைய வீடு
பற்றி இருவர் இரு விதமாக பேசினால்
சத்தம் போடாம வாங்கி போட்டு
ஒரு ஹோமம் பண்ணு…

Image

 

இன்று ஜுஸ்ட் மிஸ்ஸு
இல்லையேல் முன் நடந்து
சென்ற திருவாளர் வாயில்
இருந்து சுழன்று வந்த
எச்சில் என் மீது பட்டு நான்
மூடு அவுட் ஆகி இருக்ககூடும்!!

Image

 

ஒரு வாய் சப்பாத்திய
எவ்வளவு நேரம் வாயிலேயே
வெச்சிட்டு இருப்ப அது என்ன
பபிள்கம்மா.. முழுங்குடா..
கரெக்டா சொன்னீங்கம்மா
பபிள்கம் மாதிரி தான் இருக்கு
தூ..நு துப்பிடட்டா..
?? 

Image

பளீர் என்று அடித்த அடியில்
நேற்று தலையெல்லாம் ஒரே பெயின்
இன்று தொண்டையெல்லம் ஒரே பெயின்
சரியா தான்யா வெச்சிருக்காங்க
பெயர் ‘பெய்ன்’ட் என்று!! 

Image

இன்று என் வீட்டுக்கு வரும் 
எந்த ஒரு போன் காலை
நான் எடுத்து பேசும் போது
கண்டிப்பாக போன் செய்தவர்
கேட்பார் ‘ தம்பி அம்மா வீட்டில்
இருந்தால் கொஞ்சம் குடுப்பா..’
தொண்டை கரகரப்பு!!

Image


11 பின்னூட்டங்கள்

வாயில் போட்ட அரிசி..

படம்

இதுவரை புன்னகையை மட்டும்

பகிர்ந்து கொண்ட ஆந்திர கீழ்வீட்டுக்காரங்க

முதன்முறையாய் படி ஏறி வந்து புரிந்தும்

புரியாமலும் வார்த்தைகளை பகிர்ந்து கோண்டார்..

அவர் வீட்டில் லட்சுமி பூஜையாம்

கலந்து கொள்ள வேண்டினார்

மறுக்காமல் தலையை ஆட்டி வைத்தேன்

இரவு 8 மணிக்கு அவர் வீட்டை சென்றடைந்தோம்

அவர் அவர் மாமியார் மைத்துனர் சகிதமாய்

தயாராகவே இருந்தார்…

அவர் மாமியார் ஏதோ ஜெபித்து கொண்டிருந்தார்

மரியாதை நிமித்தமாய் ஒரு சிறு புன்னகையை

உதிர்த்து விட்டு தன் ஜெபத்தை தொடர்ந்தார்

பரஸ்பரம் புரியாத மொழியில் அறிமுகத்துக்கு

பின் எனது பெயரை கேட்டு மனம் குளிர்ந்தார்

பின் ஒரு சிறு பாயை நடு கூடத்தில் விரித்தார்

அதில் என்னை அமற செய்து குங்குமம் சகிதமாய்

வந்து எனது எதிரில் அமர்ந்தார்..

என் உச்சந்தலை வகிடு முழுவதும் குங்குமத்தை

நிரப்பினார் என் தாலியிலும் இட்டு விட்டார்

பின் என்னையும் அவ்வாறே செய்ய சொன்னார்

அதன் பின் பூஜை பிரசாதமாய்

பாயசத்தை அருந்த குடுத்தார்

பின் ஒரு  கலவை சாதம்

அதன் பின் மஞ்சள் நிறத்தில் கொஞ்சம்

அரிசியையும் குடுத்து விட்டு

மஞ்சளை சிறிது தண்ணீர் விட்டு கலந்து

எடுத்து வந்து என் பாதங்களை

மஞ்சள் தேய்த்து மஞ்சளாக்கினார்

பின் என் பாதங்களை தொட்டு வணங்கினார்

அய்யையோ நான் தமிழ் நாட்டின் அம்மா இல்லை…

என்று அலற வேண்டும் போல் இருந்தது

தொட்டு வணங்கி விட்டு எழுவார் என்று

பார்த்தால் அவரோ நான் அட்சதை போட்டு

ஆசிர்வதிப்பதற்க்காக காத்து கொண்டிருந்தார்..

அவரிடம் எப்படி சொல்லுவது அவர் அட்சதை

போடுவதற்க்காக குடுத்த மஞ்சள் அரிசியை

நான் எப்பொழுதோ வாயில் போட்டு விட்டேன் என்று!


2 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -20

என்னது.. வராமல் வந்த
மாப்பிள்ளை என்ன குறையை
கண்டுவிட்டார் என்று இப்படி
முறுக்கி கொண்டு ஓடுகிரார்!
என் துணிகளை எல்லாம்
இன்றாவது வாழ sorry காய
வைத்துவிடலாம் என்று பார்த்தால்
ஒன்றும் நடக்காது போலையே..
மேகங்களின் பின் ஒளிந்து
கொள்ளும் மழை காலத்து சூரியன்!!!

cloud

கடல் மாதிரி வீடு என்ற
ஆசை வார்த்தையை நம்பி
மோசம் போய் விடாதீர்கள்
அங்கே வேலைகள் ஓய்வதில்லை!!

images (7)

இந்த பல்லும் ஒரு நாள்
சூத்தையாகும் என்பது
தெரிந்த ஒரு விஷயம் தான்..
அதுக்காக விழுந்து விழுந்து
இரண்டு வேளை பல்லை தேய்க்கனும்
ரூட் கேனால் பண்ணனும்
ஸ்டெம் கேனால் பண்ணனும்
அப்படியெல்லாம் எந்த ஒரு
அவசியமும் இல்லை
.
.
பூண்டு பல்!!

images (10)

இன்று ஒரு பூனை
அது வசிக்கும் வீட்டினுள்
இருந்து வெளியே கிளம்ப
எத்தனிக்கையில் நான் குறுக்கே
வந்துட்டேன், இந்த சகுனம்
நல்லதா கெட்டதா பூனைக்கு!!

images (11)

கோதுமை மாவை
தண்ணீர் விட்டு பிசைந்து
உருண்டைகள் இட்டு
அதை கல்லில் போட்டு
வட்டமாக தேய்த்து
எண்ணெய் காய்வதற்கு
முன்பே பூரிகள் இட
முயற்சித்தால் உங்கள்
மூளை இன்னும் சரி வர
காய ஆரம்பிக்கவில்லை
என்று அர்த்தம்!!

images (12)


8 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -19

ஆவிகளுக்கு கால்கள் கிடையாது
இது உலகம் அறிந்த உண்மை..
ஆனால் சத்தியமாக கைகள் உண்டு
இது நான் அறிந்த உண்மை..
அய்யோ! பளாரென்று எப்படி
அறை விடுது தெரியுமா முகத்திலே
இட்லி குக்கரை திறக்க முற்படும்
ஒவ்வொரு தருணமும்!

Image

எங்க வீட்டிலேயும் ஒரு CCTv
கேமிரா மாட்டினால் என்ன
என்று பலமாக யோசிக்கிரேன்..
பின்னே வாங்கியே வராத
கொய்யா பழங்களை எங்கே
என்று குற்ற பத்திரிக்கை
வாசிக்கும் கணவருக்கு இனி
வரும் காலங்களில் மெய்பிப்பதற்க்கு!!

Image

வேண்டாம் என்று தான்
முதலில் நினைத்தேன்
ஆனால் இந்தா வைத்து கொள்
என்று கூப்பிட்டு குடுத்த போது
வேண்டாம் என்று சொல்ல வார்த்தை
வராது விரும்பி இரு கை நீட்டி 
வாங்கி கொண்டேன் அந்த
பச்சை மண்ணு பிள்ளையை…
அழகாய் வசீகரித்த அவனை 
பார்த்து பார்த்து பத்திரமாய் 
கூட்டத்தில் இடி படாமல் நெஞ்சோடு
சேர்த்து வீடு வந்தோம்
அக்கம்பக்கத்தினரை அழைத்து 
அழைத்து அவனை காண்பித்து அவர்கள் 
மனம் திருடி கொண்டோம்
ஆசை ஆசையாய் செய்த பால்
கொழுக்கட்டையை ஊட்டி மகிழ்ந்தோம்
இந்த பச்சை மண் பிள்ளையின்
ஈரம் கூட காயவில்லை அதற்குள்
அவனை ஆற்றிலேயோ குளத்திலேயோ
தொலைத்து விட்டு வர வேண்டுமாமே
என்ன ஒரு அநியாயம்
இதற்கு தான் மனம் முதலிலேயே அடித்து
கொண்டதோ வேண்டாம் வேண்டாம் என்று!

Image

 

மதியம் 3:30 மணிக்கு
சிறிது கண் அசந்து
தூங்க நினைத்து
சாயுங்காலம் 4:30
மணிக்கு எழ அலாரம்
வைத்து இடையே உள்ள
1 மணி நேரத்தில் 40
தடவை மணி ஆயிற்றா
என்று உள்ளம் பதைத்து
பதைத்து எழுந்து பின்
உறங்கியும் உறங்காமலும்
எழுந்து அலாரத்தை
பொறுப்பாக அணைத்து
விட்டு தலை வலிக்க வலிக்க
எழுந்தால் அதுவே குட்டி
மதிய நேர தூக்கம்!!

 படம்


12 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -2

கணவர் கோபத்தில்
வீசி எறியும்
வார்த்தை பந்துகளை
பதில் வார்த்தைகளால்
அடிக்காமல் விடுவதும்,
சுழற்றி சுழற்றி
விளாசி சிக்சர் அடிப்பதும்
ஒவ்வொரு மனைவியின்
சாமர்த்தியத்தை பொறுத்த விஷயம்!!

bat

 
அந்நிய தேசத்தில்
வளரும் நம் தேசத்து
குழந்தைகளுக்கு
தாத்தா பாட்டி என்பவர்கள்
கம்ப்யூட்டர் ஜன்னல் வழியாக
அவ்வப்பொழுது எட்டி பார்த்து
பிஞ்சு மனங்களை
குதூகலிக்க வைப்பவர்கள்
Skype!

images (5)

 

எனக்கு புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று
சில சமயம் இழுத்த முதல் இழுப்பிலேயே
தன் தையலை பிரித்து விடும் அரிசி பை
பற்பல நேரங்களில் என்னை
முழி பிதுங்க வைப்பது ஏனோ!!!

images (6)

 

Twist பண்ணு
Lick பண்ணு
Dunk பண்ணு
அப்படியே
.
.
டாக்டர்ருக்கு கால் பண்ணு
அப்பாய்ன்ட்மென்ட் பிக்ஸ் பண்ணு
OREO!!

images (7)