டீ.ஏ மதுரம் காலத்தில் இருந்தே
பெண்கள் காணும் ரகசிய கனவுகளில் ஒன்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
‘ஒரு பட்டனை தட்டி விட்டா
ரெண்டு தட்டுல இட்லியும் சாம்பாரும்
பட்டுனு வந்திடனும்’
தெலுங்கானாவை
29வது மாநிலமாய்
அறிவித்தாலும் அறிவித்தார்கள்
இரண்டாவது நாளாகியும்
வன்முறைகள் தலை விரித்து
ஆடுகின்றன வீட்டினுள்
பசங்களுக்கு பள்ளி விடுமுறை!!
துகிலுரித்த
சில நிமிடங்களிலேயே
கொதிக்கும் குழம்பிலேயோ
வதங்கும் கூட்டிலேயோ
விழுந்து தன் இன்னுயிரை
மாய்த்து கொள்கிறது
மானமுள்ள வெங்காயம்!!
கண் முன்னே இருந்த போதிலும்..
என் வண்டி சாவி பாத்தியா
என் சாக்ஸ் எங்க
போன் புக் எங்க.. என்று
காலையிலேயே பரபரக்கும் கணவருக்கும்,
என் ஐ.டீ கார்ட் எங்க
என் பெல்ட் எங்க
என் பென்சில் எங்க..என்று
ஆட்டோ வரும் வரை அலறும் பையனுக்கும்
நான் சொல்ல நினைத்ததெல்லம்
ஒன்றே ஒன்று தான்
நான் ஒன்றும் Search Engine இல்ல!!