எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


4 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -13

இந்த தடவை எந்த ஒரு தவறும்
நிகழ்ந்து விட கூடாது என்ற 
சூதானத்தோடு வீட்டை பூட்டி
விட்டு மார்கெட் செல்லும் முன் ஒரு 
முறை எல்லாவற்றையும் சரி பார்த்து 
கொண்டேன்..
கைபையினுள் செல்போன் இருந்தது 
பர்ஸ் இருந்தது அதில்
முக்கியமாக பணமும் இருந்தது
பூமி தாய்க்கு உதவி செய்யவில்லை
என்றாலும் உபத்திரவம் செய்ய கூடாது
என்ற நோக்கில் எடுத்து வைக்கபட்ட
துணி பைகள் கூட பத்திரமாய்..
சீப்பு எதுவும் பின்னந்தலையில் சொருகி
இல்லை என்பதை கூட மறக்காமல்
சரி பார்த்து கொண்டேன்..
மூன்று நான்கு தடவை வாசற்கதவை 
பூட்டி திறக்கும் வேலை இல்லை என்ற
மன நிம்மதியோடு வீட்டை பூட்டி விட்டு
சாவியை பத்திரமாய் கைபையினுள் 
போட்டு வைத்தேன்…
மாடி படிகளில் சிட்டாய் பறந்த நான்
யாரும் பார்த்து விடுவதற்குள்
ஓடிய வேகத்திலேயே திரும்பவும்
வந்து எப்போதும் போல்
வீட்டை மறுபடியும் திறந்தேன்
ஜோடி மாற்றி போட்டு விட்ட
காலணிகளை கழற்றி மாற்றுவதற்காக!

படம்

 

குடும்பத்துகே தலைவியா
இருந்து என்ன ப்ரயோஜனம்
காலை நேரங்களில் சூடா
ஒரு கப் தேனீர் குடிப்பதற்குள்
ஒன்று ஆறி போய்விடுகிறது
இல்லை அவசரத்தில் நாக்கு பொத்து
போய் விடுகிறது!!!

படம்

 

இப்போதெல்லாம் காலை
நேரங்களில் எனக்கு ப்ரஷர்
செமையா எகிறிடுது
.
.
.
.
.
.
.
குக்கரில் ஒழுங்காக ப்ரஷர்
ஏறாத ஒரே காரணத்தினால்!!

படம்

இந்த இதயம் நல்லெண்ணை
இதயத்துக்கு நல்லது என்று
யாரு சொன்னாங்க…
பேக்கின் மீது அச்சடிக்கபட்ட
விலையை ஒரே ஒரு தடவை
கண் கொட்டி பார்த்தாலே நமது
இதயம் டமார் என்று வெடித்து 
விடும் போலயே…
அரை லிட்டர் பேக்கின் விலையே 
153 ரூபாயாம்!!!

படம்