எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -26

கூட்ட நெருக்கடியில்
முன் சென்ற பெண்ணை
ரகசியமாய் தீண்டி
அவள் கன்னம் சிவக்க
வைக்க எண்ணிய அவனுக்கு
பெரிய ஏமாற்றம்..
பகிரங்கமாய்
அவன் கன்னம் சிவக்க
வைத்தாள் அவள்!!

படம்

எவரூ எவரூனு..
சளைக்காமல் என் நம்பருக்கு
கால் செய்பவர்களுக்கும்
Hey who r u.. who is dis.. என்று
மண்டையை பிய்த்து கொண்டு
மெசேஜ் அனுப்புபவர்களுக்கும்
கண்டிப்பாக தெரிந்திருக்க நியாமில்லை
இவை என் கடை குட்டி பையனின்
லீலையில் ஒன்று என்று!!

படம்

அது என்ன மெனு கார்டில்
புதுசா உளவுசாறு தோசை
என்ற கிறுக்கு புத்தியின் சொல்
கேட்டு உளவு பார்க்க ஆர்டர்
செய்தாயிற்று…
கொஞ்சம் திக் திக் என்று
இருந்தாலும் அந்த தோசைக்கு
குடுத்திருந்த பில்டப் பார்த்து
சிறிது ஆறுதல் உண்டாயிற்று…
குண்டூர் ஸ்பெசல் என்று குறிப்பிட்டு
இருந்ததை பார்த்தாவது சற்றே
சுதாரித்திருந்திருக்கலாம்…
சத்தியமாக நினைக்கவே இல்லை
கொள்ளு, மிளகாய் வத்தல், மிளகு
புளி சேர்த்து கெட்டி ரசம் வைத்து
தோசை முழுவதும் தடவி குடுப்பார்கள் என்று!

படம்

யாருய்யா வானத்துக்கு விடாம
சீரியல் போட்டு காட்டுரது
இப்படி மூக்கால அழுது தள்ளுது!!

படம்

மக்காச்சோளம் அவிச்சு குடுக்கனும்
என்று நினைத்தால் மட்டும் போதாது
குக்கரில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு
அதை மூடுவதற்கு முன் மக்காசோளத்தை
உள்ள போட்டாச்சா என்று சரி பார்த்து கொள்வது
நலம் இல்லயேல் பசியோடு வரும் கணவர்
உங்களை அவித்து விடுவது நிச்சயம்!!

படம்

மழையே!
நீ விலாசம் மாறி
வந்து விட்டாயா
இது சிரபுஞ்சி
அல்லவே!! — in Guntur.

படம்

ஏ மழையே!
உன் சாகசத்தால்
என் மேனியில் உள்ள
ஒவ்வொரு செல்லிலேயும்
பூக்கள் பூத்ததோ இல்லையோ
என் வீட்டில் துவைத்து காய்ந்து
கொண்டே இருக்கும் துணிகளில்
பூஞ்சைகள் பூக்க போவது நிச்சயம்!!

படம்

விடாது பெய்யும் அடை மழையால்
நிறம் மாறின வெள்ளை பூக்கள்..
பஞ்சு!!

படம்


3 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -18

அழுத்தமாய் இதழ்களை பதித்தும் 
பாவம் இவரால் இப்பொழுதெல்லாம்
இம்ப்ரஸ் செய்யவே முடிவதில்லை
.
.
.
.
இன்னிகோ நாளைக்கோ
என்று நாட்களை எண்ணி
கொண்டிருக்கும் 
Liquid Shoe Polish!!

படம்

இருக்கலாம்..
முன் ஜென்மத்து பந்தமாய்
என் தர்ம பத்தினியாய்
பின்னே எவ்வளவு தான்
கண்டும் காணாமலும்
கேட்டும் கேட்காமலும்
பார்த்தும் பார்க்காமலும்
இருந்தாலும் சற்றும் 
சளைக்காமல் சல சலவென
சொன்னதையே திருப்பி
திருப்பி சொல்லுவதும்
நிமிஷத்துக்கு ஒரு முறை
குறுஞ்செய்திகளை அனுப்பியும்
உயிரை எடுப்பதேனோ
.
.
.
விட்டு தொடரும் பந்தம்
Airtel!!

படம்

அது ஒரு நடு நிசி நேரம்
சோவென்று கொட்டியது மழை
இரவை பகலாக்க முயன்று 
தோற்ற மின்னல்கள்
இருட்டிலே துலாவிய கைகள்
பட்டு உயிர் பெற்ற மின்விளக்கின்
வெளிச்சத்தில் முகம் அலம்ப 
நினைத்து முடியாமல் பச்சை
பொத்தானை அவசரமாக
அமுத்த அய்யோ………….
என்று அலறியது உள்ளம்
டேங்கில் தண்ணீர் 
‘காலி’யானது மட்டுமல்லாமல்
மோட்டரும் அநியாயமாய் தன்
உயிரை விட்டிருந்தது!!

படம்

 

துவையல் செய்வதற்காக
கொத்தமல்லி கரிவேப்பிலை புதினா
சம அளவு எடுத்து சுத்தம் செய்து
வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து
உளுந்தம் பருப்பு ஒரு கையளவு எடுத்து
போட்டு அது பொன்னிறமானவுடன்
காரத்திற்கேற்ப ஐந்து ஆறு பச்சை மிளகாய்
கிள்ளி போட்டு பத்து பல் பூண்டு உரித்து போட்டு
எலுமிச்சை அளவு புளியும் போட்டு
வதக்கி பின் கொத்தமல்லி கரிவேப்பிலை புதினாவை
அதில் போட்டு வதக்கும் போது எழும்
சுகந்தமான வாசனையின் சுகமான இம்சையில்
அருவியாய் ஜொள் அல்ல வியர்வை ஊற்றெடுக்க
அடுப்படி ஜன்னல் வழியாய் எனக்காகவே
புறப்பட்டு வந்து என் முகத்தை ஸ்பரிசித்து விட்டு
செல்லும் தென்றல் காற்று தான் நிஜமாகவே கவிதை!!

படம்


12 பின்னூட்டங்கள்

சமையலில் சொதப்புவது எப்படி

விருந்து என்றாலே அமர்களம் பண்ணி விட வேண்டாமா, ஆனால் நான் என் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு கொடுத்ததோ சொதப்பலோ சொதப்பல் விருந்து!

அன்று வினாயகர் சதுர்த்தி தினம், என்னை தவிர, என் வீட்டில் யாருக்கும் விடியவே இல்லை! நான் ரொம்ப உற்சாகமாக, கொலுக்கட்டை தயாரிப்பில் மூழ்கி இருந்தேன்! பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் கொலுக்கட்டையும், என் கணவருக்கு பிடித்த கோதுமை கொலுக்கட்டையும் ரெடியாகி கொண்டிருந்தது!

அந்தா, இந்தா என்று இழுத்தடித்து , என் வீட்டில் அனைவரையும் எழுப்பி, குளிக்க வைத்து, சாமி கும்பிட்டு, கொலுக்கட்டை சாப்பிட்டு முடித்த போது பத்தரை மணி ஆகி இருந்தது!
திடிரென்று ஒரு போன் கால், என் கணவருடைய மேல் அதிகாரியும், அவரது துணைவியாரும், இங்கே ஒரு வேலையாக வருகிரார்கள் என்று! மதியம் ஒரு மணிக்குள் வந்து விடுவார்கள், அதற்குள் மதிய சாப்பாடு ரெடி செய்து விடு என்று ஆர்டர் போட்டு விட்டு, என் கணவர் சிட்டாக பறந்து விட்டார்!

ஒரே டென்ஷன், விடுமுறை தினமாக இருந்ததால் , வீடு சிறிது பப்பரப என்று இருந்தது! எல்லவற்றையும் சரி செய்து, வீட்டை சுத்தம் செய்து, ஒரு பக்கம் சமையலையும் ஆரம்பித்து வைத்தேன்! ஒரு மணிக்குள் சமையலை முடித்து ஆக வேண்டிய கட்டாயம்! நான் இருந்த பரபரப்பில், அன்றைக்கு எனக்கு சமையலே மறந்து போயிற்று!

சாம்பாரில் உப்பு குறைந்து, புளி கூடி இருந்தது! கை வலிக்க, வலிக்க சீவிய முட்டை கோஸ், சிறிது குழைந்து போய் இருந்தது! வெண்டைக்காய், ஒவராக வதங்கி இருந்தது! எப்பொழுதுமே அருமையாக வரும் காளிப்ளவர் பக்கோடா, அன்று சவுக், சவுக் என்று பஜ்ஜி போல், அய்யோ பாவமே என்று காட்சி அளித்தது! என்ன காரணம் என்று ஆராய்ந்த போது, கடலை மாவுடன், பச்சரிசி மாவை கலப்பதற்கு பதிலாக, மைதா மாவை கலந்து இருந்தது தெரிய வந்தது! விக்கி விக்கி அழ வேண்டும் போல் இருந்தது!

எப்படி கணக்கு தேர்வில், ஒரு வினாவில் ஸ்டக் ஆகி , விடை வராமல் நின்று விட்டால், அன்னைக்கு அந்த தேர்வே, ஒய்ந்து போவது போல, எனக்கும் அன்று சமையலறை தேர்வில் ஊத்திகிச்சு! ஒன்று மாத்தி ஒன்று ஒரே சொதப்பல்!

ஒரு வழியாக , ஒரு மணிக்குள் மதிய சாப்பாடு ரெடி ஆகி விட்டது! விருந்தினர்களும் வந்து விட்டனர்! அவர்களை சாப்பிட அழைத்த போது, எங்களுக்கு இப்போதைக்கு பசி இல்லை என்று சொல்லி, என் கணவருடய மேலதிகாரி தன் துணைவியாரை எங்கள் வீட்டில் விட்டு விட்டு, என் கணவருடன், வேலையாக வெளியே கிளம்பினர்! வர மூன்று மணி ஆகும் என்று கூறினர்!
இப்படி தெரிந்திருந்தால் நான் மெதுவாகவே சமையல் செய்திருப்பேனே என்று உள் மனம் புலம்பியது! மேலதிகாரியின் துணைவியார் நன்றாக பழகுவார்கள், அவருடன் பேசி கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது, அவரை ஒரு வழியாக சாப்பிட வைத்து விட்டு, ஒரு 2:30 மணிக்கு, திரும்பவும், சூடாக, என் சிறிய குக்கரில் சாதம் ஆக்கினேன்!
3:00 மணி அளவில், என் கணவரும், அவருடைய மேலதிகாரியும் சாப்பிட அமர்ந்தனர்! சொதப்பல் பொறியல், வதக்கல் அனைத்தையும் பரிமாறி விட்டு, சூடாக சாதம் பரிமாற , என் சிறிய குக்கரை, அப்படியே தூக்கி சென்றேன்! ஒரு ஹாட் பாஃஸ் இல், சாதம் எடுத்து வைத்து பரிமாறி இருந்திருக்கலாம்! ஒரே அவசரம், கையும் ஓட வில்லை, காலும் ஓடவில்லை!
சாதம் பரிமாறி முடிக்கவில்லை, அதற்குள், மேலதிகாரி ஒரு குண்டை தூக்கி போட்டார்! அவர் சொன்னார்,’எங்க வீட்டில் எல்லாம்,சாதம் நேரடியாக வைக்க மாட்டார்கள்’ , என்று சொல்லி, சிறிது மௌனம் காத்தார்!

ஏற்கனவே நான் ஒரு நிலையில் இல்லை, இதில் அவர் பேசியது, எனக்கு சத்தியமாக புரியவே இல்லை! என் கணவரை, ‘என்னைய்யா சொல்லுகிரார் உங்க ஆளு’, என்பது போல் ஒரு பரிதாப பார்வை பார்த்தேன்! அவர் எனக்கு மேல் பரிதவித்து, திரு திருவென விழித்தார்!

இதுவா இருக்குமோ, அதுவா இருக்குமோ என்று அந்த சில நிமிடங்களில் புயல் மனதினுள் அடித்து ஓய்ந்தது! மேலதிகாரி, அவர் போட்ட புதிருக்கு, அவரே விடையும் அளித்தார்! அவர் சொன்னார்,’ எங்க வீட்டில் எல்லாம், சாதம் நேரடியாக குக்கரில் வைக்க மாட்டார்கள், ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு, குக்கரில் வைத்து சமைப்பார்கள்’ என்று எனக்கு பொல பொலவென சாதம் ஆக்குவதற்க்கு டிப்ஸ் கொடுத்தார்!

‘பூ’ இவ்வளவு தானா, நான் என்னமோ, ஏதோ என்று பயந்தே போய் விட்டேன்! இன்னும் நீங்கள் என் சொதப்பல் சமையலையே சாப்பிட ஆரம்பிக்கவில்லையே, என்று மனதினுள் நினைத்து கொண்டேன்!

‘எப்பவும் நல்லா வரும், யாராவது விருந்தாளிகள் வந்தால் மட்டும், ஏந்தான் இந்த சமையல் இந்த சொதப்பு சொதப்புகிரதோ’ என்று நான் சிறுமியாக இருக்கும் போது என் அம்மா அடிக்கடி புலம்பியது, மனதில் வந்து ஓடியது!