எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


2 பின்னூட்டங்கள்

சிரிக்கலாம் வாங்க 4

படம்

ரண்டி,
கூச்சுண்டி,
பாவனார,
சொன்னத கேட்டு,
ஓவர் excite ஆன neighbour,
கட கடனு,
புரியாத தெலுங்கில் பேச,
ஹி ஹி! தெலுங்கு தெலுதி(தெரியாது )!!!!
இதுக்கு ஒழுங்கா,
வாங்க,
உட்காருங்க,
நல்லா இருக்கீங்களானு,
பேசி இருந்திருக்கலாம்!!! — feeling meh at Kothapet, Guntur.

 

இன்னிக்கு வேற வழியே இல்ல..
வெங்கயபாலுவை, கூண்டோட,
காலி பண்ணிட வேண்டியது தான்!
அதை கண்டந்துண்டமா வெட்டி,
.
.
.
.
எனக்கு அத வச்சி பண்ண தெரிஞ்ச,
ஒக்கே ஒக்க recipe…
எண்ணெய் கத்திரிக்காய 
செஞ்சிட வேண்டியதுதான்!!

 

இது சரியில்லை,
அது சரியில்லை,
கலர் நல்லா இல்லை,
Tom & Jerry படம் போட்டிருக்கணும்,
இப்படி, தேடி தேடி, வாங்கிய,
காலணிகளை,அணிந்து,
அழகு பார்த்த எங்கள்குட்டி பையன்,
கடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி,
தன் காலணியின் அழகுக்கு,
மேலும்  அழகு சேர்த்தான்,
ஆங்காங்கே தேங்கிய மழை நீர் குட்டைகளில்,
‘சளக்..சளக்..’ என்று குதித்தபடி!!!

பக்கத்து வீட்டு பசங்களோட ,
வெள்ளை சட்டை, காக்கி பேன்ட்,
பள்ளி சீருடையை பார்த்து விட்டு,
நல்ல வேளை நம்ம பசங்களுக்கு,
நல்ல டார்க் கலர் சட்டை,
என்று மனதில் நினைத்த அடுத்த நொடி,
திரு திரு வென்று முழித்தபடி வந்தான் பையன்,
தன் grease கறை படிந்த கிரீம் கலர் shorts உடன்!!!