கண்கள் இமை கொட்ட மறந்து
கருவிழிகள் நிலையில்லாமல் அலைந்து
இன்றே முடித்து விட துடித்து
அத்தகைய ஆர்வ வெறி
தீரும் வரை கருக் முருக்
என்று பசி இல்லாமலே
நொறுக்கு தீனிகளை
வெறியாய் கபளீகரம்
செய்து கொண்டு ஒருவர் இருப்பாராயின்
அவரே 100% புத்தக புழு!!
துன்பம் வரும்
ஒவ்வொரு நொடியும்
பூவாய் சிரித்து
பிறரையும் மகிழ்விக்கும்
பெருமை பொறியும் அத்தனை
சோள முத்துகளையும் சாரும்
பாப்கார்ன்!!
பேசா மடந்தையாய்
கடை தெருவுக்கு சென்று
வேலைகளை முடிக்கும் என்னையும்….
‘சூடண்டி..
ஒக்க பாட்டிலுக்கு ஒக்க பாட்டில் ஃப்ரீ’
என்று பில் போடும் கடை பணியாளர்
கவனிக்க தவறிய 1+1 ஆபரை…
பேச தயங்கிய அந்நிய பாஷையில்
ரௌண்டு கட்டி பேச வைத்தால்
அதுவே ஆபர் செய்யும் மகிமை!!
ஆசை நரைக்கும் முன்னரே
மீசை நரைத்து விடுகிரது
.
.
.
.
கப்பில் பால் குடிக்கும் குழந்தைகள்!!
அம்மா : What do Hawkers sell in Railway Station?
பையன்: Hawkers sell various things such as, Books….. Books…..Books……….!!!
பொறுமை இழந்து போய் அம்மா சொல்லுவா……
ஆமா..புக்க மட்டும் எல்லாரும் வித்துட்டு இருந்தா அன்னைக்கு வியாபாரம் அவங்களுக்கு விளங்கினா மாதிரி தான்!!