நான் கலை நயத்தோட சிற்பம் செதுக்கனும்னு நினைக்கல ஏன் மைக்ரோ ஆர்டிஸ்ட் ஆகனும்னு கூட விரும்பல ஆனா இதெல்லாம் நடந்திருமோனு பயமா இருக்கு……………. Camlin Exam Pencils & Sharpeners திருகி திருகி..
தண்ணீர் இல்லாமல் குடம் கவுந்து கிடந்தாலும் தண்ணீருக்குள்ளே ஓடம் கவுந்து கிடந்தாலும் அவை நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான் . . . நான் காலி!!
என் இரத்தத்தை சுண்ட வைத்து தன் கூரிய ஊசி கரங்களால் என் மேனி துளைத்து என்னை உறைய வைத்த திமிரில் சுழன்றடித்து செல்லும் குளிர் காலத்து ஊத காற்றே .. எங்கே என் வீட்டில் சுண்ட காய்ச்சி உரை குத்திய பாலை உறைய வைத்து தயிராக்கி காட்டு பார்க்கலாம்!
யாரு மனசுல யாரு அவரவர் முகபுத்தக சுவரை பாரு.
குளுகுளுனு இருப்பதற்காக குழம்பிலே கசகசாவை அரைத்து போடுவதும் கசகசனு இருக்கிறதே என்று குளுகுளு ஏசியின் ஸ்விட்ச்சை போடுவதும் நடைமுறை வாழ்க்கையில் சகஜமான ஒன்று!
அதிசயமாய் இன்று காலை ஒரு தடவை Bye சொன்னதற்கு திருப்பி நாலு தடவை Bye சொன்னான் எங்க குட்டி பையன்.. அப்புறம் தான் புரிந்தது என் கையில் இருந்த அவனிடம் குடுக்க மறந்த ஸ்கூல் பேக் கேட்டு அலறுகிறான் என்று!
இருக்கலாம்.. முன் ஜென்மத்து பந்தமாய் என் தர்ம பத்தினியாய் பின்னே எவ்வளவு தான் கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் பார்த்தும் பார்க்காமலும் இருந்தாலும் சற்றும் சளைக்காமல் சல சலவென சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுவதும் நிமிஷத்துக்கு ஒரு முறை குறுஞ்செய்திகளை அனுப்பியும் உயிரை எடுப்பதேனோ . . . விட்டு தொடரும் பந்தம் Airtel!!
அது ஒரு நடு நிசி நேரம் சோவென்று கொட்டியது மழை இரவை பகலாக்க முயன்று தோற்ற மின்னல்கள் இருட்டிலே துலாவிய கைகள் பட்டு உயிர் பெற்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகம் அலம்ப நினைத்து முடியாமல் பச்சை பொத்தானை அவசரமாக அமுத்த அய்யோ…………. என்று அலறியது உள்ளம் டேங்கில் தண்ணீர் ‘காலி’யானது மட்டுமல்லாமல் மோட்டரும் அநியாயமாய் தன் உயிரை விட்டிருந்தது!!
துவையல் செய்வதற்காக கொத்தமல்லி கரிவேப்பிலை புதினா சம அளவு எடுத்து சுத்தம் செய்து வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து உளுந்தம் பருப்பு ஒரு கையளவு எடுத்து போட்டு அது பொன்னிறமானவுடன் காரத்திற்கேற்ப ஐந்து ஆறு பச்சை மிளகாய் கிள்ளி போட்டு பத்து பல் பூண்டு உரித்து போட்டு எலுமிச்சை அளவு புளியும் போட்டு வதக்கி பின் கொத்தமல்லி கரிவேப்பிலை புதினாவை அதில் போட்டு வதக்கும் போது எழும் சுகந்தமான வாசனையின் சுகமான இம்சையில் அருவியாய் ஜொள் அல்ல வியர்வை ஊற்றெடுக்க அடுப்படி ஜன்னல் வழியாய் எனக்காகவே புறப்பட்டு வந்து என் முகத்தை ஸ்பரிசித்து விட்டு செல்லும் தென்றல் காற்று தான் நிஜமாகவே கவிதை!!
அடேங்கப்பா! ‘Opposite poles attract each other’ என்று சும்மாவா சொன்னாங்க தன் கடைசி ஆவி பிரியும் வரை ரெண்டும் இந்த கடலை போடுது . . . . கடாயில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய்யை ஏதேச்சையாக சந்தித்த தண்ணீர் துளிகள்!!
அரிசி வாங்கும் பொழுது பழைய அரிசியா என்று கேட்டு வாங்குங்கள் இல்லையேல் புளியோதரை போட நினைக்கும் தினங்களில் தயிர் சாதம் மட்டுமே சாத்தியமாகும்!!
துவைத்து இரண்டு நாட்களே ஆன நிலையில் மீண்டும் உங்கள் வீட்டு மேஜை விரிப்பில் சாம்பார் சிந்தி கறையாகி விட்டதா…… கவலை வேண்டாம் ஒரிரு நாள் அப்படியே விட்டு விடுவீர்களாயின் கறை காய்ந்து ஒரே சுரண்டலில் உதிர்ந்து காணாமல் போய் விடும்!!
தயவு செய்து உங்கள் சமையலறையில் உள்ள உளுந்தம்பருப்பு டப்பாவை திறந்து நுகர்ந்து பார்த்து விடாதீர்கள் மீறினால் . . . . முனி அடித்து விடும்!!
பித்தத்தினால் ஏற்படும் தலை சுற்றல், உமட்டல் போன்ற நம் உடம்பில் தோன்றும் அறிகுறிகள் காணாமல் போவதற்காக தேனீரில் தட்டி சேர்க்கப்படும் இஞ்சியை சற்று நிதானத்தோடே தட்டுங்கள் இல்லையேல் தட்டிய தட்டில் இஞ்சி காணாமல் போவது நிச்சயம்!
போன வாரம், ஞாயிற்று கிழமை, இரவு SetMax சேனலில், Murder 3 ஹிந்தி படம் காண்பித்து கொண்டிருந்தார்கள்.. அது ஒரு த்ரில்லர் படம், நான் பார்க்க அமர்ந்த சமயம், பாதி படம் முடிந்து விட்டிருந்தது, தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, இருந்தும் படம் பரபரப்பாக இருந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் இருந்தது! நேரம் ஆகி விட்ட படியால், டீவீயை அணைக்க வேண்டிய கட்டாயம், இல்லையேல் அடுத்த நாள் காலை எந்திரிக்க முடியாது. அரை மனதோடு படுக்க சென்றேன்…. அடுத்து என்ன ஆயிற்று, என்ன ஆயிற்று என்ற புலம்பலோடு தூங்கி போனேன்!!
சிறு வயதில் இருந்தே, ஒரு பழக்கம், எந்த கதை புத்தகத்தை எடுத்தாலும், கதை முடிவு தெரியாமல் எந்திரித்ததில்லை.. அது இன்னிக்கு வரைக்கும் அந்த ஆர்வம் குறையவே இல்லை… அதே ஆர்வத்தோடு, அடுத்த நாள் காலை, என் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, இணையத்தில் Murder3 படத்துக்கான விமர்சன பக்கங்களை தேடி, தேடி படித்தேன், அப்போ தான் தெரிந்தது, இந்த படத்தை, ‘La Cara Oculta(The Hidden Face’ என்ற Spanish படத்தின் கதையை தான் ஹிந்தியில் எடுத்திருக்கிரார்கள் என்று.. டூப்ளிகேட்டை விட ஒரிஜினல் இன்னும் நல்லா இருக்கும் இல்ல, இணையத்தில் ஒரு வழியாய் தேடி பிடித்து பார்த்து விட்டேன்….
படத்தின் ஹீரோ Adrian, அவனை தான் முதல் காட்சியில் அறிமுக படுத்துகிரார் இயக்குனர்.. அவன் ஒரு புகழ் பெற்ற இசை கலைஞன்.. அவன் தன் உயிர் காதலி அவனுக்காக விட்டு சென்ற ஒளி படத்தை எடுத்து பார்த்து, மனது வெறுத்து போய் அழுது கொண்டிருந்தான்.. அந்த ஒளி படத்தில், அவனுடைய காதலி Belen, தன்னால் இனி ஒரு நிமிடம் கூட அவனுடன் சேர்ந்து இருக்க முடியாது எனவும், தன்னை தேடி வர வேண்டாம் எனவும், இந்த முடிவு தான், இருவருக்கும் நல்லது என்று மிகுந்த மன வருத்தத்துடன் கூறி கொண்டிருந்தாள்.. அழுது முடித்த கையோடு, தன்னை போலவே அழுது கொண்டிருந்த மழையில், தன் காரை எடுத்து கொண்டு, தன் மனதை அமைதி படுத்த Bar க்கு சென்றான்.. மனது வெறுத்த நிலையில், அந்த Barரில் வேலை செய்யும், Fabiana அவனுடைய மன காயத்துக்கு மருந்தாகிறாள்..
மெல்ல அவன் மனதுக்குள் நுழைந்த Fabiana, அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறாள். பெலென் விட்டு, விட்டு சென்றதை, கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தான் Andrean.. அவர்கள் தங்கி இருந்த வீடு, Columbiaவில் Bogota என்ற மாநகரத்தில், ஊருக்கு வெளியே ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் அமைந்திருந்தது! சற்றே பெரிய, அழகான, அமானுஷ்யமான வீடு அது.. அந்த வீட்டில், வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான நாய் ஒன்றும் இருந்தது. அதன் பெயர் Hans.
Fabiana , தனியாக இருக்கும் போது சிறிது பயமாகவே இருக்கிரது.. நிறைய விஷயங்கள் வித்யாசமாக அவள் கண்ணில் படுகிரது.. முக்கியமாக, அவள் குளியலறையில் இருக்கும் போது, தண்ணீர் தேங்கி இருக்கும் வாஷ் பேசினில், அலைகளை கவனிக்கிராள்..வாஷ் பேசின் குழாய் வழியாக, சன்னமாக ஒரு ஒலியை உணர்கிராள். அவ்வப்பொழுது, லோக்கல் போலீஸ், காணாமல் போன Belen பற்றி , விசாரித்து செல்கிரார்கள். அதில் ஒரு போலீஸ், Fabiana உயிருக்கு உயிராக காதலிப்பவன்! அவனுக்கு, Fabiana, Adrianனுடன் வந்து இருப்பதில் சிறிது வருத்தம் தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை எச்சரிக்கை செய்கிரான்.. Fabiana, புது பணக்கார காதலன் கிடைத்த மோகத்தில் எதையும், சட்டை செய்ய மறுக்கிறாள்.. Fabiana வுக்கு, அந்த வீட்டில், அடுதடுத்து ஆச்சரியங்கள், காத்து கொண்டிருந்தன.. ஒரு செய்னில், கோர்த்து வைக்க பட்டிருந்த சாவியை, தற்செயலாக கண்டெடுக்கிறாள்.. ஒன்றும் புறியாமல் அதை எடுத்து மாலை போல அணிந்து கொள்கிராள்.
ஒரு நாள், படுக்கையறையில் உள்ள புத்தக அலமாரி, சிதறி கிடக்கிறது, Fabiana குளியலறையில்,கண்ணாடி முன் நின்று, யாரிடமோ பேசும் சத்தம் கேட்டு, அட்ரியன் ஆச்சரியத்தோடு, உள்ளே நுழைகிறான்.. அவனை கண்டவுடன், பேச்சை மாற்றுகிராள் Fabiana. அவனுடைய, முன்னால் காதலியான, Belen பற்றி, ஏதாவது, தகவல் தெரிந்ததா, என்று அக்கறையோடு விசாரிக்கிராள்! உடனே குறுக்கிட்டு பேசிய Adrian, Belen என்பவள், என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டு, வேறு ஒரு ஆடவனை தேடி சென்று விட்டாள், அவளை பற்றி எதுவும் பேசாதே என்று அவள் வாயை அடைத்து, அவளை அணைத்து கொள்கிரான்.. Adrianனை அணைத்தபடி, படுக்கையறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை முறைத்து பார்க்கிராள் Fabiana!! அந்த கண்ணாடியின் உள்ளே, ஒரு பயங்கரமான, அதிர்ச்சியான, கோபத்தொட கத்தி கொண்டிருக்கும் Belen உடைய முகத்தை, முதன் முறையாக காட்டுகிரார் இயக்குனர்!!!