எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


20 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -44

யாதொரு இழப்பின் கொடுமையையும்
தாங்கி கொள்ள சிறு வயதிலிருந்தே
மனம் பழகி கொள்ளுகிறது நாம் ஊதிய
ஒவ்வொரு பலூன் உடையும் போதும்!!

படம்

உன்னால்
தலை முதல் கால் வரை
உருகுகிறேன்..
உன் தலை மறைந்த பின்பும்
மருகுகிறேன்..
இது எது வரையில் என்று
மருளுகிறேன்..
உன் குளிர் முக நினைவில்
வருந்துகிறேன்..
கோடை வெயில்!

படம்

எந்த ஒரு மருத்துவரை 
பார்க்க கூட்டம் கொள்ளே
கொள்ளே என்று நிற்கிறதோ
அங்கே யாரும் சொல்லாமலே
நாம் அறிந்து கொள்ளும் ரகசியம்
அங்கே கொள்ளையடிக்கப்படுவதில்லை!!

படம்

 

பெயர் என்னது??
ப்ளேசரா இல்லை..
பைஜாமாவா இல்லை..
குர்தாவா இல்லை..
ஐய்யோ என்ன பெயர்..
என்ன பெயர்..
ஆங்.. நியாபகம் வந்தது
ஷெர்வானி
ஒவ்வொரு தடவை கூப்பிட
நினைக்கும் போதும் மறந்து
தொலைக்கும் பக்கத்து வீட்டு
பெண்ணின் பெயர்!!

படம்

பார்த்த பின்னே ஏற்படும் 
பரவசத்தை விட பார்ப்பதற்கு 
முன்னே ஏற்படும் எதிர்பார்ப்புடன்
கூடிய பரவசமே கூடுதல் மகிழ்ச்சியை தருவது..

படம்

 

கொட்டுகிற அருவியில்
காட்டாற்று வெள்ளத்தை
கோர்த்து விட்டாற் போல்
கோடை காலத்து கடும்
வெயிலில் மின் தடையும்
கை கோர்த்து கொள்ள
ஊத்தி தள்ளுகிறது வியர்வை!!

படம்