எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


20 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -44

யாதொரு இழப்பின் கொடுமையையும்
தாங்கி கொள்ள சிறு வயதிலிருந்தே
மனம் பழகி கொள்ளுகிறது நாம் ஊதிய
ஒவ்வொரு பலூன் உடையும் போதும்!!

படம்

உன்னால்
தலை முதல் கால் வரை
உருகுகிறேன்..
உன் தலை மறைந்த பின்பும்
மருகுகிறேன்..
இது எது வரையில் என்று
மருளுகிறேன்..
உன் குளிர் முக நினைவில்
வருந்துகிறேன்..
கோடை வெயில்!

படம்

எந்த ஒரு மருத்துவரை 
பார்க்க கூட்டம் கொள்ளே
கொள்ளே என்று நிற்கிறதோ
அங்கே யாரும் சொல்லாமலே
நாம் அறிந்து கொள்ளும் ரகசியம்
அங்கே கொள்ளையடிக்கப்படுவதில்லை!!

படம்

 

பெயர் என்னது??
ப்ளேசரா இல்லை..
பைஜாமாவா இல்லை..
குர்தாவா இல்லை..
ஐய்யோ என்ன பெயர்..
என்ன பெயர்..
ஆங்.. நியாபகம் வந்தது
ஷெர்வானி
ஒவ்வொரு தடவை கூப்பிட
நினைக்கும் போதும் மறந்து
தொலைக்கும் பக்கத்து வீட்டு
பெண்ணின் பெயர்!!

படம்

பார்த்த பின்னே ஏற்படும் 
பரவசத்தை விட பார்ப்பதற்கு 
முன்னே ஏற்படும் எதிர்பார்ப்புடன்
கூடிய பரவசமே கூடுதல் மகிழ்ச்சியை தருவது..

படம்

 

கொட்டுகிற அருவியில்
காட்டாற்று வெள்ளத்தை
கோர்த்து விட்டாற் போல்
கோடை காலத்து கடும்
வெயிலில் மின் தடையும்
கை கோர்த்து கொள்ள
ஊத்தி தள்ளுகிறது வியர்வை!!

படம்

 


14 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -42

இரண்டுக்கும் இடையே 
ஒரு ஒற்றுமை உண்டு..
இரண்டுமே குளிரை விரட்டி
சூட்டை வரவேற்பவை..
ஹோலி Vs கோழி!!

படம்

கிண்டிய அல்வா வாயில்
கோந்து ஆன கதைகள்
நிறைய கேட்டதுண்டு
வாய் விட்டு சிரித்ததுண்டு
ஆனால் நானே என் கையால்
முதன் முறையாய் சிரமப்பட்டு 
செய்த பீட் ரூட் அல்வாவை
வாயில் வைத்த போது என்னால் 
சிரிக்க முடியவில்லை ஏனெனில்
வாயை திறக்க முடிந்தால் தானே
வாய் விட்டு சிரிப்பதற்கு!!

படம்

டீவீ விளம்பரத்தில் ஒரு
பெண் கையில் வயர் மெஷ்ஷை
பிடித்தபடி சப்பாத்தியை
துளி கூட எண்ணெய் இல்லாமல் 
கும்முனு பூரி போல் எழும்ப செய்து
தட்டில் இடுவதை மிகுந்த
ஏக்கத்துடன் பார்த்த என் கணவர்
சந்தடி சாக்கில் என்னையும்
ஸ்க்ரீனையும் மாறி மாறி நோக்க
அவரை முழுதும் புரிந்தவளாய்
பதில் அளித்தேன்…
கவலைபடாதீர்கள்..
சீக்கிரமே பெண்ணை பேசி 
முடித்து விடலாம்!!

படம்

காத்திருக்கும் அறைகளில்
போடப்படும் ஒன்றோடு ஒன்று
இணைந்த இருக்கைகளில்
ஓரமான இருக்கையில் 
அமர்வதும் இலவசமாக
மானத்தை தண்டோரா 
போட்டு கப்பலில் ஏற்றுவதும்
ஏறக்குறைய ஒன்று தான்!!

படம்

நடு இரவு 2:30 மணிக்கு
விழிப்பு தட்டும் போது
முழுதாய் உறங்காமல்
பாதியில் எழுந்து விட்டோமே
என்ற மனக்குறையை விட
ஆஹா.. இன்னும் ரொம்ப 
நேரம் இருக்கிறது விடிய
என்ற சந்தோஷ எண்ணமே
மேலோங்குகிறது!!

படம்

யாரேனும் ஒருவர்
ஆரஞ்சு பந்து வாங்கி
வருகிறேன் என்று
ஆரஞ்சு பழம் வாங்கி
வந்தால் அவங்கதான்
ஆந்திராகாரர் தெரிஞ்சிகோ!!

படம்

 

நாங்க குடி இருக்கிற
வீட்டுக்கும் ராம்லீலா படத்தில்
வரும் தீபிகா படுகோனுக்கும்
நேற்று மதியத்தில் இருந்து
சரியாக இன்னும் இரண்டரை
மாதம் வரை ஒரு தவிர்க்க
முடியாத ஒற்றுமை உண்டு..

உஸ்………. அப்பா………
இரண்டுமே ரொம்ப ஹாட்!!

 படம்


11 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -32

அனுமதியின்றி உடல் ஊடுருவும்
அதிகாலை நேர கத்திரி குளிரில்
ஊசியாய் குத்தி கிழிக்கும்
ஊத காற்றில் அனிச்சையாய்
செயல்படும் கைகள் நாடி சென்று
ஆசையாய் அணைத்து கொள்ளும்…….
.
.
.
சூடான தேனீர் கோப்பையை!!

Image

 

முத்தம் யுத்தம்
இவையின்
சத்தம் நித்தம்
பின் முடிவில்
இரத்தம் இவை
மொத்தம்
ராம்லீலா!!

Image

நை நை நு குட்டி பையன்
என் உசுரை வாங்கும்
ஒவ்வொரு முறையும்
அவன் துண்டை காணோம்
துணியை காணோம் என்று
ஓட வைக்க நான் சொல்லும்
மந்திர வார்த்தைகள்..
கண்ணு CHUBBY CHEEKS..சொல்லு!!

Image

தூள் கிளப்பினாலே
பிரச்சனை தான்..
கண்டிப்பா கிளப்பி
விடுபவருக்கு
கண்ணு(ல) பட்டு விடும்!!

 

 

Image

 

வெயிலும் அடிச்சு
மழையும் பெஞ்சா
காக்கைக்கும் நரிக்கும்
கல்யாணம்…
வெயிலும் அடிச்சு
குளிரும் கொன்னு எடுத்தா
யாருக்கும் யாருக்கும்
கல்யாணம்..
ஷப்பா முடியல!!

Image

கொஞ்சம் பழசு ஆனவுடன்
இந்த கதவெல்லாம் ஏன்
கிரீச்.. கிரீச்.. என்று 
சத்தம் போடுதுனு தெரியுமா??
.
.
.
அட இது கூடவா தெரியலா??
கொஞ்சம் Grease போட்டா என்ன
குறைஞ்சா போயிடுவீங்க..
அப்படினு தான்!!

Image

 

நண்பர்களுடன் படம் 
பார்த்து விட்டு பூனை
மாதிரி உள்ளே நுழைந்த
பையனிடம் கடு கடுவென்று
முகத்தை வைத்து கொண்டு
நறுக்கென்று நாலு வார்த்தை
கேட்டேன்…………
.
.

படம் என்ன கதை டா!!

Image

 


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -29

நான் கலை நயத்தோட 
சிற்பம் செதுக்கனும்னு நினைக்கல
ஏன் மைக்ரோ ஆர்டிஸ்ட் 
ஆகனும்னு கூட விரும்பல
ஆனா இதெல்லாம் நடந்திருமோனு
பயமா இருக்கு…………….
Camlin Exam Pencils & Sharpeners
திருகி திருகி..

படம்

 

தண்ணீர் இல்லாமல் 
குடம் கவுந்து கிடந்தாலும்
தண்ணீருக்குள்ளே
ஓடம் கவுந்து கிடந்தாலும்
அவை நமக்கு உணர்த்துவது
ஒன்றே ஒன்று தான்
.
.
.
நான் காலி!!

படம்

என் இரத்தத்தை சுண்ட வைத்து
தன் கூரிய ஊசி கரங்களால்
என் மேனி துளைத்து என்னை
உறைய வைத்த திமிரில்
சுழன்றடித்து செல்லும் குளிர்
காலத்து ஊத காற்றே ..
எங்கே
என் வீட்டில் சுண்ட காய்ச்சி
உரை குத்திய பாலை உறைய
வைத்து தயிராக்கி காட்டு பார்க்கலாம்!

படம்

 

யாரு மனசுல யாரு அவரவர்
முகபுத்தக சுவரை பாரு.

படம்

குளுகுளுனு இருப்பதற்காக
குழம்பிலே கசகசாவை
அரைத்து போடுவதும்
கசகசனு இருக்கிறதே
என்று குளுகுளு ஏசியின்
ஸ்விட்ச்சை போடுவதும்
நடைமுறை வாழ்க்கையில்
சகஜமான ஒன்று!

படம்

 

அதிசயமாய் இன்று காலை
ஒரு தடவை Bye 
சொன்னதற்கு திருப்பி
நாலு தடவை Bye சொன்னான்
எங்க குட்டி பையன்..
அப்புறம் தான் புரிந்தது
என் கையில் இருந்த
அவனிடம் குடுக்க மறந்த
ஸ்கூல் பேக் கேட்டு
அலறுகிறான் என்று! 

படம்