வஞ்ச புகழ்ச்சி யாவரும் அறிவர்.. வஞ்ச அக்கறை யாரும் அறிந்ததுண்டோ? அதிகாலை நேரம் துகில் கலைய மறுத்த பையனை அரும்பாடுபட்டு எழுப்பி பின் ஒருவாறு குளியலறை அனுப்பி அவன் குளித்து முடியும் வரை பொறுத்திருந்து பின் அவனுடைய ஈரத் தலையை துடைத்து விடுகிரேன் என்ற பெயரில் தலையை துண்டால் நற நற.. வென துடைத்து அவன் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்ச்சி அளித்ததோடு மட்டுமல்லாமல் என்னுள்ளே பொருமி கொண்டிருக்கும் கோபமும் கத்தி தீர்க்காமல் சாந்தமாய் வெளியேறவும் வழி வகுக்கிறது!!
கணவர் செய்யும் மன்னிக்கவே முடியாத குற்றங்களில் ஒன்று.. . . . சீப்பா கிடைத்தது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக 2 கிலோ மூன்று கிலோ ஏதேனும் ஒரு காய்கறியை தன் சிறிய குடும்பத்துக்காக வாங்கி வந்து குவிப்பது!!
காதல் பொங்கி வழிந்தது!! . . . . . குழம்பு கூட்டு பொரியல் பக்காவா ரெடி பண்ணிட்டு சோறு பொங்க நான் மறந்து விட்ட போதிலும் ஆங்கார பசியிலும் பத்து நிமிடம் கோபம் பொங்காமல் பொறுமை காத்த அன்பு கணவர் மேல் மேல் இருந்து படிக்கவும்..
நல்ல உச்சி வெயிலில் கதவை திறந்து பார்த்து விட்டு யாரு இங்க வெட்டியா லைட்ட போட்டு வெச்சிருக்கா என்று அவசர அவசரமா ப்ரிஜ் உள்ளே அதை அணைப்பதற்க்கு ஸ்விட்சை தேடுனீங்க என்றால் பெருமை பட்டு கொள்ளுங்கள் நீங்க தான் உண்மையான மின் சிக்கனவாதி!!
போன வாரம், ஞாயிற்று கிழமை, இரவு SetMax சேனலில், Murder 3 ஹிந்தி படம் காண்பித்து கொண்டிருந்தார்கள்.. அது ஒரு த்ரில்லர் படம், நான் பார்க்க அமர்ந்த சமயம், பாதி படம் முடிந்து விட்டிருந்தது, தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, இருந்தும் படம் பரபரப்பாக இருந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் இருந்தது! நேரம் ஆகி விட்ட படியால், டீவீயை அணைக்க வேண்டிய கட்டாயம், இல்லையேல் அடுத்த நாள் காலை எந்திரிக்க முடியாது. அரை மனதோடு படுக்க சென்றேன்…. அடுத்து என்ன ஆயிற்று, என்ன ஆயிற்று என்ற புலம்பலோடு தூங்கி போனேன்!!
சிறு வயதில் இருந்தே, ஒரு பழக்கம், எந்த கதை புத்தகத்தை எடுத்தாலும், கதை முடிவு தெரியாமல் எந்திரித்ததில்லை.. அது இன்னிக்கு வரைக்கும் அந்த ஆர்வம் குறையவே இல்லை… அதே ஆர்வத்தோடு, அடுத்த நாள் காலை, என் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, இணையத்தில் Murder3 படத்துக்கான விமர்சன பக்கங்களை தேடி, தேடி படித்தேன், அப்போ தான் தெரிந்தது, இந்த படத்தை, ‘La Cara Oculta(The Hidden Face’ என்ற Spanish படத்தின் கதையை தான் ஹிந்தியில் எடுத்திருக்கிரார்கள் என்று.. டூப்ளிகேட்டை விட ஒரிஜினல் இன்னும் நல்லா இருக்கும் இல்ல, இணையத்தில் ஒரு வழியாய் தேடி பிடித்து பார்த்து விட்டேன்….
படத்தின் ஹீரோ Adrian, அவனை தான் முதல் காட்சியில் அறிமுக படுத்துகிரார் இயக்குனர்.. அவன் ஒரு புகழ் பெற்ற இசை கலைஞன்.. அவன் தன் உயிர் காதலி அவனுக்காக விட்டு சென்ற ஒளி படத்தை எடுத்து பார்த்து, மனது வெறுத்து போய் அழுது கொண்டிருந்தான்.. அந்த ஒளி படத்தில், அவனுடைய காதலி Belen, தன்னால் இனி ஒரு நிமிடம் கூட அவனுடன் சேர்ந்து இருக்க முடியாது எனவும், தன்னை தேடி வர வேண்டாம் எனவும், இந்த முடிவு தான், இருவருக்கும் நல்லது என்று மிகுந்த மன வருத்தத்துடன் கூறி கொண்டிருந்தாள்.. அழுது முடித்த கையோடு, தன்னை போலவே அழுது கொண்டிருந்த மழையில், தன் காரை எடுத்து கொண்டு, தன் மனதை அமைதி படுத்த Bar க்கு சென்றான்.. மனது வெறுத்த நிலையில், அந்த Barரில் வேலை செய்யும், Fabiana அவனுடைய மன காயத்துக்கு மருந்தாகிறாள்..
மெல்ல அவன் மனதுக்குள் நுழைந்த Fabiana, அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறாள். பெலென் விட்டு, விட்டு சென்றதை, கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தான் Andrean.. அவர்கள் தங்கி இருந்த வீடு, Columbiaவில் Bogota என்ற மாநகரத்தில், ஊருக்கு வெளியே ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் அமைந்திருந்தது! சற்றே பெரிய, அழகான, அமானுஷ்யமான வீடு அது.. அந்த வீட்டில், வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான நாய் ஒன்றும் இருந்தது. அதன் பெயர் Hans.
Fabiana , தனியாக இருக்கும் போது சிறிது பயமாகவே இருக்கிரது.. நிறைய விஷயங்கள் வித்யாசமாக அவள் கண்ணில் படுகிரது.. முக்கியமாக, அவள் குளியலறையில் இருக்கும் போது, தண்ணீர் தேங்கி இருக்கும் வாஷ் பேசினில், அலைகளை கவனிக்கிராள்..வாஷ் பேசின் குழாய் வழியாக, சன்னமாக ஒரு ஒலியை உணர்கிராள். அவ்வப்பொழுது, லோக்கல் போலீஸ், காணாமல் போன Belen பற்றி , விசாரித்து செல்கிரார்கள். அதில் ஒரு போலீஸ், Fabiana உயிருக்கு உயிராக காதலிப்பவன்! அவனுக்கு, Fabiana, Adrianனுடன் வந்து இருப்பதில் சிறிது வருத்தம் தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை எச்சரிக்கை செய்கிரான்.. Fabiana, புது பணக்கார காதலன் கிடைத்த மோகத்தில் எதையும், சட்டை செய்ய மறுக்கிறாள்.. Fabiana வுக்கு, அந்த வீட்டில், அடுதடுத்து ஆச்சரியங்கள், காத்து கொண்டிருந்தன.. ஒரு செய்னில், கோர்த்து வைக்க பட்டிருந்த சாவியை, தற்செயலாக கண்டெடுக்கிறாள்.. ஒன்றும் புறியாமல் அதை எடுத்து மாலை போல அணிந்து கொள்கிராள்.
ஒரு நாள், படுக்கையறையில் உள்ள புத்தக அலமாரி, சிதறி கிடக்கிறது, Fabiana குளியலறையில்,கண்ணாடி முன் நின்று, யாரிடமோ பேசும் சத்தம் கேட்டு, அட்ரியன் ஆச்சரியத்தோடு, உள்ளே நுழைகிறான்.. அவனை கண்டவுடன், பேச்சை மாற்றுகிராள் Fabiana. அவனுடைய, முன்னால் காதலியான, Belen பற்றி, ஏதாவது, தகவல் தெரிந்ததா, என்று அக்கறையோடு விசாரிக்கிராள்! உடனே குறுக்கிட்டு பேசிய Adrian, Belen என்பவள், என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டு, வேறு ஒரு ஆடவனை தேடி சென்று விட்டாள், அவளை பற்றி எதுவும் பேசாதே என்று அவள் வாயை அடைத்து, அவளை அணைத்து கொள்கிரான்.. Adrianனை அணைத்தபடி, படுக்கையறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை முறைத்து பார்க்கிராள் Fabiana!! அந்த கண்ணாடியின் உள்ளே, ஒரு பயங்கரமான, அதிர்ச்சியான, கோபத்தொட கத்தி கொண்டிருக்கும் Belen உடைய முகத்தை, முதன் முறையாக காட்டுகிரார் இயக்குனர்!!!