‘ஒளிந்திருந்து இரு விழிகள் அவளை நோட்டமிட்டன’
என்ற வரிகள் நாம் படிக்கும் போது
கொடுக்கும் சுவாரசியத்தை விட
நாம் படிக்கும் புத்தகத்தை எப்படியாவது
எட்டி பார்த்து ஓசியில் படித்த விட துடிக்கும்
பக்கத்து இருக்கைகாரரின் அலையும் விழிகள்
மிக சுவாரசியமானவை!!
ஹலோ.. விஷ்ணு லேதா?
லேது.. மஹாலக்ஷ்மி உந்தி..
But இதி வைகுண்டம் லேது..
??
Wrong Number!
தவறு தம் பக்கம் என்று
முழுமையாய் அறிந்த
பின்னரும் கூட பிறரை
முந்தி குரலை உயர்த்தி
தப்பித்து கொள்ளும்
தந்திரம் மானிடர்களுக்கு
மட்டுமே உரித்தானது!
பொய் என்று தெரிந்தும்
நம்மை நாமே தெரிந்தே
ஏமாற்றி கொண்டு நன்மை
அடையும் ஒரு விஷயம்
கடிகாரத்தை 15 நிமிடம்
வேகமாக ஓட வைப்பது!
வர மிளகாயை வெறுமனே
வாணலியில் வறட்டும் போது
வரட்டு இருமல் வரவில்லை
என்றால் தான் ஆச்சரியம்!!
நிரம்பி வழியும் என்
கிட்சன் சிங்க் கை பார்க்கும்
பொழுதெல்லாம் ஒரு ஐயம்
தவறாது வந்து போகும்
.
.
.
.
நான் நாலு பேருக்கு
சமையல் செய்கிறேனா
இல்லை நாற்பது பேருக்கா!!
அரைஆண்டு தேர்வை
வெற்றிகரமாக முடித்து
விட்டு 99.75 விழுக்காடு
மதிப்பெண்கள் பெற்றிருப்பதை
ஆசையோடு பகிர்ந்து கொண்ட
என் பையனை உச்சி முகர்ந்து
பாராட்டி விட்டு கேட்டேன்..
‘அப்போ உன் நண்பன் பார்தூ எவ்வளவு?’
நொள்ள புத்தி அம்மா
வீட்டுக்கு வருகை தந்த
விருந்தினர் 10 நாள் தங்கி
விட்டு கிளம்பி சென்று விட்டதை
மனது தெளிவாக அறிந்தாலும்
இரண்டொரு நாட்களுக்கு
நம் கைகளுக்கு தெரிவதில்லை
உலை கொதிக்கும் போது
மிகையாகவே அரிசியை களைந்து
போட்டு விடுகின்றது!!
தர்மசங்கடமான சூழ்நிலைகளில் ஒன்று
கடைகுட்டி பையனோடு தெருவில்
நடந்து செல்லும் போது யாரேனும் ஒருவர்
சகட்டு மேனிக்கு ஹச் ஹச்.. என்று
தும்மி விட்டால் திருப்பி அதை அப்படியே
இமிடேட் செய்யும் என் பையனை முறைத்து
பார்த்து கண்டிப்பதை விட்டு விட்டு
நானும் களுக் என்று ஆரம்பித்து
கெக்கே பிக்கே என்று சிரித்துவிடும் போது!!