எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


12 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )

நமக்கு இந்த ஸ்வீட் எல்லாம்
ஆகவே ஆகாது என்று அதை
வாங்கி வந்தவரை அட்வைஸ்
செய்யாமல் விட்டதும் இல்லை
அதன் பின்னே வாங்கி வந்த
ஸ்வீட்டை ஒரு பிடி பிடிக்காமல்
விட்டதும் இல்லை!!

Indian Sweets

செல்லரித்த ஏடுகளும்
புல்லரிக்க வைக்கும்…
பல் போன வயதினரின்
பால்ய வயது புகைப்படங்கள்!

 

images (9)

 

பார்வை ஒன்று போதும்
சோர்வடைந்து விடாது
கோர்வையாய் கவிதைகள் கிறுக்க!

How-to-Improve-Eyesight-Naturally

 

அதிகாலை சூரியனை சுட்டி காட்டி
‘சூரிய’ என்று தமிழில் உரைத்த
என் குட்டிப் பையனை கண்டு வியந்து
பெருமிதம் கொள்ள மாட்டாது இறக்கைகள்
இல்லாமலேயே உயரே உயரே பறந்த
என்னை ஒரே நொடியில் தரை இறக்கினான்
‘காந்தி ‘என்று அடுத்த வார்த்தையை உதிர்த்து!!

sun

 

தூரத்தில் தெரிந்த வெளிச்சம்
நோக்கி நடந்தேன் உயிர் மீண்டு
வந்தேன் என்று ‘கோமா’வில்
இருந்து நினைவு திரும்பியவர்
சொல்ல கேட்டதுண்டு..
தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தின்
மேல் கொண்ட’மோக’த்தில் அதை நோக்கி
பறந்து செல்லும் விட்டில் பூச்சிகள்
மட்டும் உயிர் மாண்டு போவது ஏனோ??

images (10)

 

 

அம்மா : Animals தமிழில் என்னவென்று சொல்லுவாய்
பையன் : பசுக்கள்.. மாடுகள்!!
அம்மா : தப்பு.. தப்பு
பையன்: Clue ஏதாவது குடுங்க
அம்மா : திருடனை பிடித்தவுடன் அவன் கையில என்ன மாட்டுவாங்க?
பையன்: watch.. chain.. மோதிரம்!!!
அம்மா: டேய்.. திருடன் என்ன மாப்பிள்ளையா ??
பையன் :அடுத்த clue?
அம்மா : ‘வி ‘ என்ற எழுத்தில் தொடங்கும்..
பையன் : Got it.. விலங்குகள்

images (11)

 

 

கனியுண்டு காயுண்டு வாழ்பவர்க்கு
நோயின்றி வாழ இறைவனின்
கனிவுண்டு காயாத வாழ்வுண்டு!!

scientistssay

 

ஒருவற்கு யாதேனும் ஒரு விஷயம்
‘பிடி’த்திருக்கிறதா இல்லை பிடிக்கவில்லையா
என்பதனை அவ்விஷயங்கள் சார்ந்த
உரையாடல்களின் போது அவர் ‘பிடி’
கொடுத்து பேசுகிறாரா என்பதனை
பொறுத்து கண்டு ‘பிடி’த்து விடலாம்!

images (12)


10 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -45

அப்பா : என்னடா.. பக்கத்து வீட்டில ஒரே ஆட்டம்,பாட்டம் ,

கொண்டாட்டம்னு ஒரே குதுகூலமா இருக்கு.. எதுவும் விசேஷமா??

பசங்க : ஆமா விஷேசம் தான்ப்பா… அவுங்க அப்பா ஊருக்கு போயிருக்காங்களாம்…

அப்பா : !!!!!

download

 

 

தெளிந்த பின்னே
மட்டுமே தெரியும்
இது நாள் வரை அடி
மனதில் எத்தனை
கசடுகள் என்று!!

matter-sedimentation

 

ஒரு திசை காட்டும் கருவி
ஒரு பூத கண்ணாடி
ஒரு கையடக்கமான
தீவட்டி வெளிச்சம்
மகனே…. நீ பள்ளிக்கு வரலாறு
படிக்க செல்கிறாயா இல்லை
வரலாறு படைக்கவா??
MagneticPencilbox

 

images

 

நிலை தட்டுமேயானால் தலை
குனிந்து செல்வது உத்தமம்….
நிலை தட்டு தடுமாறினால்
தலை குனிவு நிச்சயம்..

download (1)

 

இன்றாவது தன் மனதில்
உள்ளதை வாடிக் கிடக்கும்
பூமியிடம் கொட்டி விட
தீர்மானித்து மோடம் போட்டு
காத்து கிடக்குது வானம்!!

images (1)

 

 

பயிரிட்ட பின்னே
விதை விதையாக
முழித்து கொண்டு
நில்லாமல் விளைந்து
நிற்பதே தானியத்தின் சிறப்பு….
அஃதே வயிறிடுவதற்கு முன்பும்!

 

images (2)

நம்ம கிட்ட இருக்கிற
சிம்கார்ட கொண்டு போய்
ஏர்டெல்காரன் கிட்ட குடுத்தா
அதை வெட்டி மைக்ரோ சிம்கார்டா
ஆக்கி தருவானா அம்மா??
ஏலேய்.. அது என்ன ஆடா!
இல்லை.. சிம்கார்டா!!

airtel sim

 

இன்று அதிகாலை
நீ இருண்டு இறுக்கம்
கொண்டு என் மனதை
வானில் பறக்க விட்டு கண்கள்
பணிக்க செய்தது அத்தனையும்
நடிப்பா??????????
வருவது போல் வந்து பின்
வராது சென்ற மழை

images (3)

 

வீர தீரமாய் சுழன்றடிக்கும் சார காற்றே
உன்னுள் ஈரம் இல்லாதவரை உள்ளம் மயங்காது
உடல் சோர்ந்த மயக்கம் மட்டுமே சாத்தியம்!

1317239764_374060252671_35721797671_3848601_1699688_n

 

வெடிச் சிரிப்புடன் கைகளை
டாட்டா காட்டியவாரே வெளியே
ஓடும் குட்டி பையனை பிடிக்க பின்னங்கால்
பிடறியில் அவன் பின்னே ஓடுவாள்..
சற்று முன்னே அவன் சேட்டை
தாங்காமல் தர தரவென இழுத்து
வீட்டின் வெளியே விரட்டிய தாய்..

can-stock-photo_csp9703834

 

ஒருவரை நம்பி கை கொடுப்பதை விட
நம்பிக்கை அளிப்பது சாலச் சிறந்தது!!

charitable-giving

 

கவனிக்க மறந்து விடும் நேரங்களில் தனக்கு
தானே தூசியால் அரிதாரம் பூசி நம் கவனத்தை
கவர்ந்து விடுகிறது நம் வீட்டு சாமான்கள்!!

images (4)

 

அடுத்தவர் பொருளை
ரசித்து நோக்குவது சலனம்
உரிமம் கொள்ள நினைப்பது சபலம்..

images (5)

 

 


15 பின்னூட்டங்கள்

வாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…

Image

முக்கியமான ஒன்று தொலைந்து போனது என்பதே பெரும் வேதனை.. அதிலும் வாழ்வின் ஆதாரமாகிய ஆதார் கார்ட் தொலைந்து போய் விட்டது என்பதை அறியும் நொடி எவ்வளவு கொடுமையாக இருக்கும். அன்று இரவு எல்லாம் நல்லா தான் போச்சு. குழந்தைகள் இரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர். அதன் பின்னர் தான் கணவர் அலுவல் முடிந்து வீடு திரும்பினார். அதிசயமாய் ஒரு பெர்க்கு(Perk) சாக்லேட்டை நீட்டினார், யாரோ குடுத்தார்களாம்.. அது எனக்கு தெரியாதா மனதினுள் சொல்லி கொண்டேன். அந்த நொடி சத்தியமாய் நினைக்கவில்லை ஒரு பெர்க்கு குடுத்து என்னை கிறுக்கு ஆக்க போகிறார் என்று!

கணவர் இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் , இன்று காலை கேஸ் புக் செய்ய சொன்னேனே முடிந்ததா? என்று வினவினேன். அங்கே தான் ஆரம்பித்தது சனி! நம்ம ஆதார் கார்டும் கேஸும் இன்னும் லிங்க் செய்ய படாமல் இருகின்றதாம். நாளை காலை எடுத்து குடு என்று சொல்லி விட்டு அவர் வேலையில் மூழ்கினார். என்னவோ அந்த நொடியில் ஒரு திடீர் எண்ணம், ஆதார் கார்ட் உள்ளே இருக்குதா? சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உடனே எடுத்து பார்த்தேன். நான் பயந்த மாதிரியே எங்கள் நால்வரின் கார்டும் இருந்த சுவடே தெரியவில்லை. பெருமாளே! இது என்ன சோதனை என்று மூளையை கசக்கி பார்த்து யோசித்ததில் ஒன்று தெளிவாயிற்று, போன மாதம் லேமினேட் செய்து வருகிறேன் என்று கணவர் கேட்டு வாங்கி சென்றது நியாபகத்தில் வந்தது.

ஏற்கனவே இன்று அலுவலகத்தில் ஏதோ பிரச்சனை போல யாரிடமோ போனில் உரக்க கத்தி கொண்டிருந்தார். கார்ட் தொலைந்ததை பற்றி சொல்லவா வேண்டாமா.. ஏற்கனவே எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றினால் போல், தொலைஞ்சேன்.. பயத்தில் என்னென்னவோ செய்தது.. அவர் திட்டுவார் என்ற பயமெல்லாம் இல்லை, அவருடைய டென்ஷனை கூட கொஞ்சம் ஏத்தி விடவா இல்லை காலையில் சொல்லலாமா என்று ஒரு குழப்பம். ஆன முழு பூசணிக்காயை எவ்வ்ளவு நேரம் சோற்றில் மறைத்து வைக்க முடியும்? ஆனது ஆகட்டும் இன்றே சொல்லி விடுவது என்று தீர்மானித்து சொல்லியும் விட்டேன்.
நீ எங்கேயாவது வைத்து தொலைச்சுடீயா எரிச்சலுடன் சொல்லி விட்டு பின் யோசித்து விட்டு சொன்னார், லேமினேசன் செய்ய எடுத்து போய் விட்டு திரும்ப வந்து குடுக்கவில்லையோ? அப்பாடி நல்ல வேளை இதாவது நியாபகம் வந்ததே என் மனது பெரு மூச்சு விட்டது. யாருக்கெல்லாமோ போன் அடித்து தெலுங்கில் வினவினார். ஒன்றும் பிரயோஜனபடவில்லை! போனை வைத்து விட்டு சொன்னார், ‘நீ கொஞ்சம் ஃபாலோ அப் செய்திருக்கனும்’. என் கணவர் எப்பொழுதுமே எதையும் மறந்ததிலை. அவர் Mr.Perfect இது நாள் வரை இந்த மாதிரி ஒரு பிரச்சனையை எதிர் கொண்டதே இல்லை. எப்பவும் வாங்கி கொண்டு போய் விட்டு பத்திரமாய் திருப்பி கொண்டு வந்து குடுப்பார். நேரம் இப்படி விழி பிதுங்க வைக்கிறது.

எனக்காவது சிறிது நியாபக மறதி உண்டு. என் போனில் மட்டும் ஒரு 1008 ரிமைண்டர் போட்டு வைப்பதுண்டு. ஏதோ இந்த முறை தவறி விட்டது. இருந்தாலும் இது என் தனிப்பட்ட தவறு இல்லை.. முழுதாய் அவருடைய தவறும் இல்லை.. எங்கேயோ ஏதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. அதை ஏங்கே போய் கண்டு பிடிப்பது. கணவருக்கு இருப்பு கொள்ளவில்லை வீட்டில் இருந்த அத்தனை ஷெல்ஃபையும் நோண்டி கொண்டிருந்தார். இரவு 11 மணி எனக்கு தூக்கம் கண்ணை சுழற்றி கொண்டு வந்தது. ஆதார் கார்டாவது ஒரு மண்ணாவது போனால் போகட்டும் என் போட்டோ அதில் நல்லாவே இல்லை என்று போய் படுத்தது தான் தெரியும், அசந்து தூங்கி போனேன். அதிகாலை 4:15 மணிக்கு எல்லாம் முழிப்பு தட்டி விட்டது. இங்கேயும் அங்கேயும் ஆதார் கார்ட் பறந்து செல்வது போல் ஒரு பிரமை. என்னதான் இரவு படுத்தவுடன் தூங்கி விட்டாலும் உள்மனதில் கார்ட் தொலைந்து போன துக்கம் நம் நிம்மதியை குலைத்து கொண்டே தான் இருக்கும் போல!

ஏதோ அலுவலக வேலை காரணமாக காலை வெகு சீக்கிரமே கிளம்பி விட்டார் கணவர். சிறிது ஆறுதலாக இருந்தது எனக்கு, இல்லையேல் போகும் போதும் வரும் போதும் என்னை முறைத்து கொண்டே இருப்பார். வழக்கம் போலவே காலையில் என் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். ஒரு 10 மணிக்கு போன் செய்தார் கணவர். லேமினஷன் செய்பவரிடம் பேசினேன், அப்படி யாரும் குடுக்கவே இல்லை என்று சொல்கிறார் என்று என் மனதில் கவலை விதைகளை தூவினார். என்னை இன்னொரு முறை எல்லா இடமும் செக் செய்து விட்டு போன் பண்ண சொன்னர். ஒரு பத்து நிமிஷம் நிம்மதியாக இருக்க விட மாட்டரே என்று பிதற்றி கொண்டே இல்லாத ஒன்றை தேட ஆரம்பித்தேன். கார்ட் தொலைந்து போன புண்ணியத்தில் வீட்டின் சகல ஷெல்ஃபும் பளிச் என்று ஆனது.

இப்போ என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை, நேரே போய் கூகிள் சாமியாரின் காலில் போய் விழுந்தேன்! சாமி என்னை காப்பாற்றுங்கள்.. What to do when Aadhaar card gets lost? என்று வினவினேன். நாலைந்து வழிகளை காட்டினார். அதன் வழியே போனதும் நாங்கள் ஆதார் கார்ட் ரெஜிஸ்டர் பண்ணிய நாள், நேரம், Acknowledgement copy நம்பர் போன்ற விவரங்களை கேட்டனர். நல்ல வேளை அவை எல்லாமே பத்திரமாய் என்னிடம் இருந்தன. இவை மட்டுமா 7 வருடம் முந்திய பேப்பர் பில், இந்த பில் அந்த பில், அது இது என்று பெரிய குப்பையே வைத்திருக்கிறேன். எல்லாம் என் கணவரின் குணம் அறிந்து தான்! ஒரு வழியாய் கேட்ட விவரங்களை குடுத்தவுடம் நம் மொபைல் நம்பரை கேட்கின்றனர். பின்னர் நம் மொபைலுக்கு ஒரு one time passwordஅனுப்புகிண்றனர். அந்த பாஸ்வோர்டை குடுத்தவுடன் நமக்கு நம் தொலைந்து போன ஆதார் கார்ட் லட்டு மாதிரி டௌன்லோட் ஆகி விடுகின்றது.

http://aadharcarduid.com/aadhaar-card-lost
இந்த லிங்க் கை சொடுக்கியவுடன் வரும் பக்கத்தில்
Download duplicate AADHAAR card copy online என்பதை சொடுக்கவும்
சொடுக்கியவுடன் கீழே குடுக்கப்பட்ட லிங்க் பக்கம் திறக்கும்
http://aadharcarduid.com/download-duplicate-copy-online அதிலே
e-AADHAAR Portal என்பதை சொடுக்கவும்
சொடுக்கியவுடன் கீழே குடுக்கப்பட்ட லிங்க் பக்கம் திறக்கும்
https://eaadhaar.uidai.gov.in/
அதிலே நீங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தவுடன் உங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் :)

மனது சிறிது லேசானது. தெளிந்த மனத்துடன் பெர்க்கை ஒரு கடி கடித்தேன்!


11 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -32

அனுமதியின்றி உடல் ஊடுருவும்
அதிகாலை நேர கத்திரி குளிரில்
ஊசியாய் குத்தி கிழிக்கும்
ஊத காற்றில் அனிச்சையாய்
செயல்படும் கைகள் நாடி சென்று
ஆசையாய் அணைத்து கொள்ளும்…….
.
.
.
சூடான தேனீர் கோப்பையை!!

Image

 

முத்தம் யுத்தம்
இவையின்
சத்தம் நித்தம்
பின் முடிவில்
இரத்தம் இவை
மொத்தம்
ராம்லீலா!!

Image

நை நை நு குட்டி பையன்
என் உசுரை வாங்கும்
ஒவ்வொரு முறையும்
அவன் துண்டை காணோம்
துணியை காணோம் என்று
ஓட வைக்க நான் சொல்லும்
மந்திர வார்த்தைகள்..
கண்ணு CHUBBY CHEEKS..சொல்லு!!

Image

தூள் கிளப்பினாலே
பிரச்சனை தான்..
கண்டிப்பா கிளப்பி
விடுபவருக்கு
கண்ணு(ல) பட்டு விடும்!!

 

 

Image

 

வெயிலும் அடிச்சு
மழையும் பெஞ்சா
காக்கைக்கும் நரிக்கும்
கல்யாணம்…
வெயிலும் அடிச்சு
குளிரும் கொன்னு எடுத்தா
யாருக்கும் யாருக்கும்
கல்யாணம்..
ஷப்பா முடியல!!

Image

கொஞ்சம் பழசு ஆனவுடன்
இந்த கதவெல்லாம் ஏன்
கிரீச்.. கிரீச்.. என்று 
சத்தம் போடுதுனு தெரியுமா??
.
.
.
அட இது கூடவா தெரியலா??
கொஞ்சம் Grease போட்டா என்ன
குறைஞ்சா போயிடுவீங்க..
அப்படினு தான்!!

Image

 

நண்பர்களுடன் படம் 
பார்த்து விட்டு பூனை
மாதிரி உள்ளே நுழைந்த
பையனிடம் கடு கடுவென்று
முகத்தை வைத்து கொண்டு
நறுக்கென்று நாலு வார்த்தை
கேட்டேன்…………
.
.

படம் என்ன கதை டா!!

Image

 


4 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -6

Threading இன்றைய
பெண்களுக்கு மட்டுமே 
உரித்தான புருவத்தை
சீர் திருத்தும் 
அழகு கலை அல்ல
ஆண்கள் அந்த காலத்திலேயே
செய்து பார்த்திருக்கிரார்கள்

.
.
.
பென்சில் மீசை!!

படம்

கட்டாய 
மல்லேஸ்வரிகளாகும்
பூவையர்
.
.
.
.
.
இருபது லிட்டர்
தண்ணீர் கேனை
ஒரே தம்மில் தூக்கி
கவிழ்த்தும் நம்
வீட்டு பெண்கள்!!

படம்

 

அதிகாலை நேர
ஒரு நொடி சபலம்
காலை நேரம் 
முழுக்க அவலம்
.
.
.
.
Snooze செய்வதற்கு
பதிலாய் தெரியாமல்
Dismiss செய்யப்பட்ட
அலாரம்!!

படம்

ரச வடை ருசிக்கும்
ரச மலாய் இனிக்கும்
மாம்பழ ரசம் தித்திக்கும்
மாதுளங்காய் ரசம் துவர்க்கும்
குமட்டி கொண்டு வரும் 
ஒரே ரசம்
.
.
.
ரஸ்ஸே வாலே நூடுல்ஸில் உள்ள ரசம்!!

படம்

 


4 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -5

படம்

அதிகாலையில் கரண்ட்
போய் விடுமோ என்ற பயத்தில்
முந்தய நாள் இரவிலேயே
சமையலுக்கு தேவையான
இஞ்சி,பூண்டு உரித்து
மிக்சியில் இட்டு அரைத்து
அரைத்த விழுதை ஒரு
டப்பாவில் அடைத்து 
ஃப்ரிட்ஜில் வைத்தால்
அதுவே
.
.
மிட் நைட் மசாலா!!!

படம்

கொண்டைகடலை குழம்பு வைப்பதற்கு
எண்ணையை காய விட்டு
பெருஞ்சீரகம், கிரம்பு போட்டு பொறிந்தவுடன்
வெங்காயத்தை ஒரே சீராக வதக்கி பொன்னிறமானவுடன்
தக்காளி சேர்த்து அது வதங்கியவுடன்
உப்பு, மசாலா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கிளறி
அந்த கலவையில் சிறிது தண்ணீர் விட்டு 
கொண்டைகடலையை அதில் கொட்டியவுடன்
கிளம்பும் நெடியில் நீங்கள் அச்சூ அச்சூ… என்று விடாமல் தும்மினால்
சூடு தாங்க முடியாமல் கொண்டைகடலை
உங்களை மனதார திட்டுகிரது என்று அர்த்தம்!!

படம்

வெள்ளரிக்கு
ஒன்னுவிட்ட 
சித்தப்பா பையனோ??
.
.
.
.
.
கோவக்காய்!!

படம்

கோவக்காய் வதக்கும் போது
அதை அருகிலேயே நின்று
கவனித்து கொள்ளுவது நலம்
இல்லையேல் கோபத்தில்
அதற்கு முகம் கறுத்து போவது
நிச்சயம்!!


6 பின்னூட்டங்கள்

மச்சான்1… மச்சான்2….மச்சான்3……..

படம்

அதிகாலையில் இருந்தே, பரபரப்பாய் இருந்தது அந்த வீடு. மாப்பிள்ளை பார்க்க போகிரார்களாம், அவர்களுடைய பெண்ணுக்கு! பெண் தன் சகோதரி, பரிவாரத்துடன்,மாப்பிள்ளை பார்க்க கிளம்பி இருந்தாள். மாப்பிள்ளை வீட்டார் கிராமத்து மக்கள் ஆதலால், பெண்ணும் பாவாடை தாவணியில், தீபாவளியாய் ஜொலித்தாள். இந்த கூட்டத்தோடு, ஒளி படம் எடுத்தவாறு ஒரு கேமராமேன், லைவ் கவரேஜ் செய்து கொண்டிருந்தார். பெண்ணின் சகோதரி, அப்ப அப்ப பெண்ணின் காதை கடித்து கொண்டே, களுக் என்று சிரித்தவாரே, அவளை வழி நடத்தினாள்.

 

ஒருவாறு மாப்பிள்ளை வீடும் வந்து சேர்ந்தது. காலை நேரம் ஆதலால், மாப்பிள்ளை பையனின் அம்மா, பிஸியாக வாசலை மொழுகி கொண்டிருந்தார். பழகி பார்ப்பதற்காக, அதி காலையிலேயே வந்து சேர்ந்த பெண் வீட்டாரை, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு, வாய் நிறைய சிரிப்போடு வரவேற்றார் அந்த அம்மையார். பார்ப்பதற்க்கு கொல்லங்குடி கறுப்பாயியை ஒத்து இருந்தார்! காதில் பெரிய பாம்படங்கள் வேறு.. பெண்ணோ ஒரு படி மேலே போய், அவர் அப்படியே போட்டு விட்டு சென்ற வேலையை எடுத்து தானே செய்து முடித்தாள். ஒரு பத்து நிமிடம் முன்னர் வந்திருந்தால், வாசல் மொழுகுவதற்காக, சாணம் கரைக்கும் வேலையையும் சேர்த்து செய்து முடித்திருப்பாள் போல இந்த பெண்!! பார்த்து கொண்டிருந்த எனக்கே, ரொம்ப ஓவராக தான் தோன்றியது!!

நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும், ஒன்று விடாமல், கேமரமேன் தன் கேமராவில் பதிந்து கொண்டிருந்தார்! பெண் வீட்டாரை உட்கார வைத்து விட்டு, பால் கறப்பதற்காக, பின் பக்கம் சென்றார்.. கூடவே அழையா விருந்தாளியாய், நம் பெண்ணும், அவள் சகோதரி மற்றும் அந்த கேமர மேன்.. இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்த பிறகு, இதையெல்லாம் அந்த பெண் தானே செய்ய வேண்டும், அதற்காக பழகி கொள்கிராளாம்… என்னத்த பழகுராளோ!! பால் சொம்பை, அந்த அம்மையாரிடம், கேட்டு வாங்கினாலும், முதல் அனுபவத்திலேயே கறப்பதற்கு, அந்த பெண் என்ன ராமராஜன் தங்கச்சியா.. பால் கறப்பது போல் பாவ்லா செய்து விட்டு, அந்த அம்மையாரிடமே கொடுத்து விட்டாள். பாலை கறந்தாளோ இல்லையோ, அந்த பையனின் அம்மாவின் மனதில் சந்தொஷம் கரை புரண்டோட செய்தாள். ஒவ்வொரு மாமியாரின்  கனவு, அத்தனை வேலைகளையும் இழுத்து போட்டுகொண்டு செய்யும் மருமகள் கிடைக்க போகிர சந்தோஷத்தில் மிதந்தாள்!! ‘இவ விளக்கேத்த எங்க வீடு தவங்கிடக்கு’ என்று பாடாத குறையாய், வந்தவர்களை கவனிக்க சென்றாள் அந்த அம்மையார்.

காலையிலேயே எழுந்து, சில வேலைகளுக்காக,வெளியே சென்றிருந்த பையனும், வீடு வந்து சேர்ந்தான். பெண் தன் தங்கையின் காதை அவசரமாக கடித்தாள், ‘என்ன மச்சான் எப்படி இருக்கிரார்??'(மச்சான் என்ற சொல்லின் பொருள்- அக்காவின் கணவரை, மரியாதையாக குறிப்பிடும் ஒரு சொல்) வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில்,ஆஜானுபாகுவாய், பயமுறுத்தும் மீசையோடு, சிங்கம் சூர்யாபோல இருந்த மாப்பிள்ளையை,யாருக்கு தான் பிடிக்காது. அவருக்கும் பெண்ணை பிடித்திருந்தது என்பதை அவருடைய அணுகு முறை, அவருடைய வீர தீர,எதிர்பாலினரை மயக்க வைக்கும் பேச்சிலேயே புரிந்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை என கால் வலிக்க, வலிக்க ஒளி படம் எடுத்து தள்ளினார் கேமரா மேன்! வேர வேலை வெட்டி எதுவும் இல்லையோ, யாருக்கு தெரியும்!!

கேசரி, வடை, உப்புமா என்று விருந்துண்டு முடித்து, பிரியா விடை கொடுத்து கிளம்பினார்கள் பெண் வீட்டார்!!! போகிர வழியிலேயே, அவசர அவசரமாய், பெண் தன் கிராமத்து கெட் அப்பை கலைத்து விட்டு, மாடர்ன் பெண் கெட் அப்புக்கு மாறி விட்டிருந்தாள். கேமரமேன் குறிபிட்ட அடுத்த முகவரிக்கு, தங்கள் வண்டியை திருப்பினர். அடுத்த வீடும், வந்து சேர்ந்தது, அழைப்பு மணியை அடித்தனர் பெண் வீட்டார்! இப்பொழுது கதவை திறந்ததோ, கொஞ்சம் மார்டன் அம்மையார்! கூடவே மார்டன் யுகத்து பையனும், உதட்டு சிரிப்புடன் வறவேற்றனர். இப்பவும், பெண் தன் சகோதரியின் காதை கடித்தாள், ‘என்ன இந்த இரண்டாவது புது மச்சான் எப்படி??’

இப்பதான் கொஞ்சம் உற்று நோக்கினேன், அந்த பெண் காதை கடித்து கொண்டிருப்பது என் தங்கையின் காதுகளை.. என் தங்கைக்கு இங்கு என்ன வேலை, யார் இந்த பெண் என்று யோசிக்கையில் தான் விளங்கியது, அய்யயோ, இந்த கருமாந்திரம் பிடித்த பெண் நானா!! மேக் அப் போட்டு இருந்ததால் சரியாக தெரிய வில்லை, அது போக அரை குறை தூக்கம் வேறு.. நல்ல வேளை, மூன்றாவது மச்சான், நான்காவது மச்சான் பார்க்க போவதற்க்குள் முழிப்பு தட்டி விட்டது!! என் கனவின் உள்ளே நடந்த களேபரம் எதுவும் தெரியாமல், நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்தார் என் அருமை கணவர்! அடித்து பிடித்து எழுந்து, டீவீயை ஆன் செய்து, IMAGINETV சேனலை லாக் செய்து விட்டு நிம்மதி பெருமூச்சி விட்டேன்! அந்த நிமிடமே முடிவெடுத்தேன், ‘SUYAMVAR’ டீவீ நிக்ழ்ச்சியை இனி ஒரு போதும் பார்க்க கூடாது என… அந்த நிகழ்ச்சியை பற்றி தெரியாதவர்கள் இங்கே சொடுக்கவும். ஒரு டீவீ நிகழ்ச்சி மனதினுள் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமா?? கடவுளே காப்பாத்துப்பா!!!