எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


7 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -28

கணவனை முழுவதும் புரிந்து
கொள்ள முடியாது என்பதை மனைவியும்
மனைவியை முழுவதும் புரிந்து
கொள்ள முடியாது என்பதை கணவனும்
புரிந்து கொள்ளும் போது மகிழ்ச்சியான
வாழ்க்கையின் ரகசியம் புரிந்து போகிறது!!
images (5)
‘சன்’நை புகைப்படம்
எடுக்க எத்தனிக்கையில்
சைக்கிள் கேப்பில்
புகுந்து விட்ட
சண்டாளன்!!
1460127_549784751781105_1967711882_n
முந்திரி பருப்பு இருந்தா
தூத்துகுடிகாரங்க மக்ரூன் செய்வாங்க..
திருநெல்வேலிகாரங்க முந்திரி அல்வா செய்வாங்க..
சூரத்காரங்க காஜு கத்ரிசெய்வாங்க..
கொடுமை கொடுமை..
இந்த குண்டூர்காரங்க மட்டும் வெல்லம் போட்டு
முந்திரிமிட்டாய்(இத வேற எப்படி சொல்றது)
செஞ்சு வைக்கிராங்க
இதை எப்படி சாப்பிடறது!!
1422435_550407868385460_201639140_n
அடி மேல் அடி விழும் போது
அவசரப்பட்டு உடைந்து விடாதீர்கள்
செதுக்கிவிடப்பட்டு கொள்ளுங்கள்
யார் கண்டார் நாளை அழகு மிளிரும்
சிலையாகவும் உருமாறலாம்!!
images (4)
மெனக்கெட்டு மனப்பாடம் செய்த
என் மொபைல் நம்பர் முக்கிய
மொமென்டில் மறந்து என்னை
மலங்க மலங்க முழிக்க வைத்து
மானத்தை வாங்குவதேனோ!!
images (3)
டேய் கொஞ்சமாவது அறிவிருக்கா??
என்று என் பையனிடம் இப்பவெல்லாம்
கேக்கவே முடியரதில்லை..
தப்பி தவறி கேட்டு விட்டால் பதிலுக்கு
உங்களுக்கு அறிவிருந்தா எங்க என்ன விட
ஸ்பீடா 16த் டேபிள் சொல்லுங்க பார்ப்போம்!!
16-times-table-multiplication-chart
அம்மா 3/9 + 6/9 என்ன வரும் சொல்லுங்க..
இது சிம்பிள் டா 1 வரும்
பரவாயில்லையே கரெக்டா சொல்லுறீங்க
ஓல்ட் ஏஜ் ல Fraction எல்லாம் உண்டா…
ஓல்ட் ஏஜா விட்டா ஸ்டோன் ஏஜ்னு சொல்லுவான் போல!!
fractions_3bmu