எழுதியது: சிறி சரவணா
விண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.
இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.
View original post 332 more words
5:02 முப இல் மே 13, 2015
உடனடி தகவல் என்பது போல அற்புத தகவல் .நன்றீ.
”தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும்”
நமது நம்பிக்கை இப்படி இருக்கிறது .ஆனால் கையிலாத்தில் உள்ள மானோ சரோவருக்குச் சென்ற ஈஷாவின் சத்குரு ஜகி வாசுதேவ் மிக சாதரணமாக அவர்கள் வருகை பற்றி பேசுகிறார் வைஸ் (WISE) சொல்லப் போவதை நம்புவதா ? வாசுதேவ் சொல்லியதை நம்புவதா ?
1:42 முப இல் மே 14, 2015
இணைப்பிற்கு நன்றி…