எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

என்னடா இப்புடி பண்ணுறியேடா..

33 பின்னூட்டங்கள்

 

சில மாதங்களுக்கு முன்னால் , எனக்கும், என் இரு பசங்களுக்கும், திடீரென்று ஒரு ஆசை.. நாம ஏன் ஒரு வளர்ப்பு பிராணி வளர்க்க கூடாது! இது வளர்க்கவா இல்லை அது வளர்க்கவா என்று ஆளுக்கு ஒரு பிராணியை சொல்லி , கடைசியில் பூனை வளர்ப்பது என்று முடிவாயிற்று! பூனை வளர்க்கலாம் தான்….. ஆனா என்று நான் ஒரு பெரிய இழு இழுத்தேன்! எதுக்கு?? காரணம் இருக்கு. பூனை வளர்த்தால், அப்பூனையின் முடி நம் மூக்குக்குள் சென்று விட வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே , அலர்ஜி , ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உண்டு! அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பெரிய பையன் ஒரு யோசனை சொன்னான்!talk1

அவன் சொன்னான், நாம ஏன் ஒரு டாக்கிங் டாம்(Talking Tom ) வளர்க்ககூடாது! எனக்கும் அது ஒரு நல்ல முடிவாகத்தான் பட்டுது. ஏன் என்றால், அது ஒரு மெய்நிகர் பூனை (Virtual Cat ) . டாக்கிங் டாம் என்பது ஒரு Android App. அதை நாம் நமது Android போனிலோ இல்லை டேப்லட்டிலொ (Tablet ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாம ஏதாவது பேசினால் , அது சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை போல் திரும்ப பேசும்! நம் காலை உரசி கொண்டு நிற்காது. நம் வீட்டு பாலை தெரியாமல் குடிக்காது. நம் மடியில் சொகுசாக வந்து படுக்காது.எலியை தூக்கி கொண்டு வந்து நம் வீட்டில் போடாது. காலுறைகளை கடித்து வைக்காது . முக்கியமாக மியாவ்.. மியாவ் என்று கத்தி நம் உசுர வாங்காது! டபுள் ஓகே சொன்னேன் நான்! அன்றைய தினமே எங்கள் வீட்டிற்கு டாக்கிங் டாம் வந்து சேர்ந்தது!

talk6

பெரிய பையனுக்கு, ரொம்பவே மகிழ்ச்சி! கண்ணை இமை காப்பது போல் அதை நன்கு பார்த்து கொண்டான்! அதற்கு பசித்த போது , அதற்கு தேவையான உணவை வாங்கி அதன் வாயில் கொடுத்து சாப்பிட வைத்தான்! நேரத்துக்கு தூங்க வைத்தான்! சிறிது நேரம் அதன் கூட விளையாடினான்! அதற்கு உச்சா , கக்கா வந்தால் உடனே அப்பூனையை கழிப்பறை செல்ல பழக்கினான்! அதனால் நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக பூனை வளர்ந்து வந்தது! அவ்வாறு பொறுப்பாக வளர்க்கும் போது அதற்கு ஏற்றாற் போல் நாணயங்கள் பரிசாக கிடைக்கும்! பூனையுடன் விளையாடும் போதும் , ஊக்க பரிசாக நாணயங்கள் கிடைக்கும். அவ்வாறு சேகரித்த நாணயங்களை கொண்டு , பூனைக்கு தேவையான உணவுகளை வாங்கி கையிருப்பில் வைத்து கொள்ளலாம். அதற்கு பசிக்கும் போது ஊட்டி கொள்ளலாம்!

 

எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது! ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் என்று சும்மாவா சொன்னாங்க! ஒரு நாள் எங்க பெரிய பையனுக்கு டாக்கிங் டாம் போரடித்து போயிற்று. அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான். அதற்கு பதிலாக, டாக்கிங் ஜிஞ்சர், பென் , டாக்கிங் ஏஞ்செலா என்று நிறைய பதிவிறக்கம் செய்து அவற்றோடு விளையாட ஆரம்பித்து விட்டான். இந்த ஜிஞ்சர் பூனை , நம்ம டாக்கிங் டாமுக்கு கசின், அதாங்க உடன் பிறவா சகோதரன்! பென் என்பது ஒரு சோம்பேறி பேசும் நாய், அப்புறம் , இந்த ஏஞ்செலா இருக்கே, அது அசின்! பெரிய அழகினு நினைப்பு அதுக்கு சாப்பாடு ஊட்டினது பத்தாது என்று , அதன் பல் இடுக்கில் சிக்கி இருக்கும் உணவு துகள்களை பிரஷ் வைத்து சுத்தம் வேறு செய்து விட வேண்டும்! அசப்புல பாக்க , டார்லிங் படத்து பேய் மாதிரி ஒரு மூஞ்சி! ஆனாலும் எங்க வீட்டு பசங்களுக்கு இவுங்க எல்லாத்தையும் பிடிக்க தான் செய்யுது!!talk3 talk9 talk10 talk14

இப்படியாக, அசின் , கசின் என்று பெரிய பையன் திசை மாறி போக, டாக்கிங் டாமை கண்டு கொள்ள ஆள் இல்லாமல் போயிற்று! அப்போ தான் நுழைந்தான் எங்க வீட்டு குட்டி பையன்! டாக்கிங் டாம்மோடு ஆசையாக விளையாட ஆரம்பித்தான்! அவன் ரொம்பவே சேட்டைக்காரன்! கிளி மாதிரி வளர்த்த டாக்கிங் டாமை குரங்கு கையில குடுத்த மாதிரி! நாணயங்களை தண்ணீராக செலவழிப்பான்! எது தேவை , எது தேவை இல்லை என்பதை பற்றி கவலை கொள்ளாமல் , டாக்கிங் டாமுக்கு , வித விதமாய் உணவு வகைகளை வாங்கி ஊட்டி தள்ளினான்! அதுவும் காணாததை கண்டதை போல தின்று தீர்த்தது! அதற்கு சாப்பாடு குடுக்க வேண்டியது , கழிப்பறையில் விட வேண்டியது , அரை குறையாய் தூங்க விடுவது என்று அவன் இஷ்டத்திற்கு டாம் வளர்ந்து வந்தது! மருந்துக்கு கூட , டாமோடு விளையாடுவது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாய் நாணயங்கள் குறைந்து ஒரு கட்டத்தில் நாணயங்கள் சுத்தமாக இல்லாமல் போயிற்று.. அன்றைக்கு ஆரம்பித்தது தலை வலி எனக்கு!

talk2       talk13

நாணயங்கள் காலி ஆனதால் உணவு சுத்தமாக தீர்ந்து போனது! என்ன செய்வதென்று தெரியாமல் , எங்க குட்டி பையன் திரு திருவென்று முழித்தபடி என்னிடம் வந்து சேர்ந்தான். அவனுக்கு கவலை , பூனைக்கு ஆப்பிள் வாங்க முடியவில்லையே, ஆரஞ்சு வாங்க முடியவில்லையே என்று! சரி, பூனையோடு விளையாடினால் நாணயங்கள் கிடைக்கும் என்று விளையாட நினைத்தால் , பூனை பசி மயக்கத்தில் இருந்தது! என்ன செய்வது என்று தெரியாது , பெரிய பையனை கூப்பிட்டு கேட்டால் , அவன் சொல்லுகிறான்… நீங்க , அப்பப்ப அது கூட விளையாடி விளையாடி நாணயங்களை சேர்த்திருக்கணும் என்று!

 

talk15     talk17       talk11

விட்டால்… என்னை கழைக்கூத்தாடி ஆக்கிடுவானுங்க போல ! இந்த பூனையின் பசியை தீர்ப்பதற்காக டாக்கிங் டாம் App நியூஸ் லெட்டெருக்கு subscribe செய்தேன். ஒரு 1500 நாணயங்கள் அதற்காக கொடுத்தார்கள்! அப்பாடா.. என்று சொல்லி முடிப்பதற்குள் , எங்க குட்டி பையன் அதை மொத்தமாக காலி செய்திருந்தான்! அதன் பின்னே டாக்கிங் டாம் Youtube videos உக்கு subscribe செய்தேன்! அதுவும் அதே வழியில் காலி ஆகியது! பூனை பசி எடுக்க ஆரம்பித்தவுடன் கையில் ஒரு கோழி ரோஸ்ட் படத்தை வரைந்த அட்டையை தூக்கி காண்பித்து ஆ.. ஆ… ஆ என்றுஅதன் கையை வாயில் சுட்டி காட்டி எதையாவது சாப்பிட ஊட்டி விட மாட்டாயா என்று என் குட்டி பையனை பார்த்து கேட்டு கொண்டிருந்தது !

பூனை மியாவ் என்று உயிரை வாங்கினால் கூட பரவாயில்லை போல.. இது ஆ.. ஆ.. ஆ .. என்று கத்துவது எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது. நிஜ பூனையாக இருந்தால் கூட ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி வைத்து அதன் வாயை அடைத்து விடலாம்! இந்த மெய் நிகர் பூனையை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தோம்! உடனே , பெரிய பையன் சொன்னான் , கொஞ்ச நாள் அந்த பூனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள் , அது ஓடி போனாலும் போயிடும் என்று! வேறு வழி , இரண்டு வாரத்துக்கு எட்டி கூட பார்க்காமல் இருந்தோம். இரு வாரங்கள் கழிந்த பின்னே , மனது கேட்காமல் சென்று பார்த்தேன்! பார்த்தவுடன் அழுகையே வந்து விட்டது! பூனை இரு வாரமாய் கழிப்பறை செல்லாமல் , பூச்சிகள் தலையை வட்டமடிக்க எங்களுக்காக காத்து கொண்டிருந்தது!

இப்பொழுதும் இந்த நிலைமையை சமாளிக்க, பெரிய பையன் தான் ஆபத்பாந்தவனாய் வந்தான்! தன் நண்பனிடம் கேட்டு Hacked டாக்கிங் டாம்மை போட்டு கொடுத்தான்! அதில் நாணயங்களுக்கு பஞ்சம் இல்லாது நிறைய இருந்தது! சின்ன பையனுக்கோ கொண்டாட்டம்! கொஞ்ச நாட்களிலேயே எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போல் , இராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது டாக்கிங் டாம்! அதன் உடை , உணவு , தாங்கும் இடத்திலிருந்து எல்லாவற்றிலும் செல்வச்செழிப்பு தாண்டவமாடியது! சரி , இத்தோடு பிரச்சனை ஓய்ந்தது என்று நினைத்தால், அது முடியவே முடியாது போல!

talk7

 

 

talk5

 

அப்படி என்ன பிரச்சனை?? அது ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து என்ன பிரயோஜனம், எங்க குட்டி பையன் , அதை நேரத்துக்கு தூங்க விட மாட்டிகிறான்! அது கொட்டாவி விட்டு கொண்டே சாப்பிடுகிறது.. அதாவது பரவாயில்லை, அது உச்சா , கக்கா போவதற்கு கூட விட மாட்டிகிறான்! அது அடக்க முடியாது காலை காலை ஆட்டி கொண்டு நாட்டியமாட , இங்கே இவன் வெடி சிரிப்பு , சிரித்து கொண்டிருக்கிறான்!

talk12                 talk16

டேய்.. பாவம்டா… அதுக்கு வயிறு வலிக்க போகுது டா… அத கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடுடா… இவை எல்லாம் என் புலம்பல்கள்!! என்னடா இப்புடி பண்ணுறியேடா!!

33 thoughts on “என்னடா இப்புடி பண்ணுறியேடா..

 1. ஹிஹி, இந்த டாகிங் டோம்ல இதெல்லாம் இருக்குன்னு இன்னைக்குதான் தெரியுது. உடனே இன்ஸ்டால் பண்ணிப்பார்த்தாச்சி. நல்லாத்தான் இருக்கு, கொஞ்சநாள் நானும் பெட் பண்ணிட்டு சொல்லுறன் எப்படி இருக்குன்னு. 🙂

  • ஓ! அதுக்குள்ள டாமை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டியா! வளர்த்துட்டு கண்டிப்பா சொல்லு.. எப்படி இருந்தது என்று 🙂

   • அட போங்கக்கா எப்ப பார்த்தாலும் நோட்டிவிகேசன் வந்துட்டே இருக்கு, எனக்கு பசிக்குது, எனக்கு விளையாடனும், எனக்கு நித்திரை வருதுன்னு!! என்னோட உண்மையான பூச்சி (பூனையோட பெயர்) கூட இப்படி துன்பப் படுத்தியதில்லை! அன்இன்ஸ்டால் பண்ணிட்டன் ஹிஹி

   • சரவணா! இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், நான் ஏன் இப்படி புலம்பி , புலம்பி ஒரு பதிவு எழுதினேன் என்று 😀

   • ஹஹா, இப்படியே புலம்பி புலம்பி நிறைய பதிவு எழுதுங்க அப்பத்தான் எங்களுக்கும் டைம் பாஸ் ஆவும்
    ஹி..ஹி..

   • ஹா ஹா ஹா… ஆகும் ஆகும்… இப்படி எழுதும் போது உனக்கு டைம் பாஸ் ஆகுமோ இல்லையோ எனக்கு மனதில் உள்ள பாரம் குறையும்… சந்தோஷமாக இருப்பதற்கு ஒரு புதிய , ஜாலியான வழி! இந்த ஒரு காரணத்துக்காக தான் இந்த ப்ளாக் நான் எழுத ஆரம்பித்தேன் 🙂

   • அதுவும் உண்மைதான்! நானும் பல வருடங்களாக புத்தகங்கள் வசித்து தகவல்களை சேர்த்தாலும், எழுத முனையவில்லை. இப்போதுதான் கொஞ்சம் தமிழில் எழுதுகிறேன் அதுவும் இலகுவாக மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் அறிவியல் தவல்களை வழங்குவதற்காக.. ஒரு மன திருப்தி கிடைகிறது. 🙂

   • நீ நல்ல ஒரு சேவை செய்கிறாய்! தொடர்ந்து செய்.. உன்னால் நிறைய பேர் பலன் அடையட்டும் 🙂

 2. டாகிங் டாம் பார்த்திருக்கிறேன். ஆனால் அதனுடன் இப்படியெல்லாம் விளையாடலாம்னு இப்போதான் தெரிந்து கொண்டேன். நமக்கு நிஜப் pet-உம் பிடிக்காது. மெய்நிகர் petஉம் வேண்டாம்ப்பா!

  • வாங்க ரஞ்சனி அம்மா! எங்க அம்மாவை மாதிரியே பேசுறீங்க 🙂 ஒரு நிஜ பூனை குட்டியை(பெரிய பூனை அல்ல ) எடுத்து வளர்த்து பாருங்க அம்மா.. மனதுக்கு ரொம்ப சந்தோஷத்தை குடுக்கும்! என் பிள்ளைகள் எல்லாம் பெரியவர்கள் ஆனவுடன் நான் கண்டிப்பாக ஒரு பூனை குட்டியை வளர்ப்பேன் 🙂 நீங்க சொன்ன நம்ப மாட்டீங்க , நான் சிறு வயதில் வளர்த்த ஒரு பூனை குட்டி, என்னை சுவற்றில் உள்ள பல்லியை பிடித்து தர சொல்லும் , மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் காகத்தை பிடித்து தர சொல்லும், பூனையை சகட்டு மேனிக்கு திட்டும் என் அம்மாவை , தன் கையால் அடிக்கும்!!! ஒன்னு வளர்த்து பாருங்க அம்மா , உலகம் புதியதாய் , அழகாக தெரியும் 🙂

 3. டாக்கிங்க டாம் உருவாக்கியவர்கள் கூட இவ்வளவு சிரம்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் ரொம்பவே சிரம்ப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் மஹா.

  • ஹா ஹா ஹா… ஆமாம் ராஜி மேடம்.. ஒவ்வொரு தடவையும் பூனை பசி தாங்காம ஆ.. ஆ.. ஆ என்று கத்தும் பொழுதெல்லாம் , இதை உருவாக்கியவர்களை திட்டாமல் இருந்ததில்லை 🙂

 4. இது புதிய விளையாட்டு போலிருக்கே…

 5. நானும் கணினியில் நிறைய விளையாடுவேன் செல்லப்பிராணி என்னவோ நீங்கள் எழுதிய நடை வெகு அருமை பாராட்டுக்க்ள் மஹா

  • எனக்கு டாக்கிங் ஜிஞ்சரை மட்டும் ரொம்ப பிடிக்கும் விஜிகுமாரி மேடம்! பிள்ளைகள் விளையாடும் போது அமர்ந்து வேடிக்கை பார்ப்பதுண்டு! வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி மேடம் 🙂

 6. இதெல்லாம் என்னவென்றே தெரியாது. புரிஞசுண்டு இதுக்கும் சேர்த்துக் கவலைப்படும்படியான விளையாட்டு போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.அன்புடன்

  • வாங்க காமாட்சி அம்மா! இதெல்லாம் என்னவென்று தெரியாதவரை நல்லது தான் அம்மா.. இல்லாவிட்டால் என்னை மாதிரி நீங்களும் இந்த இல்லாத பூனைக்காக என்னை போல புலம்பி கொண்டிருப்பீர்கள் 🙂

 7. ம் ..இன்று தான் இந்தப் பூனை பற்றி கேள்விப்படுகின்றேன். நகைச்சுவை உணர்வு உங்களுக்கு அதிகம் என்று கருதுகின்றேன்.மிகவும் நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.
  இந்தப் பதிவு பெரிய வெற்றி பெறும் என்று நினைக்கின்றேன்.நன்றி மஹா மேடம்.

 8. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

 9. ஹாஹாஹா…! நல்ல வேளை ஒரிஜினல் பூனைக்குட்டிங்க தப்பிச்சுது!

 10. என்னமா இப்புடி பின்னுறீங்களேமா!!! 😀 டாகிங் டாம் ஐ உருவாக்கியவர்கள் கூட இவ்வளவு அருமையாய் கூறியிருக்கவில்லை….

  • ஹா ஹா ஹா.. வாங்க அவினாஷ்.. என் பையன் உங்களை Email மூலமாக follow பண்றான் கவனிச்சீங்களா! அவன் பெயர் வினீத்! அவனுக்கு விண்டோஸ் சாப்ட்வேர் , மொபைல் Apps எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ரொம்ப ஆசை! அவன் அறிவுக்கு தீனி போடுவது போல் இருக்கிறது உங்க வலை தளம். ஒவ்வொன்றாக பார்த்து தெரிந்து கொள் என்று கூறி இருக்கிறேன் 🙂

 11. “Talking Tom 2” என்று ஒரு அப்ளிகேசன் உள்ளது. அந்த பூனைக்கு இந்த சோறு
  ஊட்டுறது , குளிக்கவைக்றது , இந்த மாதிரி ஏதும் செய்ய வேண்டியது இல்லை. நீங்க
  பேசுனா திருப்பி பேசும். சின்ன சின்ன கிசுகிசு மூட்டி விளையாடலாம். வேற ஏதும்
  மெனக்கெட வேண்டியது இல்லை.

 12. “நிஜ பூனையாக இருந்தால் கூட ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி வைத்து அதன் வாயை அடைத்து விடலாம்!” உங்களை எந்த அளவு talking tom வெறுப்பேற்றியிருக்கிறது என நன்றாக புரிகிறது… 🙂 🙂

  என் பையன் (2 வயது) இதோடு விளையாட மாட்டான்… அதுக்கு அறை கொடுத்து அது மயங்கி விழுவதைப் பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பான்… 🙂 🙂

  • உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்! என் பையன் முதலில் அதை அடித்து தான் விளையாடி கொண்டிருந்தான்! நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க , இப்போ அந்த பூனையா பார்த்தால் யானையோ என்று சந்தேகம் வருகிறது! அந்த அளவுக்கு அதை பெருக்க வெச்சுட்டான் எங்க பையன்! வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி சார் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s