எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

பதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்

10 பின்னூட்டங்கள்

மரியாதைக்குரிய பதிவுலக நண்பர்களுக்கும் , வாசக பெருமக்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்! இது என் நூறாவது பதிவாக அமைந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.. இந்த பொன்னான நாளில் என்னையும் ஒரு எழுத்தாளராக மதித்து, ஊக்குவித்து வந்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூற கடமை பட்டிருக்கிறேன். என்னை முதன் முதலில் கண்டு கொண்டு இடைவிடாது ஊக்குவித்த ரஞ்சனி அம்மா  http://pullikkolam.wordpress.com/ , கவிஞர் ரூபன் அண்ணா அவர்கள்  http://2008rupan.wordpress.com/ , அன்பின் மறுஉருவம் காமாட்சி அம்மா https://chollukireen.wordpress.com/, கவிதாயினி சகோதரி வேதா அவர்கள் http://kovaikkavi.wordpress.com/, மதிப்பிற்குரிய அண்ணன் பாண்டியன் அவர்கள் http://kadaisibench.wordpress.com/, நல்வழி காட்டும் ராஜலட்சுமிபரமசிவம் மேடம் http://rajalakshmiparamasivam.blogspot.com/, நம் பாரத பாரம்பரியத்தை, சம்பிரதாயங்கள் , புதிது புதிதாய் செய்திகள் என்று ஆயிரம் பதிவு பதித்த விஜிகுமாரி மேடம்  https://chinnuadhithya.wordpress.com/ , நண்பர் ஆறுமுகம் சார் https://aarumugamayyasamy.wordpress.com/, நம் பாரம்பரிய சமையலை உலகறிய செய்து வெற்றி கொடி நட்டிய மதராசி அவர்கள் http://madraasi.com/, மதிப்பும் மரியாதைக்கும் உரிய டாக்டர் முருகானந்தம் அவர்கள்  http://hainalama.wordpress.com/ , தமிழை பேணி பாதுகாக்கும் யாழ்பாவணன் ஐயா அவர்களுக்கும் http://yarlpavanan.wordpress.com/, என் பிறந்த ஊர்க்காரரும் இணைய சித்தர் என்று பதிவுலக நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் திண்டுக்கல்  தனபாலன் சார் http://dindiguldhanabalan.blogspot.com/ அவர்களுக்கும், இனிய சித்ரா அக்கா http://chitrasundar5.wordpress.com/ அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் !

இன்று இந்த பதிவை பதிய முக்கிய காரணம் என் புதிய வோர்ட்ப்ரெஸ் தளத்தை அறிமுகம் செய்வதற்காக.. தளத்தின் முகவரி

http://mahalukshmiv.wordpress.com/

தளத்தின் பெயர் : இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்

இது என் நெடு நாளைய கனவு! அறிவியல் சார்ந்த பதிவுகளை எளிய தமிழில் பாமரருக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கவே இந்த தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன்… நிறைய பதிவுகளை பதித்து நான் படித்த படிப்புக்கும், என் தாய் மொழியாம் தமிழுக்கும் பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கையோடு தொடங்குகிறேன்… உங்கள் அனைவரின் மேலான ஆதரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கிறேன்! அத்தளத்தில் என் முதல் பதிவு நான் படித்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் படிப்பை சார்ந்தது. அந்த பதிவின் முகவரி இதோ ,

http://mahalukshmiv.wordpress.com/2014/12/19/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D/

images (5)

 

10 thoughts on “பதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்

  1. நன்றி சொல்லி உங்கள் அன்பை வெளிப்படுத்தி விட்டீர்கள். அதைப் பிரதிபலிக்க என்ன சொல்லலாம் என்று யோசித்ததில் வார்த்தைகள் வந்து விழ மறுக்கிறது. நன்றிக்கு நன்றி சொன்னால் அது சரியாகாது. அப்ப என்ன தான் சொல்வது யோசித்தேன்……. என் வயது எனக்குத் துணை வந்தது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்புக் கலந்த ஆசிகள் பல மஹா. இந்தத் தளத்திலும், அறிவியல் தளத்திலும் வழக்கம் போல் அசத்துங்கள் . இதோ உங்கள் அறிவியல் தளத்திற்கு செல்கிறேன்.

  2. நன்றி…

    உங்களது எண்ணம் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…

    அந்த தளத்தையும் தொடர்கிறேன்…

  3. நூறு பதிவுகளுக்கு எங்களின் மனமார்ந்த ஆசிகளூம் பாராட்டுக்களும் உங்கள் புதிய வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள். படித்து பின்னூட்டம் போடுகிறேன் நிறைய எழுதுங்கள் உங்கள் எண்ணங்களை ரசிக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைக்கட்டும்

    • நன்றி விஜிகுமாரி மேடம்! உங்கள் ஆசிகள் எங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.. நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையோடு தான் புதிய தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். இதை படித்து நாலு பேர் பயனடைந்தால் அதுவே பெரிய புண்ணியம் மாதிரி தான் 🙂

  4. உங்கள் திறமை தான்
    உங்கள் வலைப்பக்கம்
    எங்களை ஈர்த்தது…
    உங்கள் படைப்பின் திறன்
    எங்களைக் கருத்திட வைத்தது…
    இந்த நூறு போதாது
    பல்லாயிரம் பதிவுகளைத் தொடர்ந்து பதியுங்கள்
    நாம் தொடர்ந்து ஒத்துழைப்போம்!
    மேலும் பல வெற்றிகளைக் குவிக்க
    எனது வாழ்த்துகள்!!

    • நன்றி யார்ல்பாவணன் சார்! உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது! தமிழுக்கு என்னால் முடிந்த சேவையை கண்டிப்பாக செய்வேன்! உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி !

  5. பாராட்டுக்கள்! உங்கள் பதிவுலகில் நானும் இணைய விழைகிறேன். ஊக்கத்திற்கு http://www.arivialtamilan.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s