களுக் என்று ஆரம்பத்தில் சிரித்தவரை
பார்த்து விவரம் ஏதும் அறியாமலேயே
குபுக் என்று வாய் விட்டு சிரிப்பவர்களுக்கே
நறுக் என்று உச்சந்தலையில் கொட்டப்படும்
கொசு வலை மட்டும்
இல்லையென்றால்
பசு வாலை ஆட்டிய
கதை தான் இரவினிலே!
தும்மல் வந்த பிற்பாடு
தூசி தட்ட நினைப்பது..
துன்பம் வந்த பின்னே
துலாபாரம் கொடுக்க
நினைத்தாற் போல்..
மனதுக்கு பிடிக்காதவற்றை
கண்டு கொண்டு பின் கண்டபடி
விமர்சிப்பதை விட கண்டும்
காணாமல் இருக்க பழகி கொண்டால்
யாருக்கும் எந்த கண்டமும் இல்லை!
இதி மஞ்சா?? என்று ஒரு
பீர்க்கங்காயின் தரத்தை
பற்றி என்னிடம் ஒருவர்
தெலுங்கில் வினவ நானும்
எனது பாணியில் பதில் அளித்தேன்
.
.
.
.
பிச்சா தெரியும்
பிஞ்சா என்று!
யப்பா…
ஒரு quarter தான் பா இருக்கு
ஒரு half கூட இல்ல
நாலு full சாயுங் காலத்துக்குள்
கொண்டு வந்து என் வீடு சேர்த்தா
உனக்கு புண்ணியமாக போகும்…
இது குடிகாரியின் புலம்பல் அல்ல
மினரல் வாட்டர் கேன்காரனிடம்
ஒரு குடித்தனக்காரியின் புலம்பல்!
நியாபகம் வந்த நொடியே
அக்காரியத்தை செய்ய
சோம்பல் பட்டு நாளை
நாளை என்று தள்ளி
போடும் மனது நம்பகமற்றது!
5:13 முப இல் நவம்பர் 29, 2014
எந்த விதமாக பாராட்டுவது என்றே தெரியவில்லை. எப்படிதான் யோசனைகள் வரதோ திரும்பத்,திரும்ப ஒவ்வொன்றும் மனதில் வட்டமிடுகிரது. சிரிக்கிரது மட்டும் இல்லே.சிந்திக்கவும் செய்யலாம். அன்புடன்
5:38 முப இல் நவம்பர் 29, 2014
வாங்க காமாட்சி அம்மா! சிரிக்க வைப்பது மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கிறாய் என்று நீங்கள் உரைத்தது கேட்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! மிக்க நன்றி அம்மா 🙂
6:28 முப இல் நவம்பர் 29, 2014
சிந்திக்க வைக்கும் சிரிப்பு வரிகள் ஹைகூ கவிதையானாலும் ஹைடெக் ஆக இருக்கிறது மஹா சபாஷ் தொடருங்கள்
3:57 முப இல் திசெம்பர் 1, 2014
மிக்க நன்றி விஜிகுமாரி மேடம்! உங்கள் கருத்துரை மனதுக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கின்றது 🙂
4:45 பிப இல் நவம்பர் 30, 2014
பசு வால் ஆட்டும் கதை…! ஹாஹாஹா…!
3:58 முப இல் திசெம்பர் 1, 2014
இப்போ உள்ள கால கட்டத்துக்கு இப்படி வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்! நன்றி ஆறுமுகம் சார் 🙂
9:00 முப இல் திசெம்பர் 1, 2014
தூசிக்கும் துலாபாரத்திற்கும் இப்படி ஒரு சம்பந்தமா? பேஷ் பேஷ்!
குடித்தனக்காரியின் quarter, half, full புலம்பல் தூள்!
பீர்க்கங்காய் கூட உங்கள் கவிதையில் ரசிக்க வைக்கிறது.
எல்லா நகைச்சுவை பாக்களும் வழக்கம்போல ரசிக்க வைத்தன.
மேலும் மேலும் சிரிப்பு வெடிகள் வந்த வண்ணம் இருக்கட்டும்!
பாராட்டுக்கள்!
10:31 முப இல் திசெம்பர் 1, 2014
வாங்க ரஞ்சனி அம்மா! இடைவிடாது கொடுக்கும் ஊக்கத்திற்கு முதற்கண் என் நன்றிகள்! மேலும் மேலும் சிரிப்பு வெடிகள் தொடர்ந்து கண்டிப்பாக வெடிக்கும்! வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂
12:08 பிப இல் திசெம்பர் 4, 2014
பசுவால் வெகு சிறப்பு
2:47 பிப இல் திசெம்பர் 4, 2014
ஹா..ஹா.. நன்றி பாண்டியன் அண்ணா 🙂