அன்றைய பொழுது நன்றாக தான் விடிந்தது. நேற்றைய தினம் Gas புக் செய்ய சொல்லி இருந்தது நினைவில் வர கணவரிடம் அது பற்றி கேட்டேன். அவரும் எங்கள் Gas Agency விநியோகம் செய்திருந்த நோட்டீசை என்னிடம் நீட்டினார். அதில் வாடிக்கையாளர் சேவைக்காக Indianoilcorporation IVRS நம்பர் புதிதாய் அறிமுகம் செய்திருப்பதை அறிவித்து இருந்தது .மனது நிம்மதி பெருமூச்சு விட்டது . இனி வீட்டில் இருந்த படியே எந்த நேரமும் கேஸை புக் செய்து கொள்ளலாம் என்று மனது குதூகலித்தது. கணவரிடம் நோட்டீஸை காட்டி ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு நிமிடத்தில் கேஸை புக் செய்தேன்.
புக் செய்தாயிற்று… இருந்தும் sms எதுவும் வரவில்லையே என்ற மனக்குறை வாட்டி வதைத்தது . திரும்ப திரும்ப அந்த நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டிருந்த எண்ணுக்கு டயல் செய்து டயல் செய்து Gasbookingstatus என்னவென்று சரி பார்த்து கொண்டேன் . புக் செய்த ஒரிரு நாளில் நான் புக் செய்ததை உறுதி படுத்தும் விதமாக sms உம் வந்து சேர்ந்தது . அதை என் கணவரிடம் ஒரு முறை காட்டி மன உவகை கொண்டேன்!
தினம் தினம் நான் அந்த நம்பருக்கு டயல் செய்வதும் அவர்கள் நாட்களை கவுன்ட் டவுன் செய்து கொண்டே வருவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு வழியாய் அந்த பத்து நாள் அவஸ்தை முடிந்து கேஸை அவர்கள் விநியோகம் செய்ய வேண்டிய நாளும் வந்தது. நானும் காலையிலிருந்து மாலை வரை குட்டி போட்ட பூனை போல் நிலை கொள்ளாமல் வழி மேல் விழி வைத்து காத்து கிடந்தேன் . ஒரு வழியாய் மாலையில் வந்து சேர்ந்தது . ஆனால் வந்தது கேஸ் அல்ல கேஸ் விநியோகம் செய்து ஆகி விட்டது என்ற sms. ஐயகோ! இது என்ன கொடுமை என்று மனம் ஆர்ப்பரித்தது.
கணவரிடம் இதை பற்றி முறையிட அவர் நாளை காலை வரை காத்திரு.. அதற்கு பின்பும் வர வில்லை எனில் என்ன ஏது என்று நேரில் சென்று விசாரிக்கலாம் என்று ஆசுவாசப்படுத்தினார். அன்று இரவு உறக்கம் பிடிக்கவில்லை. அடுத்த நாள் காலை முதல் வேலையாய் கேஸ் விநியோகம் செய்பவர்களிடம் நேரில் சென்று விசாரித்ததில் அவர்கள் எங்கள் booking status ஐ எடுத்து பார்த்து விட்டு நீங்கள் இதுவரை booking எதுவும் செய்யவில்லை என்று உரைக்க என் கணவர் எரிமலை ஆகி விட்டார். உடனே என் கைபேசியை தொடர்பு கொண்ட அவர் இதை கோபமாக குறிப்பிட்டு எங்கள் கஸ்டமர் நம்பரை கேஸ் புக்கை பார்த்து சொல்ல சொன்னார். நானும் சொன்னேன்.. அதன் பின்னே தான் தெரிந்தது நான் அந்த நோட்டீசில் பால் பாயிண்ட் பேனா வைத்து your gas number என்று குறிப்பிட பட்டிருந்த இடத்தில் எழுத பட்டிருந்த ஏதோ ஒரு எண்ணுக்கு புக் செய்திருந்தது தெரிய வந்தது.
ஒரு கேஸை ஒழுங்கா புக் பண்ண தெரியாதா ????? நான் அந்த நோட்டீஸை கணவர் கையில் குடுத்த அன்று பல முறை திருப்பி திருப்பி கேட்டது நினைவில் வந்தது. இந்த நம்பர் புதியதாய் இருக்கிறதே.. இது தானா .. எந்த மாற்றமும் இல்லையே… ஒரு வேளை sms booking புதியதாய் ஆரம்பித்து இருப்பதால் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இந்த ஐந்து இலக்க எண்ணை அலாட் செய்திருப்பார்களோ???? இப்படி பலவாறு யோசித்து கணவரின் தலையாட்டலுக்கு பின்னே தான் கேஸ் புக் செய்தேன் . இப்போ தவறு நடந்தவுடன் பழி எல்லாம் என் மேல். கண்ணை கட்டி காட்டில் விட்டாற் போல் இருந்தது . இந்த தடவை என் மேல் நம்பிக்கை அற்று போய் அவரே கேஸ் புக் செய்தார்.
திருப்பி முதலில் இருந்தா?? ஏற்கனவே பத்து நாட்கள் ஓடி போய் விட்டது . இன்னும் பத்து நாட்கள் காத்து கிடக்க வேண்டும். இனி தலை கீழாய் நின்றாலும் ஒன்றும் ஆவதற்கு இல்லை . கேஸும் ஆடி அசைந்து ஒருவாறு பத்து நாட்கள் கடந்த பின்னே வந்து சேர்ந்தது.
அந்த கேஸ் வந்து ஐந்து நாட்களில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த கேஸ் தீர்ந்து போனது . உடனே நானும் என் கணவரும் சேர்ந்தே முடிவெடுத்து உடனே அடுத்த கேஸை புக் செய்யும் முயற்சியில் இறங்கினோம் . ஆரம்பத்தில் உடனே அடுத்த கேஸை புக் செய்ய முடியுமோ என்று சந்தேகமாக தான் இருந்தது.. ஆனால் அக்கம்பக்கம் விசாரித்ததில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அனைவரும் உறுதி அளிக்க அடுத்த கேஸுக்கு புக் செய்தோம்.
எந்த பிரச்சனையும் இல்லாமல் புக்கிங் ஆனது . இன்னும் பத்து நாட்களில் கேஸ் வந்து சேரும் என்ற sms உம் வந்து சேர்ந்தது . பத்து நாட்கள் வரை அதை பற்றி பெரிதாய் ஒன்றும் யோசிக்கவில்லை. பத்து நாட்கள் கடந்து சென்ற பின்னர் எந்த sms உம் வரவில்லை , கேஸ் வருவதற்கான அறிகுறியும் இல்லை . என்ன ஏது என்று திருப்பி கேஸ் விநியோகம் செய்பவரிடம் விசாரிக்க அவர்களோ நீங்கள் கேஸ் இந்த மாத ஆரம்பத்தில் ஒன்று டெலிவரி எடுத்திருக்கிறீர்கள், பின்னர் இதே மாதத்தில் திரும்பவும் கேஸ் புக் செய்தது தவறு , அதனால் நாங்கள் நீங்கள் புக் செய்ததை கேன்சல் செய்து விட்டோம் என்று உரைக்க நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம்.
இந்த தடவையுமா மனம் வெறுத்து போனது . அடுத்து கேஸ் புக் செய்ய இன்னும் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும் . அந்த 15 நாட்கள் கழிந்த பின்னே புக் செய்து விட்டு அதன் பின்னே ஒரு 10 நாட்கள் காத்திருக்க வேண்டும் . இப்படி காத்து காத்து இலவு காத்த கிளி மாதிரி ஆகி விடுவோமோ என்று பயமாக இருந்தது. முதல் தடவை தெரியாமல் செய்த தவறால் அடுத்தடுத்து எவ்வளவு பிரச்சனை! அதற்காக வாழ்க்கை வெறுத்து போய் விட முடியுமா?? அவசர கால திட்டம் ஒன்று தீட்டினேன்.
அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் யார் யாருக்கு இந்த மாதம் கேஸ் டெலிவரி எடுத்திருக்கிறார்கள் , யார் யார் போன மாதம் டெலிவரி செய்திருக்கிறார்கள் என்று பார்த்ததில் ஒருவர் போன மாதம் எடுத்திருந்தது தெரிய வந்தது. அவருடைய gas agency புக் செய்த நான்கு நாட்களிலேயே டெலிவரி செய்து விடுவார்கள் என்பதும் தெரிய வந்தது. எனக்கு ஒரு கேஸ் சிலிண்டர் 35 நாட்கள் வரை வரும் . அவர்களுக்கு ஒரு கேஸ் 60 நாளுக்கு வரும் என்பதால் அவர்கள் எனக்கு கேஸ் புக் செய்து வாங்கி தருவதாகவும், அதன் பின்னே நான் எங்களுடைய கேஸ் agency யில் அவர்களுக்கு புக் செய்து வாங்கி தருவதாகவும் முடிவானது. அந்த அண்டை வீட்டுக்காரர் அன்றைய தினமே எங்களுக்கு கேஸ் புக் செய்து விட்டார் !
ஒரு மூன்று நாட்கள் கடந்த பின்னே என் கைபேசிக்கு ஒரு sms வந்தது . என்னவென்று பார்த்தால் நாங்கள் கேன்சல் ஆகி விட்டது என்று எங்கள் கேஸ் ஏஜென்சியால் அறிவிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் நாளை காலை எங்களுக்கு வந்து சேரும் என்று அதில் குறிப்பிட பட்டிருந்தது. இதற்கு நாங்கள் சந்தோஷப்படவா இல்லை துக்கபடவா என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலையும் வந்தது.. சிலிண்டரும் வந்தது… எனக்கும் வந்தது .. எனக்காக புக் செய்த அண்டை வீட்டுக்காரருக்கும் வந்தது. இருந்ததோ ஒரு காலி கேஸ் சிலிண்டர். என் விதியை நொந்து கொண்டே உபயோகத்தில் இருந்த கேஸ் சிலிண்டரை கழட்டி குடுக்கும் முயற்சியில் நான் இறங்க, என் இன்னொரு அண்டை வீட்டுகாரர் ஆபத்பாந்தவரா ய் எங்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்த காலி சிலிண்டரை தற்சமயத்தில் கொடுத்து உதவினார். இப்போ ஒன்றுக்கு இரண்டு சிலிண்டர் கைவசம் வந்து சேர்ந்து விட்டது. ஒன்றை எங்களுக்காக கேஸ் புக் செய்த அண்டை வீட்டுக்காரருக்கு தூக்கி கொடுத்து விட்டு பெருமூச்சு விட்டவாரே வந்து நாற்காலியில் அமர்ந்தேன்.
இனிமேல் இந்த கேஸை எப்படி அதிக நாள் வருமாறு உபயோகிப்பது என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தேன் . ரொம்ப நாளாய் உபயோகம் செய்யபடாது இருந்த Induction அடுப்பு நியாபகத்துக்கு வர அதை தூசி தட்டி சமையல் அறையில் ஒரு ஓரமாய் வைத்தேன். அதற்கு ஏற்ற பெரிய த்ரீ பின் பிளக் இல்லாமல் இருந்தது . அதற்கு ஏற்றாற் போல் ஒரு conversion plug வாங்கி வர செய்து ஒரு வழியாய் Induction அடுப்பை ஆன் செய்தோம் . நான்கு நாட்கள் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் தான் சென்றது. போன மச்சான் திரும்ப வந்த கதையாய் பிரச்சனை Conversionplug வழியாக வந்தது. அப்போ அப்போ தீப்பொறி சுவிட்ச் போர்டில் வந்து கொண்டிருந்தது. அய்யய்யோ என்று நினைத்து கொண்டிருக்கும் போதே சுவிட்ச் இறுகி ஆன் செய்யவே முடியாத நிலைமைக்கு போனது!
உஸ்ஸ்.. ஷப்பா … இந்த சிகப்பு உருளையால் வந்த பிரச்சனை என்ன விடவே விடாது போல . பார்க்கலாம் இந்த சனி பெயர்ச்சிக்கு அப்புறமாவது இந்த பிரச்சனை தீருதா என்று … ஹலோ எலக்ட்ரீசியன்??? என் திட்டங்கள் அது வரை தீட்டப்பட்டு கொண்டே தான் இருக்கும்…………
6:45 முப இல் நவம்பர் 10, 2014
சிலசமயம் இப்படித்தான் ஆகிவிடுகிறது, மஹா! மற்றவர்கள் அனாயாசமாகச் செய்யும் வேலைகள் நமக்கு இழுத்தடிக்கும். இந்த சனிப்பெயர்ச்சியுடன் உங்கள் இந்த சிகப்பு விடுகிறதா பார்ப்போம்!
இத்தனை இன்னலிலும் விடாத நகைச்சுவை ரசிக்க வைத்தது.
பாராட்டுக்கள்!
10:15 முப இல் நவம்பர் 11, 2014
நன்றி ரஞ்சனி அம்மா! சில நேரம் அறியாமல் தவறுகள் நடந்து விடுகின்றன! கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம் 🙂 நல்ல ஒரு அனுபவம்!
7:52 முப இல் நவம்பர் 10, 2014
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
10:16 முப இல் நவம்பர் 11, 2014
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரரே!
5:20 பிப இல் நவம்பர் 15, 2014
ஒரு எட்டு நடந்து போய் பதிஞ்சிட்டு வந்திடுங்க. படிக்கவே பாவமாக இருக்கிறது
9:48 முப இல் நவம்பர் 17, 2014
ஆமாம் அண்ணா! இவ்வளவு அல்லோகல படுவதற்கு பேசாம ஒரு எட்டு நடந்து போய் புக் பண்ணிட்டு வந்துடலாம் போல 🙂
1:28 பிப இல் நவம்பர் 19, 2014
எங்கள் வீட்டிலும் இப்படி நடந்திருக்கிறது. ஒரு சிலிண்டர் வந்த உடனேயே மறுநாளே புக்கிங் செய்து விட்டோம். அடுத்த நான்காம் நாள் சிலிண்டர் வந்து விட்டது. டெலிவரி கொடுக்க வந்த ஊழியருக்கு சந்தேகம். ஏற்கனவே டெலிவரி கொடுத்த தேதியை பார்க்க, நான் அசடுவழிந்தபடி ‘ஆமாம் இப்பத்தான் வாங்கினோம்’ என்று சொல்ல, அவர், ‘அப்படியெல்லாம் புக் செய்யக்கூடாது. சிலிண்டர் வாங்கி 30 நாட்கள் கழித்துத்தான் புக் செய்ய வேண்டும். இந்த சிலிண்டர் தர மாட்டேன்’ என்று சொல்லி, தூக்கிச்சென்று விட்டார். அதே அனுபவம் உங்களுக்கும்…!
4:33 முப இல் நவம்பர் 24, 2014
வாங்க ஆறுமுகம் சார்! எங்களுக்கு இங்கே 21 நாள் களித்து புக் பண்ண அனுமதிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கிடையாது என்று Indane இணையதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்! எது உண்மை என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். எனக்கு இப்போ கை கொடுத்து உதவுவது Induction அடுப்பு மட்டுமே! உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள்!
12:19 பிப இல் திசெம்பர் 19, 2015
haha செம காமடி! இங்க எல்லாம், காசு குடுத்து காஸ் வாங்குவோம், அதாவது, இத்தினை தான் என்று லிமிட் இல்லை. ஒரு சிலிண்டர் இவ்வளவு, ஒரு காஸ் refill இவ்வளவுன்னு இருக்கு. என்கிட்டே ரெண்டு சிலிண்டர் இருக்குன்னா பாத்துகோங்க.. ஏன் அங்கே மட்டும் அப்படி?
4:49 பிப இல் திசெம்பர் 19, 2015
யப்பா.. இது போன போன போன மாசம்.. இப்போ எல்லாம் நிலைமை தலை கீழா மாறிடுச்சு.. புக் பண்ண அடுத்த நிமிஷம் வந்துடுது 😀
1:15 முப இல் திசெம்பர் 20, 2015
hahaha, but what i asked is you cannot buy it like normal item?
1:55 முப இல் திசெம்பர் 20, 2015
Yes u can buy it! But u have to pay more! Not available for market price 🙂
2:02 முப இல் திசெம்பர் 20, 2015
i see ok!