எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -49

9 பின்னூட்டங்கள்

தன் கைவரிசையை பிறன் மனைகளில்

காட்டி விலை மதிப்புள்ள பொருட்களை

கவர்ந்து செல்பவன் கள்ளன்..

தன் கைவரிசையை விலை மதிப்புள்ள

பொருட்களில் காட்டி பிறர் மனம்

கவர்ந்து செல்பவன் கொல்லன்!

usb

எட்டி நின்று விட்டால்

எட்டி விட கூடியவை கூட

எட்டாது போய் விட கூடும்!

tumblr_mrlptr0Mpm1qc4uvwo1_400

தான் தேடிய பொருள்
தன் கண்ணெதிரே
இருந்த போதும்
கண்டெடுக்க தெரியாமல்
கண்ணு மண்ணு தெரியாது
தேடி அலைந்து திரிவர்
தன் துணைவி அதை
கையிலெடுத்து
கொடுக்கும் வரை…..
தன் இத்தகைய குண நலன்
தெரிந்து தான் கணவன்
உஷாராக தன் மனைவியை
என் கண்ணே என்று
அவ்வப்பொழுது விளிக்கின்றனரோ!

05

நான் சொல்வதற்கு எல்லாம்
என் கணவர் அதை ஆமோதிக்கும்
விதமாய் பலமாய் தலை ஆட்டுவார்…
பெருமை பட்டுக்க வேண்டியது தான
என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது
இருந்தும் பொரும தான் தோணுது
பின்னே நான் ஒரு விஷயத்தை ஆரம்பித்து
சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவசர அவசரமாய்
தலையை ஆட்டிவிட்டு தன் வேலையில்
மூழ்கி விட்டால் பொருமாமல் என்ன செய்வது!

Screen-shot-2013-08-30-at-6.04.27-PM

நமக்காக யாரு எவரு எவை
காத்து கிடக்குதோ இல்லையோ
நாமே நம் கையால் ஆரம்பித்து
விட்டு பாதியிலே விட்டு சென்ற
வேலைகள் அத்தனையும் நம்
வருகைக்காக நிச்சயமாக வழி
மேல் விழி வைத்து காத்து கிடக்கும் !

busy-wife

9 thoughts on “சில எண்ணங்கள் -49

  1. —–
    தன் கைவரிசையை பிறன் மனைகளில்

    காட்டி விலை மதிப்புள்ள பொருட்களை

    கவர்ந்து செல்பவன் கள்ளன்..

    தன் கைவரிசையை விலை மதிப்புள்ள

    பொருட்களில் காட்டி பிறர் மனம்

    கவர்ந்து செல்பவன் கொல்லன்!

    கொன்னுட்டீங்க போங்க!

  2. ஆழ்ந்த கருத்துக்கள் அருமையான கவிதை பாராட்டுக்கள்

  3. எட்டி நின்று விட்டால் எட்டி விடக்கூடியவை கூட எட்டாது போய்விடும். ஸரியாகச் சொன்னாய். எல்லாமே இப்டிதான். அன்புடன்

  4. கள்வன், கொல்லன் ஒப்பீடு அசத்தல்.கணவன் மனைவியை கண்ணே என்று ஏன் அழைக்கிறார் என்று புரியவைத்து விட்டீர்கள்.
    உங்களைப் போல் காதிலேயே வாங்காமல் நான் சொல்வதை எல்லாம் சரி என்று சொல்பவரைப் பற்றி நானும் பொருமுவது உண்டு. அது எங்கும் நடப்பது என்பது திருப்தியளிக்கிறது. நம் வேலைகள் நமக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடப்பது நல்ல சிந்தனை.

  5. ஹிஹி தலைய ஆட்டுறது நல்லா இருக்கு, அப்பாவும் அம்மா எதாவது சொன்னா, சரி சரி எண்டு சொல்லிட்டு போயிருவாரு, அவ்வளவு பயம் ஹிஹி

rajisivam -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி