எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ஒரு கல்லிலே மூன்று மாங்காய்

14 பின்னூட்டங்கள்

dental002

 

வலி வரும்

 

வரையில்

 

 

 

யாரும்

 

 

 

பல் ஆஸ்பத்திரிக்கு

 

 

 

வழி தேடுவதில்லை !

 

 

 

ஆம்! நீங்கள் மனதில் நினைத்தது சரி தான் ! இது தொல்லை குடுத்த பல்லை பற்றிய பதிவு தான் !இன்னிக்கு நேத்து இல்லை பல்லு வலி நாலு வருஷத்துக்கு முந்தியே ஆரம்பித்து விட்டது ! பல் வலியை சரி செய்ய நேரமே இல்லை.. சிறு குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு எங்கனம் பல்லை சரி செய்வது.இருந்தும் ஒரு வார கடைசியில் பிள்ளைகளை கணவரின் பொறுப்பில் விட்டு விட்டு பல் மருத்துவரை பார்க்க சென்றேன்!

 

பல் மருத்துவருக்கு என் பல்லின் மீது இருந்த அக்கறையை காட்டிலும் பர்ஸின் மீதே அக்கறை அதிகமாக இருந்ததை அவரின் பேச்சு வெளிபடுத்தியது… வெட்டியாக அவருக்கு கன்சல்டேஷன் பீஸ் அழுது விட்டு கிளம்ப எத்தனிக்கையில் அவருடைய கெட்ட நேரமோ என்னவோ பல் கூச்சத்தை கட்டுபடுத்தும் sensitivity toothpaste sample ஒன்றை குடுத்து அனுப்பினார்! எனக்கு அது நன்றாகவே வேலை புரிந்தது ! அது தற்காலிகமாக வலியை நிறுத்தியது நிறுத்தியது . அது நிரந்தர தீர்வு அல்ல என்பதை மனம் அறிந்திருந்தும் மருத்துவரிடம் செல்லாமல் நாட்களை கடத்த துணை புரிந்தது !

 

 

 

ஆச்சு இப்போ நாலு வருஷம் ஆச்சு ! அதே வலி வழி தேடி வந்து சேர்ந்தது. இப்போதும் நேரம் இல்லை தான்..இருந்தும் கணவரின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு அதிகாலை பல் மருத்துவரை தேடி சென்றேன் ! நாங்கள் இப்போது இருக்கும் இடத்தில் தடுக்கி விழுந்தா ஏதேனும் மருத்துவரின் காலில் தான் விழ வேண்டும் . அத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றன வீட்டை சுற்றி ! வீட்டுக்கு அருகாமையிலேயே ஒரு நல்ல பல் மருத்துவமனை இருந்தது ! பொறுமை சிறிதும் இன்றி மருத்துவருக்காக காத்து கிடந்தேன்! ஒரு வழியாக 11.30 மணிக்கு மருத்துவர் வந்து சேர்ந்தார். முதல் ஆளாய் நுழைந்த என்னை கொஞ்சம் கூட நேரத்தை வீணடிக்காமல் பல்லை ஆராய்ந்து பல்லை புடுங்குவதற்கு நாள் குறித்தார் ! கூடவே கை நிறைய ஆன்டிபயாடிக் மாத்திரைகள். ஒரு நாள் களித்து வர சொல்லி விட்டு அடுத்த ஆளை கவனிக்க ஆயுத்தமானார்..

 

பல் பிடுங்க மருத்துவர் குறித்து குடுத்த நாளும் வந்தது . நான் காலையிலேயே மருத்துவரை கைபேசியில் தொடர்பு கொண்டு பல் பிடுங்குவதற்கான நேரத்தை பேசி வைத்து கொண்டேன் . நான் கண்டிப்பாக அவரிடம்தெரியப்படுத்த நினைத்த விஷயம் நான் 1 மணிக்கு என் வீடு வந்து சேர்ந்து விட வேண்டும் என்பதை தான். ஸ்கூல் விட்டு வரும் குட்டி பையனை காக்க வைத்து விட கூடாது என்ற எண்ணத்தில் . ஒரு வழியாக 11.30 மணிக்கு மருத்துவமனையை அடைந்தேன் . இதற்கு முன் வந்த போது எழுதி குடுத்த antibiotic மாத்திரைகளை ஒழுங்காக எடுத்து கொண்டேனா என்பதை நிச்சய படுத்தி கொண்ட பின்னர் ஊசியும் , Local Anesthetic இரண்டையும் வாங்கி வர செய்தனர் . ஊசியை கண்டவுடன் இது வரையில் இல்லாத நடுக்கம் உடம்பு முழுவதும் பரவியது! நான் மருத்துவரை காண வேண்டிய நேரமும் வந்தது ….

 

my-dentist_o_841414

 

பயத்தோடு உள்ளே நுழைந்தேன் ! வாயை திறக்க செய்து ஊசியை நாலாபக்கமும் குத்தி தள்ளினர்! பின்னே சும்மாவா..இரண்டு பல் அல்லவா பிடுங்க வேண்டும் .ஊசியை போட்டு முடித்த பின்னர் 10 நிமிடங்கள் காக்க வைத்தனர். அப்பாடா கொஞ்ச நேரம் என்ன தனியா விட்டால் சரி தான் என்று நானும் வெளியே சென்று அமர்ந்தேன் . முதலில் ஒன்றும் தோன்றவில்லை … கொஞ்ச கொஞ்சமாய் மருந்து தன் வேலையை செய்ய ஆரம்பித்திருந்தது . என் வலது பக்க மூக்கின் வழியாய் மூச்சை விடுவது சிரமமாக இருந்தது . பின் வலது பக்க கண் இமைகள் வேலை புரியவில்லை …. சம்பந்தம் இல்லாமல் இருமல் வந்து தள்ளியது! இப்படியாக ஊசி போட்ட இடத்தை சுற்றிலும் உணர்ச்சியற்று மரத்து போனது .திரும்பவும் உள்ளே அழைத்தார் பல் மருத்துவர் …

 

funny-giraffe-tongue-out-dentist-inject-novocaine-pics

 

மருத்துவர் மிகுந்த அக்கறையோடு விசாரித்தார் .. பல்லை சுற்றிலும் மரத்து விட்டதா இல்லை இல்லையா ?? நான் கடிகாரத்தை பார்த்து கொண்டே பதிலளித்தேன் ‘ மரத்து போனாற் போல் தான் இருக்கிறது ‘ என்று … மருத்துவருக்கு என் மீது இருந்த அக்கறை கூட எனக்கு என் மீது இல்லை . பையன் ஸ்கூல் விட்டு வருவதற்கு முன்னே வீடு சென்று விட முடியுமா என்ற நினைப்பு மட்டுமே மனது முழுவதும் . மருத்துவர் என் மீது நம்பிக்கை இல்லாதவராய் ஒரு முறை எதையோ வைத்து என் பல்லை அடித்து பார்த்தார் . நான் எந்த ஒரு உணர்ச்சியும் முகத்தில் காட்டாததை கண்டு நம்பிக்கை வந்தவராய் பற்களை பிடுங்க ஆயுத்தமானார் …

novocainecurve

 

 

நான் என் கண்களை முடிந்த மட்டும் சிக்கென்று மூடி கொண்டேன் . என்ன மாய மந்திரம் செய்தாரோ இரண்டு பற்களையும் இரண்டு நிமிடங்களுக்குள்ளே பிடுங்கி விட்டார் . சரி முடிந்தது தொல்லை என்று ஆசுவாசப்படுத்த நினைத்த நிமிடத்தில் இடப்பக்கம் இருந்த ஒரு சொத்தை பல்லை பிடுங்க ஆயுத்தமானார் .. ஐயையோ..இந்த பக்கம் ஊசியே போடவில்லை என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அதையும் வலியின்றி போட்டு தள்ளினார் . ஆக மூன்று பல்லை போட்டு தள்ளி அந்த மூன்று இடங்களிலும் பஞ்சை வைத்து அடைத்து 20 நிமிடத்துக்கு வாயை திறக்கவோ வாயில் இருப்பதை துப்பவோ முயற்சி செய்ய வேண்டாம் என்ற அறிவுரையோடும் , மாத்திரைகளோடும் வழி அனுப்பினர் ….

 

பல்லு புடுங்கியாச்சு ! இனி வீட்டுக்கு போகலாம்னு பாத்தா நல்ல மழை.. நடந்து போனா பத்தே நிமிடத்தில் வீட்டை அடைந்து விடலாம் .. ஆனால் என் வாயை அடைத்து கொண்டிருந்த பஞ்சுகளுக்கு என்னை விட மோசமான ஒரு பொறுமை ! ஒரு ஆட்டோ வை கை காட்டி நிறுத்தினேன். நிறுத்தினால் போதுமா…. வீட்டு விலாசம் சொல்ல வேண்டாமா? வாயை திறந்து என் வீடு இருக்கும் சந்தின் பெயரை சொன்னேன்.. சத்தியமா நான் என்ன சொல்லுகிறேன் என்று எனக்கே புரியவில்லை! பின் ஆட்டோகாரருக்கு மட்டும் எப்படி புரியும். இதிலே அவருக்கு சந்தேகம் வேற… ‘நீங்கள் ஏன் கன்னத்தை இப்படி உப்பி வைத்திருக்கிறீர்கள் ‘ என்று கேட்டு விட்டு ஒரு வெடி சிரிப்பு வேற.. எனக்கு மட்டும் அந்த தருணத்தில் பேச முடிந்திருந்தால் ‘என் வேண்டுதல் ‘ என பதில் அளித்திருப்பேன்! எல்லாம் என் நேரம். பின் கையாலேயே பேசி அதாவது வழி காட்டி ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தேன். வந்ததும் முதல் வேலையை என் வாயை கிளியர் செய்து விட்டு கண்ணாடி

முன் நின்றேன்! கும்கி லஷ்மிமேனன் அஞ்சான் சமந்தா போல் ஆக்கி வைத்திருந்தார் என் முகத்தை … அதாவது கன்னங்கள் உப்பி வாய் கோணி ஒரு வழி ஆக்கி வைத்திருந்தார்… முகம் முழுக்க மரத்து போய் தான் இருந்தது…

 

எனக்கு நெடு நாள் கனவு இந்த பல்லு புடுங்குறது! ஆனால் எனக்கே எனக்காக நேரம் செலவழிக்க மனதும் கிடையாது … என் அக்காவிடம் சொல்வதுண்டு ‘போனோமோ.. இருக்கிற சொத்தை பற்களை புடுங்குனோமா… வீட்டுக்கு வந்தோமா ‘ என்று இருக்கணும். சரி நாலு வருஷமா வலியை எப்படி சமாளித்தாய் என்று யாருக்கேனும் டவுட் வந்துச்சு என்றால் தெரிந்து கொள்ளுங்கள்… சொத்தை பல் இருக்கும் இடத்தில் இரண்டு கிராம்புகள் வைத்து கடிக்க பழகி கொள்ளுங்கள்.இல்லை என்றால் கொய்யா மரத்தின் இளம் குருத்து இலைகளாய் பறித்து வலி இருக்கும் இடத்தில் வைத்து மெல்லுங்கள்… இரண்டுமே மிக சிறந்த வலி நிவாரணி! ஆனால் தற்காலிகமானவை தான்..

 

3 சொத்தை பற்களை ஒரே தடவையில் புடுங்கி விட்டு வருவது பெரிய சாதனை அல்ல தான்… இருந்தாலும் மற்ற பற்களுக்கு சொத்தை பரவாமல் காத்து கொள்ள ஒரு முயற்சியை நான் எடுத்திருக்கிறேன் என்பதில் ஒரு ஆத்ம திருப்தி ! அவ்வளவே!

 

14 thoughts on “ஒரு கல்லிலே மூன்று மாங்காய்

  1. நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் பல்லைப் பிடுங்கிக் கொண்டு வர வேண்டும் போலிருக்கிறது.

    பல்லை பிடுங்கிய இடத்தில் bridge கட்டலையா?

  2. பிடுங்கிய பற்களைப் பார்த்தீர்களா இல்லை என்பதுதான் எங்களோட டவுட்டு

    • ஆமாம் சார்! நல்லா கண்ணை விரித்து பார்த்தேன்! அதை பார்த்த பின்பு தான் சற்றே மயக்கம் வந்தாற் போல் இருந்தது . எல்லாம் அந்த பற்களின் Rootsize பார்த்து தான்…. ஆஹா! எவ்வளவு பெரியதாய், நீளமாய் இருக்கிறது என்று வியந்தேன் 🙂

  3. The best remedy is to press the mirchi on the affected teeth-you will get instant relief for next six months and in some cases the teeth will fall without extracting-vishwanath

  4. mirchi? திரு விஸ்வநாத், மிளகாயை வைக்க வேண்டுமா? காரத்தில் நாக்கே வெளியே விழுந்துவிடுமே!

  5. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

  6. அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

    வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
    http://wp.me/pTOfc-b9

  7. பல்லினால் ஒரு பதிவு. கெட்டிக்காரி.
    நான் வராட்டி தாங்களாவது வலைக்கு வரக் கூடாதா?
    அதை விட வேசட்டைல் விருதிற்கு
    மிக இனிய வாழ்த்துடா…
    அன்புடன்.
    வேதா. இலங்காதிலகம்.

  8. “ஊசியை கண்டவுடன் இது வரையில் இல்லாத நடுக்கம் உடம்பு முழுவதும் பரவியது!” ஹி.ஹி…

    தயவு செய்து பற்களில் கவனம் எடுங்கள் மேடம்.பற்களே வாழ்வின் ஆதாரம். தற்போது செயற்கைப் பற்கள் வந்தாலும் உயிருள்ள பற்கள் போல் வருமா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s