எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -47

8 பின்னூட்டங்கள்

யாரும் எகிறி குதித்து அடித்து
விட நான் உறி அல்ல….
நூல் இழைகளை கொடுத்தவுடன்
துணி நெசவு செய்ய நான் தறி அல்ல..
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து
கேட்ட வரம் அருள நான் பரீ அல்ல..
என் பகுத்தறிவுக்கு சரியென தோன்றும்
வழி நடப்பதே என் வாழ்க்கை நெறி!
ItsMyLifeLogo

நானும் என் கணவரும்
ஒற்றுமையாய் செயல்படும்
விஷயங்களில் ஒன்று ..
மெகா ஆபர் போடும் மெகா
மால்களில் முதல் ஆளாய்
நுழைந்து ரொம்ப பொறுமையாய்
நிதானமாய் காம்போ ஆபர்களாய்
பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து
தள்ளு வண்டியை நிரப்பி
தள்ள முடியாமல் தள்ளி
பில் கவுன்டர் வரை வந்து
அனுமார் வால் போல் நீண்டு
கொண்டே செல்லும் வரிசையை
பார்த்தவுடன் ஒரு ஓரமாய்
அந்த தள்ளு வண்டியை அம்போ
என்று விட்டு விட்டு வீட்டுக்கு
நடையை கட்டி விடுவோம்!!!
images (6)

மாதுளம் பழம் உடைத்தால்
அதிலிருந்து முத்துக்கள் தெறிக்கும்
இதுவே வழக்கில் இருக்கும் பேச்சு…
ஆனால் உடைத்தவுடன் முகத்தில்
தெறித்து விழுவது என்னவோ
மாணிக்கங்களே….
இவ்வுண்மை யாவரும் உணர்ந்து
கொள்ள மட்டுமே… கெடுக என்
ஆயுள் என பாண்டிய மன்னன் போல்
யாரும் மயங்கி சரிய அல்ல!

images (7)

ஏற்கனவே வீட்டு பராமரிப்பு தொகையை
உரிய தியதியில் கட்டிய பின்னரும் கூட
கட்டி விட்டீர்களா.. நாளை நாள் கடைசி என்று
வீட்டு பாதுகாவலர் அழைப்பு மணியை
அழைத்து கேட்டு விட்டு பின் நியாபகம்
வந்தவராய் சொல்லுவார்.. ஹி .. ஹி
மரச்சி போயி.. அவரு மறந்துவிட்டாராம்…
ஆனா உண்மையில் நான் தான் ஒரு நொடி
மரிச்சி போயி பயத்தில் ………
thumb

மழையில் பனிக்குழை
இனித்தது நேற்று
நாளை கசக்கும்
என்பதை அறிந்தும்!!
happy-quotes-1840

பசியோடு தட்டின் முன் அமரும்
குழந்தைகளுக்கு சுட சுட பரிமாறிய
பின்னே இன்னும் ரெண்டு தோசை போடு
இன்னும் கொஞ்சம் சட்னி போடுனு
சொன்னால் காதுக்கு எவ்வளவு இனிமையாக
இருக்கும்.. அதை விட்டுவிட்டு எனக்கு Doraemon
போடு என்று ஒருவன்.. எனக்கு சுட்டி டீவீ
ஜாக்கிசான் போடு இது இன்னொருவன்….
6a00d8341c696953ef00e54f0c0c898833-640wi

பையன் : அம்மா இன்னிக்கு பூஜை
என்பதால் Doraemon ஸ்பெஷல்
எபிசோடா போட்டு தள்ளுரான்
அம்மா : வரலஷ்மி பூஜைக்கும் Disney
சேனலில் Doraemon ஸ்பெஷல்
எபிசோடுக்கும் என்னடா சம்பந்தம்..
என்ன கொடுமை இது!

images (8)

வெள்ளை நிற லெக்கிங்ஸ்
அணிந்து நடக்கும் பூவையர்
கால்களை நோக்கும் போதெல்லாம்
ஜகன் மோகினி பிசாசுகள்
அநியாயத்துக்கு நினைவில்
வந்து அச்சுறுத்துகின்றன!!
images (5)

8 thoughts on “சில எண்ணங்கள் -47

  1. ரொம்பவே ரஸித்தேன் பெண்ணே!!!!!!!!!!!!! அன்புடன்

    • வாங்க காமாட்சி அம்மா! ஒரு வல்லமையாளர் , சமையல் கலையில் வல்லுநர், ஒரு அன்பான தாய் என் பதிவை படித்து ரசிப்பதற்கு நான் குடுத்து வைத்திருக்க வேண்டும் ! மிக்க நன்றி அம்மா!

  2. வணக்கம்
    சகோதரி

    நீண்டநாட்களின் பின் வருகிறேன் தங்களின் பக்கம்.
    இரசிக்கும்படி மிக ஆருமையாக உள்ளது
    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  3. கடைசிக் கவிதையில் வாய்விட்டுச் சிரித்தேன் தோழி

  4. படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி!

  5. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s