எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -46

7 பின்னூட்டங்கள்

தன் அழும் குழந்தையை
சமாதானம் செய்ய
அக்குழந்தையின் தாய்
ஜன்னல் கம்பிகளின் ஊடே
தன் கைகளை நீட்டி என்னை
சுட்டி காட்டி சொல்லுவாள்
பாரு பாரு Aunty பாரு….
வாழைப்பழம் நீட்டாத
குறை ஒன்று தான்..
வேடிக்கை!!
can-stock-photo_csp13240812

வலியும் வேதனையும்
நெஞ்சில் சுமந்திருந்தும்
யாதொரு தருணத்திலும்
வதனத்தில் வலியதொரு
புன்னகையை தவழ
விடுபவரின் நெஞ்சம் வலியது!!
download

அரிசி பருப்பு வேக வைப்பதாகட்டும்
பயிறு காய்கறிகள் அவிப்பதாகட்டும்
இப்படி எதை எடுத்தாலும் சமயத்தை
மையம் கொண்டு செய்வதே சமையல்!!

Cooking_times

ஆ….. ஐயோ………
போதும் போதும் அம்மா ……
.
.
.
டேய் நான் இன்னும் நகத்தை
வெட்டவே ஆரம்பிக்கவில்லை!

download (1)

நம்மை தன் வசப்படுத்தும்
இஷ்டங்களை துறக்க முற்படின்
கஷ்டங்கள் தீர்ந்து வாழ்க்கை
நம் வசப்படும்!
images

போதும் என்று உரைத்தால்
அவள் முறைப்பாள்….
குமட்டுதுனு சொன்னா
குமட்டுலேயே குத்துவாள்
இருந்தும் தன் மனதொப்ப
பாதி காலி செய்த தட்டை நீட்டி
அவளின் மனதை நிறைப்பான்
அம்மா..Thank You.. என்றுரைத்து!!
images (1)

பத்துக்கு பதி என்றார்
இருபதுக்கு இருபதி என்றார்
முப்பதுக்கு முப்பதி என்றார்
இதை மனதில் கொண்டு
நாப்பதி என்று கேட்ட
ஆட்டோ ஓட்டுனரிடம்
நாற்பது ரூபாய் நீட்டினால்
முறைத்து பார்க்கிறார்
ஐம்பது ரூபாயாம்!
காப்பி அடிச்சதே அடிச்சேள்
திருந்த அடிக்கப்படாதோ..
கொச்சை தெலுங்கு!!
Telugu-Telugu

கைக்குட்டை கைக்கு
எட்டாமல் கண்கட்டு
வித்தையாய் மாயாமாகும்
மர்மத்தை ஆராய்ச்சி
செய்ததன் முடிவில் மேலும்
நான்கு கைக்குட்டைகள்
இருந்த இடம் தெரியாமல்
கை விட்டு போச்சு……..
images (2)

மயில்கள் அகமகிழ்ந்து
தோகையை விரிக்கும்
மானிடர்களும் அகமகிழ்ந்து
கண்களை விரிக்கின்றனர்
கார்மேகத்தை காணும்
பொழுதெல்லாம்….
நிலைமை அப்படி!!
images (3)

விழுந்து விழுந்து கவனிப்பாள் மனைவி
தன் மீது கணவர் எதற்கும் எரிந்து விழாதவரை!!

images (4)

பையன் : அம்மா! நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்!
அம்மா : வீட்டில் இருந்து கிளம்புவதற்கு
முன் இப்படியா சொல்லிட்டு போவாங்க ??
பையன் : சரி… கிளம்பிட்டேன்!
அம்மா: டேய்….
பையன் : சரி …. கிளம்பி போறேன்!
அம்மா : போயிட்டு வரேன்னு சொல்லுடா!!!!
F89EE261A9F2173FFD3FFA642F243_h302_w400_m2_bblack_q99_p99_cUBIINJTa

7 thoughts on “சில எண்ணங்கள் -46

 1. கேடிக்கை, புன்னகை, வாழ்க்கை – பிரமாதம்…

  மற்றவை மிகவும் ரசனை…

 2. உங்கள் கவிதைகளில் நான் மிகவும் ரசித்தது சமையலையும், கொச்சை தெலுங்கையும். இதைப்போல் ரொம்பவும் தெரிந்த மாதிரி கன்னடம் பேசிய கதையெல்லாம் இருக்கிறது.நல்ல ரசனையுடன் வந்து விழுந்திருக்கின்றன கவிதைகள்.

  கவிதைகளைவிடவும் tags வார்த்தைகள் அதிகமோ? இது தான் அருமையான மார்கெட்டிங் உத்தி. கண்டிப்பாக நிறைய வாசகர்கள் கண்ணில் படும்.

  • வாருங்கள் ராஜி மேடம்! ஆக வெகு சீக்கிரமே ரொம்பவும் தெரிந்தது போல் நீங்கள் கன்னடம் பேசியவை எல்லாம் ஒரு முழு நீள நகைச்சுவை பதிவாக வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!! மார்கெட்டிங் உத்தியா?? நீங்க வேர ராஜி மேடம்.. நான் ஒரு முழு சோம்பேறி 😀

 3. //////
  ஆ….. ஐயோ………
  போதும் போதும் அம்மா ……
  .
  .
  .
  டேய் நான் இன்னும் நகத்தை
  வெட்டவே ஆரம்பிக்கவில்லை!
  //////

  சூப்பரு

 4. உங்கள் தளம் இன்று வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது.
  இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/4.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s