எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -45

10 பின்னூட்டங்கள்

அப்பா : என்னடா.. பக்கத்து வீட்டில ஒரே ஆட்டம்,பாட்டம் ,

கொண்டாட்டம்னு ஒரே குதுகூலமா இருக்கு.. எதுவும் விசேஷமா??

பசங்க : ஆமா விஷேசம் தான்ப்பா… அவுங்க அப்பா ஊருக்கு போயிருக்காங்களாம்…

அப்பா : !!!!!

download

 

 

தெளிந்த பின்னே
மட்டுமே தெரியும்
இது நாள் வரை அடி
மனதில் எத்தனை
கசடுகள் என்று!!

matter-sedimentation

 

ஒரு திசை காட்டும் கருவி
ஒரு பூத கண்ணாடி
ஒரு கையடக்கமான
தீவட்டி வெளிச்சம்
மகனே…. நீ பள்ளிக்கு வரலாறு
படிக்க செல்கிறாயா இல்லை
வரலாறு படைக்கவா??
MagneticPencilbox

 

images

 

நிலை தட்டுமேயானால் தலை
குனிந்து செல்வது உத்தமம்….
நிலை தட்டு தடுமாறினால்
தலை குனிவு நிச்சயம்..

download (1)

 

இன்றாவது தன் மனதில்
உள்ளதை வாடிக் கிடக்கும்
பூமியிடம் கொட்டி விட
தீர்மானித்து மோடம் போட்டு
காத்து கிடக்குது வானம்!!

images (1)

 

 

பயிரிட்ட பின்னே
விதை விதையாக
முழித்து கொண்டு
நில்லாமல் விளைந்து
நிற்பதே தானியத்தின் சிறப்பு….
அஃதே வயிறிடுவதற்கு முன்பும்!

 

images (2)

நம்ம கிட்ட இருக்கிற
சிம்கார்ட கொண்டு போய்
ஏர்டெல்காரன் கிட்ட குடுத்தா
அதை வெட்டி மைக்ரோ சிம்கார்டா
ஆக்கி தருவானா அம்மா??
ஏலேய்.. அது என்ன ஆடா!
இல்லை.. சிம்கார்டா!!

airtel sim

 

இன்று அதிகாலை
நீ இருண்டு இறுக்கம்
கொண்டு என் மனதை
வானில் பறக்க விட்டு கண்கள்
பணிக்க செய்தது அத்தனையும்
நடிப்பா??????????
வருவது போல் வந்து பின்
வராது சென்ற மழை

images (3)

 

வீர தீரமாய் சுழன்றடிக்கும் சார காற்றே
உன்னுள் ஈரம் இல்லாதவரை உள்ளம் மயங்காது
உடல் சோர்ந்த மயக்கம் மட்டுமே சாத்தியம்!

1317239764_374060252671_35721797671_3848601_1699688_n

 

வெடிச் சிரிப்புடன் கைகளை
டாட்டா காட்டியவாரே வெளியே
ஓடும் குட்டி பையனை பிடிக்க பின்னங்கால்
பிடறியில் அவன் பின்னே ஓடுவாள்..
சற்று முன்னே அவன் சேட்டை
தாங்காமல் தர தரவென இழுத்து
வீட்டின் வெளியே விரட்டிய தாய்..

can-stock-photo_csp9703834

 

ஒருவரை நம்பி கை கொடுப்பதை விட
நம்பிக்கை அளிப்பது சாலச் சிறந்தது!!

charitable-giving

 

கவனிக்க மறந்து விடும் நேரங்களில் தனக்கு
தானே தூசியால் அரிதாரம் பூசி நம் கவனத்தை
கவர்ந்து விடுகிறது நம் வீட்டு சாமான்கள்!!

images (4)

 

அடுத்தவர் பொருளை
ரசித்து நோக்குவது சலனம்
உரிமம் கொள்ள நினைப்பது சபலம்..

images (5)

 

 

10 thoughts on “சில எண்ணங்கள் -45

 1. நான் வந்து ரொம்ப நாளாச்சு பெண்ணே. அபாரமாக எழுதியிருக்கிராய். அன்புடன்

  • வாங்க காமாட்சி அம்மா!! நானும் ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதி இருக்கிறேன் அம்மா ! படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா 🙂

 2. எல்லாமே
  சிறந்த கருத்துகளைக் கூறும்
  பதிவு என்பேன்!

  • வாங்க சார்! நெடு நாள் களித்து ஒரு பதிவை சமர்ப்பித்துவிட்டேன் என்பதை விட உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தது :மனது 🙂

 3. அனைத்தும் அருமை…

  கசடுகள், நம்பிக்கை அளிப்பது – சிறப்பு…

 4. இந்த முறை அனைத்துமே ஸ்ட்ராங் காபி மாதிரி உள்ளன. 👍

 5. இத்தனை எண்ணங்களா? வரலாறு படிக்கிறானோ இல்லையோ உங்கள் மகன் வரலாறு படைக்கப் போகிறான் . அதற்கு என் ஆசிகள் பல.
  மழை பற்றிய கவிதைகள் மழையாய் பொழிந்த வண்ணம் இருக்கின்றீர்களே. அனைத்துக் கவிதைகளும் ஸூப்பர் மஹா.

  • நன்றி ராஜி மேடம்! ஒரு ஆசிரியர் கையால் ஆசி வாங்குவது என்றால் சும்மாவா… உங்கள் ஆசிகள் என் மகனுக்கு கிடைத்து அவன் உண்மையாகவே வரலாறு படைக்கட்டும் 🙂 மழை தான் ஏமாற்றி கொண்டே இருக்கிறது !!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s